பொது செய்தி

இந்தியா

டி.வி.எஸ் வேணுசீனிவாசன் உள்ளிட்ட 16 பேருக்கு பத்மபூஷன் விருது

Updated : ஜன 25, 2020 | Added : ஜன 25, 2020 | கருத்துகள் (46)
Advertisement

புதுடில்லி: பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விருதுகளை அறிவித்து உள்ளது மத்திய அரசு. நாளை நடைபெறும் விழாவில் 7 பேருக்கு பத்ம விபூஷன் ,16 பேருக்கு பத்மபூஷன் விருதுகளும் 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்படுகிறது


பத்ம பூஷன் விருதுகள்

Advertisement


தமிழகத்தை சேர்ந்த சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் , டி.வி.எஸ் வேணுசீனிவாசன் விளையாட்டு துறையை பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, கோவா மாநில முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் ,தொழில் துறையை சேர்ந்த ஆனந்த்மகேந்திரா,இலக்கியம் மற்றும் கல்வித்துறை சேர்ந்த புதுச்சேரியை சேர்ந்த மனோஜ் தாஸ், வி.கே. முனுசாமி கிருஷ்ண பக்தர் உள்ளிட்ட 16 பேருக்கு பத்மபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது


பத்ம விபூஷன் விருதுகள்மறைந்த முன்னாள் அமைச்சர்கள் அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் மற்றும் ஜார்ஜ் பெர்ணான்டஸ் விளையாட்டுதுறையை சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தை சேர்ந்த அமர்சேவா சங்கத்தின் ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருதும் சமூக சேவகர் அறிவிக்கப்பட்டுள்ளது.சேலத்தில் பிறந்த எஸ். ராமகிருஷ்ணன் அமர் சேவா சங்கத்தின் நிறுவனர் ஆவார். இந்த சேவா அமைப்பின் மூலம் குழந்தைகள் மறுவாழ்வு பள்ளியை நடத்தி வருகிறார்.


பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சமூக சேவகர் ஜகதீஷ் லால் அவுஜாவுக்கு பத்மஸ்ரீ விருது.

உ.பி.,யை சேர்ந்த சமூக சேவகர் முகமது ஷெரீப்பிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது. இவர்,உறவினர்கள் அல்லாத 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சடலங்களுக்கு இறுதிசடங்கு செலவுகளை செய்தவர் முகமது ஷெரீப் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவி அளித்த பழ வியாபாரி ஹரேகலா ஹஜப்பாவுக்கும், கேரளாவை சேர்ந்த பொம்மலாட்ட கலைஞர் மூழிக்காள் பங்கஜாக்சிக்கும், மஹாராஷ்டிராவை சேர்ந்த நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்டு வரும் பப்பட்ராவுக்கும், மேற்கு வங்க மாநிலத்தில் குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை அளிக்கும் அருனாடே மண்டல் உள்ளிட்ட 21 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தை சேர்ந்த கால்நடைகளுக்கு சேவை செய்து வரும் மருத்துவர் குஷால் கன்வார்க்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்கி வரும் கர்நாடக பழ வியாபாரி ஹரே கலாஹஜப்பாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவை சேர்ந்த பொம்மலாட்ட கலைஞர் முழிக்காள் பங்கஜாக்சிக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கங்கனாராவத் , ஏக்தா கபூர், கரண் ஜாகர், பத்ம ஸ்ரீ விருது
சாசாதார் ஆச்சார்யா- கலை -ஜார்கண்ட்
யோகி ஆரோன் மருத்துவம்-உத்தரகண்ட்
ஜெய் பிரகாஷ் அகர்வால் வர்த்தகம் மற்றும் தொழில்துறை டில்லி
ஸ்ரீ ஜெகதீஷ் லால் அகுஜா- சமூக சேவை பஞ்சாப்
காஸி மாசூம் அக்தர் இலக்கியம் மற்றும் கல்வி மே.வங்கம்
குளோரியா அரைரா இலக்கியம் மற்றும் கல்வி பிரேசில்
கான் ஜாகீர் கான் விளையாட்டு மகா ராஷ்டிரா
பத்மாவதி பண்டோபத்யாய் மருத்துவம் உ.பி.,
சுசோவன் பானர்ஜி மருத்துவம் மே.வங்கம்
திகம்பர் பெஹரா மருத்துவம் சண்டிகர்.
தமயந்தி பெஸ்ரா இலக்கியம் மற்றும் கல்வி ஒடிசா
ஹிமத்தா ராம் பாம்பூஊ சமூக சேவகர் ராஜஸ்தான்.
சஞ்சீவ் பிக்சாந்தனி வர்த்தகம் மற்றும் தொழில் உ.பி.,
காபூர்பாய் எம்.பிலாக்கியா வர்த்தகம் மற்றும் தொழில்துறை குஜராத்
பாப் பிளாக்மென், பொது விவகாரம் இங்கிலாந்து
இந்திரா பிபி போரா கலை அசாம்
மதன் சிங் சவுகான் கலை சட்டீஸ்கர்
உஷாசவுமர் சமூகசேவை ராஜஸ்தான்.
ஸ்ரீ லில் பகதூர் செட்ரி இலக்கியம் மற்றும் கல்வி அசாம்
சேவங் மோடப் கோபா- வர்த்தகம் மற்றும் தொழில் லடாக்
சூஜோய் கே,.குஹா அறிவியல் மற்றும் பொறியியல் பீகார்
மித்ர பானு கவுன்டியா கலை ஒடிசா
யட்ல கோபால ராவ் கலை ஆந்திரா
டாக்டர் பெங்களூரு கங்காதர் மருத்துவம் கர்நாடகா

