டில்லி தேர்தல் களத்தில் 164 கோடீஸ்வரர்கள்

Updated : ஜன 25, 2020 | Added : ஜன 25, 2020 | கருத்துகள் (5)
Advertisement
delhi, election, crorepatis, rich, டில்லிதேர்தல் , கோடீஸ்வரர்கள்

புதுடில்லி : கடந்த 2015 டில்லி சட்டசபை தேர்தலில் 143 கோடீஸ்வரர்கள் போட்டியிட்ட நிலையில், வரும் பிப்., 08 ல் நடக்க உள்ள தேர்தலில் 164 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த முறை 50 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளதாக 13 வேட்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களில் 6 பேர் ஆம் ஆத்மியையும், 4 பேர் காங்கிரசையும், 3 பேர் பா.ஜ.,வையும் சேர்ந்தவர்கள். பணக்கார வேட்பாளர்களில், முதல் நான்கு இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் உள்ளனர்.


கோடீஸ்வர வேட்பாளர்களின் விவரம்:


வேட்பாளர் - கட்சி - போட்டியிடும் தொகுதி - சொத்து மதிப்பு
தரம்பால் லக்ரா - ஆம் ஆத்மி - முந்த்கா- 292.1 கோடி
பரமிலா டோகாஸ் - ஆம் ஆத்மி-ஆர்கேபுரம்- 80.8 கோடி
ராம் சிங் நேதாஜி - ஆம் ஆத்மி- பாதர்புர்- 80 கோடி
ராஜ் குமார் ஆனந்த் - ஆம் ஆத்மி - படேல் நகர் - 76 கோடி
பிரியங்கா சிங் - ஆர்கேபுரம்- காங்- 70.3 கோடி
ப்ரம் சிங் தன்வர் - பா.ஜ.,- சதர்புர் - 66.3 கோடி
அனில் கோயல்- பாஜ.,- கிருஷ்ணா நகர்-64.1 கோடி
பிரகாஷ் ராணா-பா.ஜ.,- பிஜ்வாசன்-57.4 கோடி
தவதி சந்தேலா - ஆம் ஆத்மி- ரஜோரி கார்டன்-56.9 கோடி
நரேஷ் பல்யான்- ஆம்ஆத்மி- உத்தம்நகர்-56.3 கோடி


பல மாடல் நகைகள்


ஆம் ஆத்மியின் சந்தேலா, தன்னிடம் பல மாடல்களில் நகைகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் மற்றும் குடும்பத்தினருக்கு சொந்தமாக ரூ.2.3 கோடி மதிப்பு கொண்ட 5.9 கிலோ தங்கம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ வெள்ளி உள்ளதாக தெரிவித்துள்ளார்.


ரூ.1 கோடிக்கும் கீழ் சொத்துகள் கொண்டவர்களில் ஆம் ஆத்மி சார்பில் 19 பேரும், பா.ஜ., சார்பில் 16 பேரும், காங்கிரஸ் சார்பில் 11 பேரும் போட்டியிடுகின்றனர்.


ஏழை வேட்பாளர்கள்


அதேபோல் ரூ.1 லட்சத்திற்கு குறைவாக சொத்து உள்ளதாக 5 பேர் தெரிவித்துள்ளனர்.
ஏழை வேட்பாளர்களில் முதலாவது இடத்தில், ராஜேந்திர நகரில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் ராக்கி துஷீத், தன்னிடம், வங்கி கையிருப்பு, ரொக்கம் என ரூ.55,574 மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளார். தன்னிடம், நகை, வாகனம், நிலம் சொத்து ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதற்கு அடுத்த இடத்தில் பா.ஜ.,வின் ராஜ் குமார் தில்லான் உள்ளார். கோண்ட்லி தொகுதியில் போட்டியிடும் அவர், தனது சொத்து மதிப்பு ரூ.55,900 எனக் கூறியுள்ளார். கல்யாண்புரி பகுதியில் வசிக்கும் அவர், சிறு கடை வைத்துள்ளார். தன்னிடம் அசையா சொத்து இல்லை என தெரிவித்துள்ளார். ரொக்கமாக ரூ.50 ஆயிரமாகவும், வங்கி கணக்கில் ரூ.1000 மற்றும் 100 கிராம் வெள்ளி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

3வது இடத்தில், ஆம் ஆத்மியின் ராகி பிட்லன் உள்ளார். கடந்த 2015ல் தனக்கு ரூ.18 ஆயிரம் மதிப்பு சொத்து உள்ளதாக தெரிவித்திருந்த அவர், தற்போது ரூ.40 ஆயிரம் ரொக்கம் உட்பட ரூ.76,421 மதிப்பு சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.


