பொது செய்தி

இந்தியா

பாட்னா கல்லூரியில் பர்ஹாவுக்கு தடை: அணிந்தால் அபராதம்

Updated : ஜன 25, 2020 | Added : ஜன 25, 2020 | கருத்துகள் (39)
Advertisement

இந்த செய்தியை கேட்க

பாட்னா : பாட்னாவில் பெண்கள் கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவிகள் பர்ஹா அணிந்து வர நிர்வாகம் தடை விதித்துள்ளது. மீறி அணிந்து வருபவர்களுக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





பாட்னாவில் உள்ள ஜெ.டி., மகளிர் கல்லூரியில் புதிய ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கல்லூர் நிர்வாகி மற்றும் முதல்வர் கையெழுத்திட்ட நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இஸ்லாமிய மாணவிகள் யாரும் கல்லூரி வளாகத்திற்குள் பர்ஹா அணியக் கூடாது. இந்த கட்டுப்பாட்டை மீறி பர்ஹா அணிபவர்களுக்கு ரூ.250 அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கட்டுப்பாட்டை கொண்டு வர கல்லூரி நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் பரிந்துரை குறித்த விபரங்கள் ஏதும் வெளியிடப்படாமல் இருந்து வந்தது.





சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் இந்த கட்டுப்பாட்டை மாணவிகள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய ஆடை கட்டுப்பாடு மத நம்பிக்கைகளை சீர்குலைக்கும் முயற்சி என மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பற்றி கல்லூரி முதல்வர் ஷியாமா ராயிடம் கேட்ட போது, பகுத்தறிவை கொண்டு வரும் நோக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், பர்ஹா தடை உத்தரவை திரும்பப் பெறுவதாகவும் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumzi - trichy,இந்தியா
26-ஜன-202002:16:01 IST Report Abuse
kumzi அரேபிய பாலைவன நாடுகளில் காற்றோடு கலந்து வரும் மணல் தூள்களிலிருந்து முகத்தையும் உடம்பையும் பாதுகாப்பதற்காக பெண்களுக்காக உருவாக்கப்பட்ட ஆடை இதை ஆசிய ஆப்ரிக்க பெண்களுக்கும் அணிய செய்து கோமாளிகளாக ஆக்கி விட்டுட்டானுங்க மூர்க்கனுங்க இருந்தாலும் அரேபிய ஆண்கள் உடுத்தும் ஆடையை அடிமை மூர்க்கனுங்க உடுத்த தடை ஆனாலும் இந்த பர்தா லோக்கல் மூர்க்கனுங்க குண்டு வைக்க உதவியா இருக்குது
Rate this:
Share this comment
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
26-ஜன-202014:38:47 IST Report Abuse
Malick Rajaகுறைந்தபட்ச அறிவுடைய எவருக்கும் விளக்கம் சொல்ல முடியும் அதை KUMZHI. போன்றவைகள் அறிய வாய்ப்பே இருக்காது என அவைகளுக்கும் நன்றாகவே தெரியும் ....
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
26-ஜன-202001:49:25 IST Report Abuse
ரத்தினம் இந்து பெண்கள் தாலிகட்டிக்கொள்வது அடிமைத்தனம்னு சொல்லி தாலி அறுத்த சொரியாரின் பகுத்தறிவு இதுக்கு என்ன சொல்லுது? இதுக்கு போலி திராவிட கும்பல் மூச்சு விட மாட்டார்களே. ஸ்டாலின் , வீரமணி, திருமா, வைகோ, அருணன் எல்லோரும் புர்காவை பெண்ணடிமைத்தனம் என்று எதிர்த்து போராட்டம் நடத்தட்டும் பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
25-ஜன-202022:59:33 IST Report Abuse
jagan "இஸ்லாமிய மாணவிகள் யாரும்" - ஏன் மதம் குறிப்பிட வேண்டும்? யாரும் முகத்தை மறைக்க கூடாது என்று சொல்லாமே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X