பொது செய்தி

தமிழ்நாடு

சமூக சேவகர் ராமகிருஷ்ணனுக்கு பத்ம ஸ்ரீ விருது

Updated : ஜன 25, 2020 | Added : ஜன 25, 2020 | கருத்துகள் (13)
Advertisement

நெல்லை: அமர் சேவா சங்கத்தின் நிறுவனர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.






அமர் சேவா சங்கத்தின் நிறுவனர் எஸ். ராமகிருஷ்ணன் 1981 ஆம் வருடம் அமர் சேவா | சங்கத்தைத் தொடங்கி, கடந்த 38 வருடங்களாக பல்வேறு மறுவாழ்வுப் பணிகள் மூலம் மாற்றுத்திறனாளிகள் இந்த சமுதாயத்தில் ஒருங்கிணைந்து வாழ பணியாற்றி வருகிறார். மேலும் அதன் தலைவராகவும் திகழ்கிறார்.





1975 ஜனவரி 10ம் தேதியன்று நடந்த கடற்படைக்கான தகுதித் தேர்வின்போது ஏற்பட்ட விபத்தினால் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட அவர், தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகள் சிரமங்களைப் போக்க எண்ணி சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவருக்குமான பணிகளை மேற்கொண்டு, அவர்களுக்கு உணவு, உறைவிடம், கல்வி, தொழிற்பயிற்சி, உடலியக்கப் பயிற்சிகள், போன்ற மிகவும் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் வழங்க ஆவன செய்து வருகிறார். கிராமம் சார்ந்த மறுவாழ்வுத் திட்டத்தின் மூலமும் திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் பல மாற்றுத் திறனாளிகள் பயனடைந்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan AE - Navi Mumbai,இந்தியா
26-ஜன-202017:28:07 IST Report Abuse
Saravanan AE முப்பதுக்கும் மேலான வருடங்களுக்குப் பிறகு இவருக்கு இந்த விருது ஆனால் செக்ஸ் செய்வது எப்படி என்று தான் தாய் முன்னாலேயே மேடையில் (அது வயது வந்தவர்களுக்கு என்றாலும்) பேசிய கரண் ஜோஹருக்கும் அதே விருது
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
26-ஜன-202012:49:10 IST Report Abuse
pattikkaattaan தன்னைப்போல பிறரையும் எண்ணி அரிய தொண்டாற்றும் இவரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் .. பல்லாண்டு வாழ்க
Rate this:
Share this comment
Cancel
Madurai Karan - Madurai,இந்தியா
26-ஜன-202010:58:50 IST Report Abuse
Madurai Karan விருதுக்கு தகுதியான நல்ல மனிதர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X