பொருளாதார சவால்களை பட்ஜெட் நிறைவேற்றுமா? அனைத்து தரப்பு மக்களும் பெரும் எதிர்பார்ப்பு

Updated : ஜன 27, 2020 | Added : ஜன 25, 2020 | கருத்துகள் (24)
Advertisement
பொருளாதார_சவால்கள், பட்ஜெட், அனைத்து, தரப்பு, மக்கள், எதிர்பார்ப்பு

நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரும் சவால்களை சந்தித்து வரும் நிலையில், 2020 - 2021ம்
நிதியாண்டுக்கான பட்ஜெட், இவற்றை நிறைவேற்றும் அளவுக்கு இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், வரிச் சலுகை உட்பட, நுகர்வை ஊக்குவிக்கும் வகையிலான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இருக்குமா என, அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

மத்திய பட்ஜெட், வரும், பிப்., 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், இரண்டாவது முறையாக, பா.ஜ., அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இதுவாகும். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர்
நிர்மலா சீதாராமனுக்கும் இது இரண்டாவது பட்ஜெட்டாகும்.

நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவி வரும் நிலையில், இந்த பட்ஜெட் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை, 350 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற மோடியின் இலக்குக்கு, இந்த பட்ஜெட் உறுதுணையாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.நாட்டின் பொருளாதாரம் சந்திக்கும் பல முக்கிய சவால்களுக்கு, இந்த பட்ஜெட்டில் பதில் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.நாடு சந்தித்து வரும் முக்கிய சவால்கள்:


தொழில் உற்பத்தி:

நாட்டின் மூலதன மற்றும் நுகர்வு பொருட்கள் உற்பத்தி மிகவும் மோசமாக உள்ளது. தொழில் உற்பத்தி விகிதம், கடந்தாண்டு அக்டோபரில், 3.8 சதவீதமாக இருந்தது; நவம்பரில், 1.8 சதவீத வளர்ச்சியை கண்டது. ஆனாலும், முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போது தொழில் உற்பத்தியும், தொழில்கள் விரிவாக்கமும் மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளன.


வேளாண் துறை:


கடந்த நிதியாண்டில், 2.9 சதவீதமாக இருந்த வேளாண் உற்பத்தி, நடப்பு நிதியாண்டில், 3.1 சதவீதமாக உயரும் என, கணிக்கப்பட்டுள்ளது. பருவ மழை ஏமாற்றாத போதும், இந்த வளர்ச்சி மிகவும் குறைவே. இத்துறையில், தனியார் முதலீடுகளை ஈர்க்காத வரையில், இடுபொருளில்
இருந்து, உற்பத்தி பொருள் விற்பனை வரை, தனியார் பங்களிப்பு இல்லாத வரையில், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது சாத்தியமில்லை.


ஏற்றுமதி:


உலக ஏற்றுமதியில், இந்தியாவின் பங்கை, 2 சதவீதமாக உயர்த்துவதற்கு நீண்ட காலமாக போராடி வருகிறோம். கடந்த, 1948க்குப் பின், 2 சதவீதத்தை இந்தியா எட்டியதில்லை. கடந்த, 2010ல் இருந்து, 2018 வரையிலான காலத்தில், 1.5 - 1.75 சதவீதமாக இருந்து வருகிறது. அதிலும், இந்தியாவின் ஏற்றுமதி பெரும்பாலும், வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கே செய்யப்படுகிறது. சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான் ஆகியவை, இறக்குமதியை குறைத்துள்ளன. அதனால், தேவை குறைந்து உள்ளதால், இந்தியாவின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு:


கடந்த, 2019, டிச., நிலவரப்படி, நாட்டின் வேலைவாய்ப்பின்மை, 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
முந்தைய ஆண்டில், 90 லட்சமாக இருந்த வேலைவாய்ப்புகள், நடப்பு நிதியாண்டில், 16 லட்சமாக இருக்கும் என, எஸ்.பி.ஐ., எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி அறிக்கை தெரிவிக்கிறது.
அதனால், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பான அறிவிப்புகள் அல்லது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கினால், வரிச் சலுகை போன்ற அறிவிப்புகள் நிச்சயம் தேவை.
தொழிலாளர் சார் துறைகள்: ரியல் எஸ்டேட், கட்டுமானம், உற்பத்தி துறை ஆகியவை, அதிக அளவில் தொழிலாளர் சார்ந்த துறைகளாக உள்ளன.

