பொது செய்தி

இந்தியா

இஸ்ரோவால் நாடு பெருமிதம் : ஜனாதிபதி உரை

Updated : ஜன 25, 2020 | Added : ஜன 25, 2020 | கருத்துகள் (2)
Advertisement

புதுடில்லி: 71 வது குடியரசு தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களை வாழ்த்த விரும்புகிறேன் என ஜனாதிபதிராம்நாத் கோவிந்த் குடியரசு தின உரையில் கூறி உள்ளார். மேலும், இஸ்ரோவின் சாதனைகளால், நாடு பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார்.





குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.


குடியரசு தினத்தை முன்னிட்டு அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு கொண்டு வந்த புதிய திட்டங்களால் 14 கோடி விவசாயிகள் ஆண்டு தோறும் ரூ.6 ஆயிரம் வருமானம் பெறும் உரிமையை பெற்றுள்ளனர். கல்வி வளர்ச்சி அபரிமிதமாக வளர்ந்துள்ளது. ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்கும் உரிமையை பெற்றுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் சாதனைகள் குறித்து நாடு பெருமிதம் கொள்கிறது. மிஷன் ககன்யானில் இஸ்ரோ முன்னேறி வருகிறது, இந்தியா அதை உற்சாகத்துடன் எதிர்பார்க்கிறது. டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்கில் தடகள வீரர்கள் சாதனை படைப்பார்கள் என நம்புகிறேன். நீர் சேமிப்புக்கு அரசு கவனம் செலுத்தி வருகிறது.






தூய்மை இந்தியா பொதுமக்களின் பங்களிப்பால் மிகக் குறுகிய காலத்தில் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் பெருமைப்பட வேண்டியஒன்று. இது ஏழைகளின் வாழ்க்கையில் ஒளியை ஏற்றியுள்ளது. இதில் 8 கோடி பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மஹாத்மாவின் கொள்கைகள் இன்றும் பொருந்துகின்றன. நம் அரசியலமைப்பு நம் அனைவருக்கும் சில உரிமைகளை வழங்கி உள்ளது. நீதி, சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அடிப்படை ஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உறுதியுடன் இருக்க வேண்டும். இந்தாண்டு ஜப்பான் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீர்ர்கள் பதக்கம் வெல்ல வாழ்த்துகிறேன் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
25-ஜன-202021:21:58 IST Report Abuse
natarajan s ஐந்தாம் வகுப்போ எட்டாம் வகுப்போ, எல்லா நிலையிலும் சில வருடங்களுக்கு முன் தேர்வு இருக்கத்தானே செய்தது, அரசு தேர்வு என்றால் ஏன் இப்படி பயப்படுகிறார்கள் , பள்ளியில் தேர்வு என்றால் ஒவொரு பள்ளியிலும் ஒரு மாதிரி இருக்கும், பொது தேர்வு என்றால் ஒரே மாதிரி இருக்கும் , அதெற்கு குழைந்தைகளை தயார் செய்ய வேண்டுமே அன்றி எல்லாவற்றையும் எதிர்ப்பது சரியல்ல . 1965 வரை தமிழகத்தில் எட்டாம் வகுப்புக்கு ESLC (Elimentary School Leaving Certificate ) என்ற பொது தேர்வு இருந்தது , பின்னர் அது விலகி கொள்ளப்பட்டது . ஒரு தேர்வுமுறையை பரிச்சர்த்தமுறையில் செய்து பார்ப்பதில் என்ன தவறு ?
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
25-ஜன-202019:48:00 IST Report Abuse
mindum vasantham ivanga seirathellam ok anaal 5 ஆம் வகுப்புக்கெல்லாம் பொது தேர்வு வைப்பதை நீக்க வேண்டும் 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு க்கு மட்டும் பொது தேர்வு போதும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X