மேலும்தமிழகத்தை சேர்ந்த லலிதா , சிதம்பரம் சரோஜா மனோகர் தேவதாசுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharathanban Vs - tirupur,இந்தியா
26-ஜன-202015:24:44 IST Report Abuse
Bharathanban Vs இங்கு விமர்சனம் என்று கருத்து பதிவிடுபவர்கள் பலரும் மோடி மீதான வெறுப்பு என்னும் கருப்பு கண்ணாடி போட்டிருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பத்ம விருதுகளின் பட்டியலை எடுத்து பாருங்கள். அதில் சாமானியன் யாராவது இருக்கிறார்களா என்று? ஆனால் பாஜ அரசின் பத்ம விருதுகளின் பட்டியலை எடுத்து பாருங்கள். அதில் 90 சதவீதம் பேர் சாமானியர்கள், அதிலும் எந்த விளம்பர வெளிச்சமும் இல்லாமல் சாதாரண மக்களுக்காக பாடுபடுபவர்களாக உள்ளனர். கோவை முருகானந்தம், நானாம்பாள் பாட்டி முதற்கொண்டு இந்த பட்டியலில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஜாதி, மத வேறுபாடின்றி சமூக சேவகர்கள் இடம்பெற்றுள்ளனர்
Rate this:
Share this comment
Cancel
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
26-ஜன-202010:46:15 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா ஆக, வருஷா வருஷம் பத்மா புருஷனுக்கு மட்டும் அவார்டு கொடுக்கறாங்க, இந்த துர்கா புருஷனுக்கு ஒரு வெண்கல கிண்ணம் கூட இல்லையா?...ஸ்டாலின் வேதனை.
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
26-ஜன-202009:58:58 IST Report Abuse
தாண்டவக்கோன் //ஜெட்லி, சுஷ்மாக்கு விருது// ரெண்ண்டு பேரும் நாட்டுக்காண்டி செஞ்ஜெ நல்லது என்னெவாம் ?🤔
Rate this:
Share this comment
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
26-ஜன-202015:41:04 IST Report Abuse
தாண்டவக்கோன் உன்னிய இப்புடி புலம்ப விட்டது தாம்...
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
26-ஜன-202015:46:07 IST Report Abuse
dandyஈரான் சுலைமானிக்கு கொடுத்து இருக்கலாம் ..ஒடடக கூட்டங்கள் குளிர்ந்து இருக்கும்...
Rate this:
Share this comment
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
26-ஜன-202015:51:05 IST Report Abuse
தாண்டவக்கோன் ஐ என் எக்ஸ் ல ஆட்டையை போடாதது நாட்டுக்கு செஞ்ச நல்லது இல்லையா?...
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
27-ஜன-202006:36:53 IST Report Abuse
Anandan////ஜெட்லி, சுஷ்மாக்கு விருது// ரெண்ண்டு பேரும் நாட்டுக்காண்டி செஞ்ஜெ நல்லது என்னெவாம் ? // தேஷ்பக்தர்களை வெறுப்பேத்துவதே வேலையாய் இருக்கும் போல....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X