ஏழை வேட்பாளர்கள் விவரம்வேட்பாளர் - கட்சி - போட்டியிடும் தொகுதி - சொத்து மதிப்பு
ராக்கி துஷீத் - காங்., ராஜேந்திரா நகர் - 55,574
ராஜ்குமார் திலான்-பா.ஜ.,- கோண்ட்லி-55,900
ராகி பித்லன்-ஆம்ஆத்மி-மங்கோல்புரி- ரூ.76.421
சுபம் ஷர்மா- காங்- துக்லுகாபாத்- 1 லட்சம்
துர்கேஷ் பதக்- ஆம் ஆத்மி- கரவால் நகர்-1.1 லட்சம்
சரிதா சிங்- ஆம் ஆத்மி- ரோதாஸ் நகர் - 7 லட்சம்
சஞ்சிவ் ஜா- ஆம் ஆத்மி- புராரி-9.6 லட்சம்
சோம் தத்- ஆம்ஆத்மி- சதார் பஜார்-11 .9 லட்சம்
ரிதுரா ஜா - ஆம் ஆத்மி- கிராரி-14 லட்சம்
பாவ்னா கவுர்- ஆம் ஆத்மி-பாலம்- ரூ.14.2 லட்சம்


சராசரி வயது


கடந்த 2015 தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர்களின் சராசரி வயது 43.1 ஆக இருந்தது, தற்போது 47.3 ஆக உள்ளது. அதேபோல், கடந்த 2015 ல் பா.ஜ., வேட்பாளர்களின் சராசரி வயது51.7 ஆக இருந்தது தற்போது, 52.8 ஆக அதிகரித்தது. அதேநேரத்தில், காங்கிரஸ் வேட்பாளர்களின் சராசரி வயது 53.3 லிருந்து 51.2 ஆக குறைந்துள்ளது.


இளவயது வேட்பாளர்கள்


40 வயதுக்கும் கீழ் ஆம் ஆத்மி 20 பேரையும், காங்கிரஸ் 12 பேரையும், பா.ஜ., 6 பேரையும் தேர்தலில் நிறுத்தியுள்ளது. துக்லாகாபாத் தொகுதியில் போட்டியிடும், காங்கிரஸ் கட்சியின் துசீத் சுபம் சர்மா (29), கோண்ட்லி தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மியின் குல்தீப் குமார் (30) ஆகியோர் இளவயது வேட்பாளர்கள்.


அதிக வயது உடையவர்கள்


சதாரா தொகுதியில் போட்டியிடும் காங்கிரசின் நரேந்தி ரநாத்(75), ஷாகுர் பஸ்தி தொகுதியில் போட்டியிடும் எஸ்சி வாட்ஸ்(74) மற்றும் ஷதாரா தொகுதியில் போட்டியிடும் ராம் நிவாஸ் கோயல்(72) மற்றும் கிருஷ்ணா நகரில் களமிறங்கியுள்ள அசோக் குமார் வாலியா(71) ஆகியோர் அதிக வயதுடைய வேட்பாளர்கள்.

51- 60 வயதுக்கு உட்பட்டவர்களில் பா.ஜ.,மற்றும் காங்கிரஸ் தலா 25 பேரையும், 41- 50, 51-60 வயதுள்ளவர்களில் தலா 21 பேரை ஆம் ஆத்மி களமிறக்கியுள்ளது.

கட்சி- சராசரி வயது
ஆம் ஆத்மி - 47.3
பா.ஜ.,,- 52.8
காங்கிரஸ் - 51.2

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
26-ஜன-202018:06:36 IST Report Abuse
Malick Raja இது போன்ற நிலைகள் தவிர்க்க கூடிய ஒன்றே அதாவது MLA.பதவிக்கு தனி பாதுகாப்பு, அமைச்சருக்கு பாதுகாப்பு அத்துடன் சம்பளம் மிகவும் குறைந்த அளவில் : MLA.க்கு 15,000.00 மந்திருக்கு 25,000.00 முதல்வருக்கு 35,000.00 மட்டும் என்றும் ஒரு காவலர் மட்டும் பாதுகாப்பில் இருப்பர் மக்களுடன் இருந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே சாதாரணமானவர்கள் பதவிக்கு வந்து மக்கள் பணியாற்றுவார்கள் அதில்லாமல் இப்போதிருப்பது போல சலுகைகள் மேலோங்கி இருந்தால் இது போன்ற நிலைகள் மென்மேலும் வளரும் ஊழலும் பெருகும் .. மக்களுக்கு சேவை செய்கிறோம் என்ற பெயரில் கொள்ளைக்கூட்ட கம்பெனிகளாக அரசியல் கட்சிகள் இருப்பது நாட்டின் வளர்ச்சியை தடுக்கவே செய்யும் .
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
25-ஜன-202021:59:29 IST Report Abuse
Krishna Few Crores are Justified Due to High property prices BUT Money above 10Crores Must be Investigated Thoroughly Incl. Wealth Tax Payments
Rate this:
Share this comment
Cancel
25-ஜன-202019:47:57 IST Report Abuse
chandran தேவையில்லாத விசயம். சாதாரணமாக டவுனில் சொந்த வீடுள்ள எல்லோரும் கோடீஸ்வரர்கள்தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X