சிஏஏ.,வுக்கு எதிராக 3வது மாநிலமாக ராஜஸ்தானிலும் தீர்மானம்

Updated : ஜன 25, 2020 | Added : ஜன 25, 2020 | கருத்துகள் (56)
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஜெய்பூர் : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து, தற்போது ராஜஸ்தான் சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


சிஏஏ.,வுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் காங்., கேரளாவை போல் காங்., ஆளும் மாநிலங்களிலும் சிஏஏ.,வுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும், இது மத்திய அரசுக்கு விடுக்கப்படும் செய்தியாக அமைந்து, சிஏஏ., குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வைக்கும் எனவும் மாநில அரசுகளை சமீபத்தில் கேட்டுக் கொண்டது. இந்நிலையில் கேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து 3வது மாநிலமாக ராஜஸ்தானும் சிஏஏ.,க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
ராஜஸ்தான் சட்டசபையில் பல்வேறு பா.ஜ., உறுப்பினர்கள் சிஏஏ.,க்கு ஆதரவாக முழக்கமிட்டனர். இதனால் ஏற்பட்ட அமளிக்கு இடையிலும் சிஏஏ.,வுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. சிஏஏ.,வுக்கு எதிராக தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் கூறி இருந்தும் அதற்கு எதிராக காங்., ஆளும் மாநிலங்கள் ஒவ்வொன்றாக தீர்மானம் நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
26-ஜன-202008:46:34 IST Report Abuse
a natanasabapathy Congress thesa virotha shakthi yenbathu ithil irunthu therikirrathu congress katchiyai verodu azhikka vum
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
26-ஜன-202006:12:39 IST Report Abuse
blocked user அப்படியென்றால் கள்ளத்தனமாக இந்தியாவுக்குள் வந்தவர்களுக்கு ராஜஸ்தானில் நிலம் ஒதுக்கி வேலை தருவார்களா?
Rate this:
Share this comment
Cancel
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
26-ஜன-202005:08:48 IST Report Abuse
Palanisamy T மதச் சார்பற்றக் கொள்கையில் காங்கிரஸ் கட்சிக்கு அந்த அளவிற்கு நம்பிக்கையும் மரியாதையுமிருந்தால் 1971-ல் வங்க தேசம் உருவாக்கப் பட்டபோது இந்திய நாட்டிற்கு நன்றிக் கடனாக நாளை இந்திய துணைக் கண்டத்தில் நம்பிக்கையோடு அமைதி நிலவவும் இவர்கள் புதிய வங்க தேசத்தை மதச் சார்பற்ற நாடாக அறிவிக்கக் கோரியிருக்கலாமே. காஷ்மீரில் தீவிரவாதமும் மத வாதமும் வன்முறையும் கொஞ்சம் கொஞ்சமாக தணிந்திருக்கும் ஒருப் புதிய நாட்டை உருவாக்குவதென்பது ஐ நா விலும் முடியாதக் காரியம். இருந்தும் வல்லரசு நாடான அமெரிக்காவையும் மீறி, ரசியாவின் ஆதரவோடுதான் வங்க தேசத்தை உருவாக்கினார்கள். ஆனால் வங்க தேசத்தையும் பாகிஸ்த்தான் நாடுப் போன்று ஒரு மதத் தீவிர நாடாக இயங்கவும் ஆதரித்தார்கள். எல்லாம் இந்தியாவின் சிறும்பான்மை மக்களின் வாக்கு வங்கிக்காக. நாடு எக்கேடுக் கெட்டாலென்ன. எல்லாம் பதவி ஆட்சி அதிகார ஆசைதான். இந்த காங்கிரஸ் கட்சியா மதச் சார்பற்றக் கொள்கைப் பற்றிப்பேசுவது. என் இனிய தமிழக மக்களே, இவர்களிடம் கொஞ்சம் விழிப் போடு இருங்கள்.
Rate this:
Share this comment
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
26-ஜன-202007:52:51 IST Report Abuse
Palanisamy Tசட்ட சபையில் போட்டத் தீர்மானம் நிறைவேற்றப் படவேண்டுமென்றால், அன்று ஜெயா ஆட்சியில் இலங்கை மேல் போர்க் குற்றம் கொண்டு வரப் பட்டு அதை மத்திய அரசுப் பார்வைக்கு கொண்டுச் சென்றாரே அப்போது மத்தியில் இருந்தது திமுக தோழமைக் கட்சியான காங்கிரஸ்தானே ஆட்சியிலிருந்து. அந்தத் தீர்மானம் அப்போது என்ன வாயிற்று? குப்பைக் கூடையில் போட்டு விட்டார்களா? இதையும் மீறி தமிழக மக்களின் உணர்வுகளை கொஞ்சமும் மதிக்காமல் ஐ நா மனித உரிமை ஆணையத்தில் மத்திய அரசு இலங்கைக்கு மிக ஆதரவாகச் செயல்பட்டார்கள். இதை என்னவென்றுச் சொல்ல போரில் செத்து மடிந்த மக்கள் ஒன்றா இரண்டா? ஐ நா வின் அதிகாப்பூர்வ கணக்குப் படி சுமார் 40000 மக்கள். அப்படியென்றால் உண்மையில் மடிந்தது எத்தனை? இப்போது குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக கையொப்பம் நடத்தும் திமுக வும் காங்கிரஸ் உட்பட அதன் தோழமைக் கட்சிகளும் மக்களுக்கு என்னச் சொல்ல போகின்றார்கள். தமிழர்களென்றால் இவ்வளவு மரியாதையா?...
Rate this:
Share this comment
Jaya Ram - madurai,இந்தியா
28-ஜன-202016:13:24 IST Report Abuse
Jaya Ramஅந்த மக்கள் இங்கே திமுகவுக்கு ஒட்டு போடுகிறவர்களா அப்படித்தானே தமிழன்னு சொல்லுவோம் ஆனால் எங்களுக்கு தேவை பதவி பணம் போன்ற இத்தியாதி இத்தியாதிகளே இதைப்போய் பெரிசா குற்றம் சாட்டுரீங்களே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X