அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஈ.வெ.ரா.,வுக்கு ஆதரவா; எதிர்ப்பா? அ.தி.மு.க.,வில் குழப்பம்

Updated : ஜன 26, 2020 | Added : ஜன 25, 2020 | கருத்துகள் (20)
Advertisement
ஈ.வெ.ரா.,ஆதரவா;,எதிர்ப்பா, அ.தி.மு.க., குழப்பம், ரஜினி

வார இதழ் ஆண்டு விழாவில் பேசிய ரஜினி, ஈ.வெ.ராமசாமி தலைமையில் நடந்த, தி.க., மாநாட்டில், ஹிந்து தெய்வங்கள் அவமதிக்கப்பட்டதை பற்றி குறிப்பிட்டார். இதையடுத்து, தமிழக அரசியல் களத்தில், ரஜினியின் பேச்சுக்கு எதிர்ப்பு குரலும், ஆதரவு குரலும் எழுந்துள்ளன.


திரும்பி விட கூடாது

ஆளும் அ.தி.மு.க.,வை பொறுத்தவரையில், இதிலும் இரண்டு குரல் கேட்கத் துவங்கி உள்ளது. ஹிந்துக்களுக்கு ஆதரவாக, ரஜினி தெரிவித்த கருத்துக்கு, ஆளுங்கட்சியை சேர்ந்த ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்; ஈ.வெ.ரா., பற்றிய ரஜினியின் பேச்சை, ஜெயகுமார் உள்ளிட்ட மந்திரிகள் கண்டித்துள்ளனர்.

இதனால், ஈ.வெ.ரா.,வுக்கு, அ.தி.மு.க., மேலிடம் ஆதரவு அளிக்கிறதா; எதிர்க்கிறதா என்ற குழப்பத்தில், அக்கட்சியினர் உள்ளனர். அதேபோல், தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், ரஜினி பேச்சு தொடர்பான விவகாரத்தில், பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்க முன்வரவில்லை. ஹிந்துக்களின் ஓட்டுமொத்த ஓட்டுக்களும், தங்களுக்கு எதிராக திரும்பி விடக் கூடாது என்பதால், ஈ.வெ.ராமசாமி விவகாரத்தில், எந்த ஒரு போராட்டத்தையும் அறிவிக்காமல், அடக்கி வாசிக்கிறார்.


ஆதரவு கரம்

அதேபோல், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்காமல், மென்மையான போக்கில், தன் கருத்தை பதிவு செய்துள்ளார்.பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணியும், 'ஸ்டாலின், உதயநிதிக்கு வரலாறு தெரியவில்லை' என்ற ரீதியில் முடித்து கொண்டார்.

த.மா.கா., மூத்த துணை தலைவர் ஞானதேசிகன், 'ரஜினி ஆளுமையுள்ள தலைவர்' என, பாராட்டு தெரிவித்துள்ளார். அதேபோல், பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா, மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி போன்றவர்களும், ரஜினிக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.


ரஜினியிடம் பாராட்டு பெற்ற அமைச்சர்கள்!

'டிவி' பேட்டிகளில், அ.தி.மு.க.,வில் உள்ள சில அமைச்சர்கள், தனக்கு ஆதரவாகவும், எதிராகவும் பேசி வருவதை, ரஜினி உன்னிப்பாக கவனித்து வருகிறார்.'பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகிய இருவரும், என்னை பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், தங்கள் துறைகளை பற்றிய பதில்களை மட்டும் கூறினர்.

'தங்களின் துறை ரீதியான பணிகளை மேற்கொள்வதில், இரு அமைச்சர்களும், அதிக கவனம் செலுத்தி, மக்களிடம் நன்மதிப்பு பெற்று வருகின்றனர்' என, தனக்கு நெருக்கமான அரசியல் ஆலோசகரிடம், ரஜினி பெருமையாக பேசிய தகவல் தெரிய வந்துள்ளது.



- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
27-ஜன-202011:19:43 IST Report Abuse
karutthu தமிழனின் தலையெழுத்தை மாற்றிய பெரியாரை ஈ வே ராமசாமி சொல்லுவது உங்களின் காழ்ப்புணர்ச்சி யை காட்டுகிறது. பதில் அப்போ ஈ வே ராமசாமி நாயக்கன் என ஜாதிப்பெயருடன் கூறனுமா ???
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
27-ஜன-202005:42:42 IST Report Abuse
 nicolethomson தனிமனித துதி இன்னமும் தமிழ்நாட்டில் இருப்பது வெட்கக்கேடு ,
Rate this:
Share this comment
Cancel
Saravanan - Michigan,யூ.எஸ்.ஏ
26-ஜன-202021:39:39 IST Report Abuse
Saravanan தமிழனின் தலையெழுத்தை மாற்றிய பெரியாரை ஈ வே ராமசாமி சொல்லுவது உங்களின் காழ்ப்புணர்ச்சி யை காட்டுகிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X