அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் அறிவிப்பு என்னாச்சு; கையெழுத்தோட நின்னாச்சு!

Updated : ஜன 26, 2020 | Added : ஜன 25, 2020 | கருத்துகள் (21)
Advertisement
ஸ்டாலின்,அறிவிப்பு,என்னாச்சு,கையெழுத்து, நின்னாச்சு,போராட்டம்,வைகோ

மத்திய அரசுக்கு எதிராக, பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக கூறியதை பற்றி வாய் திறக்காமல், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவித்த கையெழுத்து இயக்கம் போராட்டத்தை, 'ஆஹா ஓஹோ' என, கூட்டணி கட்சிகள் தலைவர்கள் சிலர் பாராட்டி உள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கண்டித்து, மாநில அளவில், அடுத்தக் கட்ட போராட்டம் நடத்துவது குறித்து விவாதிக்க, மதச்சார்பற்ற கட்சிகளின் ஆலோசனை கூட்டம், சென்னை, அறிவாலயத்தில், ஸ்டாலின் தலைமையில் நடந்தது. கூட்டம் துவங்கியதும், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், தங்களின் அடுத்தகட்ட போராட்டம் தொடர்பாக தெரிவிக்கலாம் என, கூறப்பட்டது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போன்றவர்கள், மக்களை கவரும் போராட்டங்கள் குறித்து பேசுவர் என, ஸ்டாலினும் எதிர்பார்த்தார்.ஆனால், எந்த ஒரு தலைவரும், போராட்டம் தொடர்பாக, ஒரு முடிவையும் தெரிவிக்காமல், 'கப்சிப்' என, அமர்ந்திருந்தனர்.

தி.க., சார்பில் பங்கேற்ற தலைவர்கள் மட்டும், காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஈ.வெ.ராமசாமி சிலை சேதப்பட்டதை கண்டித்து பேசினர்.போராட்டம் தொடர்பாக, என்ன முடிவு என்ற கேள்வி எழுந்தபோது, ஸ்டாலின் என்ன முடிவு சொல்கிறாரோ, அதுவே எங்கள் முடிவு என, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் ஒட்டு மொத்தமாக தெரிவித்தனர்.

உடனே ஸ்டாலின், 'ஏற்கனவே, நாம் பேரணி நடத்தி, தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தோம். தொடர்ந்து, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான, பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று வருகிறோம்.தமிழக மக்களின் கவனத்தை பெறுகிற வகையில், கையெழுத்து இயக்கம் நடத்தலாம்' என்றார்.

கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், சொல்லி வைத்ததுபோல், 'சபாஷ் சரியான போராட்டம்; அதை, நாங்கள் வழிமொழிகிறோம்' என, ஆதரவு தெரிவித்தனர். தொடர்ந்து, ஸ்டாலின் பேசுகையில், 'தி.மு.க., மாவட்ட செயலர்கள் தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், கையெழுத்து இயக்கம் நடத்த வேண்டும். எந்த தேதியில் நடத்தலாம்' என, கேட்டார். மார்க்சிஸ்ட் செயலர் கே.பாலகிருஷ்ணன், 'வரும், 30ம் தேதி, காந்தி நினைவு தினத்திலிருந்து கையெழுத்து இயக்கத்தை துவக்கலாம்' என்றார்.

அதற்கு வைகோ, 'அன்றைய தினம் மனித சங்கிலி போராட்டம் நடப்பதால், நம் போராட்டம் எடுபடாது' என்றார்.வைகோ கூறியதை ஏற்று, பிப்ரவரி, 2 முதல், 8ம் தேதி வரை, கையெழுத்து இயக்கம் நடத்தலாம் என, ஸ்டாலின் அறிவித்தார்.
- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
27-ஜன-202005:44:04 IST Report Abuse
 nicolethomson பச்சைப்புள்ள மாதிரி சிரிப்பு ஆனா செய்வதெல்லாம் துணைப்பிரதமர் ரேஞ்சுக்கு ,
Rate this:
Share this comment
Cancel
Rajkumar NS - Theni,இந்தியா
26-ஜன-202017:51:12 IST Report Abuse
Rajkumar NS இவங்களுக்கு வேற வேலை இல்ல போலிருக்கு . எப்ப பாரு போராட்டம் நடத்துறது தன வேலை . எதுக்கு நடத்துறோம்னு தெரியாம அதோட முக்கியத்துவம் தெரியாம போராடுறாங்க . யாருக்கும் உதவாத போராட்டம் .
Rate this:
Share this comment
Cancel
Hari - chennai,இந்தியா
26-ஜன-202017:34:35 IST Report Abuse
Hari பித்தம் தமிழனுக்கு எப்போது தெளியும் ,அப்போதான் இவைகளை குப்பைல தூக்கி போட முடியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X