இத்துறைகளில் தான், தொழிலாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்பும் கிடைக்கும். அது, பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். ஆனால், இத்துறைகள் ஏற்கனவே கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அதனால், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு, பெரிய அளவில் இவற்றின் பங்களிப்பு இல்லை. அத்துடன், தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்க முடியவில்லை.


நுகர்வு அதிகரிப்பு:


இந்த பட்ஜெட்டின் மிக முக்கிய சவாலாக, நுகர்வை அதிகரிப்பது தான் இருக்கும். நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரிய எழுச்சியை காண வேண்டுமானால், மக்களின் நுகர்வு சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். மக்களிடம் அதிக பணப் புழக்கத்தை ஏற்படுத்தும்
வகையில், பட்ஜெட் அமைய வேண்டும்.


மோசமான மாநில நிதி நிலைமை:


கடந்த சில ஆண்டுகளாக பல மாநிலங்களின் கடன் அதிகரித்து வந்துள்ளதால், தற்போது
அவற்றின் நிலைமை மோசமாக உள்ளது.ஜி.டி.பி., உயர்வுக்குஉதவும் வகையில், மாநிலங்கள்
இல்லை. பெரும்பாலான மாநிலங்களில் வளர்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, வேளாண் கடன் தள்ளுபடிக்கு மாற்றப்பட்டு உள்ளது.


உள்கட்டமைப்புக்கு ஊக்கம்:


நாடு முழுவதும், 102 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உள்கட்டமைப்பு திட்டங்கள் தயார்
நிலையில் உள்ளதாக, மத்திய அரசு கூறியுள்ளது. அடுத்த சில மாதங்களில் இது, 300 லட்சம் கோடி ரூபாயாக உயர வாய்ப்புள்ளது.இந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தேவையான நிதி ஆதாரங்களை பெருக்குவதற்கான வழிமுறைகள்வகுக்கப்பட வேண்டும்.கடந்த ஆறு ஆண்டுகளில், மத்திய - மாநில அரசுகள் இணைந்து, 51 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை நிறைவேற்றியுள்ளன.


ரியல் எஸ்டேட்:


தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, கடந்த இரண்டு பட்ஜெட்களில், ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும் வகையில், பல திட்டங்களை அறிவித்துள்ளது.ஒற்றை சாளர முறையில்
அனுமதி, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை குறைக்க வேண்டும் என்பவை,இந்தத் துறையின் முக்கிய கோரிக்கைகள். இந்தத் துறையின் வளர்ச்சியால், பொருளாதார வளர்ச்சியுடன், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.


சுற்றுலா மேம்பாடு:


இந்தியாவுக்கு ஆண்டுக்கு, ஒரு கோடி சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். அதே
நேரத்தில்குட்டி நாடான வியட்னாமுக்கு, 1.5 கோடி பேர் பயணிக்கின்றனர்.சீனாவுக்கு,
நம்மைவிட, 14 மடங்கு அதிகமானோர் சுற்றுலா செல்கின்றனர்.அன்னியச் செலாவணி
வருவாய் கிடைப்பதுடன், அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால், சுற்றுலா துறையில் முழு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்; தனியார் பங்களிப்பையும் பெற வேண்டும்.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
26-ஜன-202018:08:00 IST Report Abuse
Rajas இந்த வருட பட்ஜெட் எல்லாம் இவர்களுக்கு ராசியில்லை. பேசாமல் ஒட்டுமொத்தமாக ஒரே பட்ஜெட்டை 2021 வரைக்கும் போட்டுவிட்டால் என்ன. வருடா வருடம் பட்ஜெட் என்று போடுவதால் தான் கலாய்க்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
krishnan - Chennai,இந்தியா
26-ஜன-202017:31:05 IST Report Abuse
krishnan India is completely destroyed by BJP in the last 6 years.
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
26-ஜன-202017:26:40 IST Report Abuse
Rajas முதலில் பொருளாதாரம் சரியாவதற்கு நாமே முயற்சி செய்யலாம். வெளி நாட்டு பொருட்களை வாங்க கூடாது என்று உறுதி எடுத்து கொள்ள வேண்டும். இந்தியாவில் விற்பனையாகும் வெளி நாட்டு பொருட்களில் சீனப்பொருட்கள் மட்டும் 95 % உள்ளன. ஆட்டோ மொபைல் தொழிலை தவிர மற்றவை எல்லாம் சீன பொருட்களே. இந்திய நிறுவனங்களை சீன பொருட்கள் இந்திய உற்பத்தியாளர்களை மூழ்கடித்து விட்டன. தேசம், தேசபக்தி என்று வெறும் சொற்களால் சொல்வதை விட குறைந்த பட்சம் சீன பொருட்களை வாங்காமல் இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X