அரசியல் செய்தி

தமிழ்நாடு

மேயர் பதவிக்கு துண்டு போடுது தே.மு.தி.க.,

Updated : ஜன 26, 2020 | Added : ஜன 25, 2020
Advertisement
மேயர் பதவிக்கு துண்டு போடுது தே.மு.தி.க.,

நகர்புற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், அதிக இடங்களை பெறுவதற்கான முயற்சிகளை, தே.மு.தி.க., மேற்கொண்டுள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., - த.மா.கா., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

சமீபத்தில், 27 மாவட்டங்களுக்கு மட்டும் நடந்த, ஊரக உள்ளாட்சி தேர்தலில், இந்த கூட்டணி சார்பில் போட்டியிட, பா.ஜ.,விற்கு, 700க்கும் மேற்பட்ட இடங்கள் வழங்கப்பட்டன. பா.ம.க.,வுக்கு, 600க்கும் மேற்பட்ட, 'சீட்'கள் வழங்கப்பட்டன. ஆனால், தே.மு.தி.க.,விற்கு, 300 சீட்கள் மட்டுமே வழங்கப்பட்டன. கிடைத்த குறைந்த சீட்களை பயன்படுத்தி, அதிக இடங்களில், தே.மு.தி.க., வெற்றி பெற்றுஉள்ளது.

இதனால், அக்கட்சி தலைமை முதல் நிர்வாகிகள் வரை, உற்சாகமாக உள்ளனர். 2011 சட்டசபை தேர்தலுக்கு பின் கிடைத்த வெற்றி என்பதும், இதற்கு காரணம். நகர்புற உள்ளாட்சி தேர்தல், மார்ச்சில் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று, ஒன்பது மாவட்டங்களிலும், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.

இதையடுத்து, அ.தி.மு.க., தரப்பில், வேட்பாளர்கள் தேர்வு ரகசியமாக நடந்து வருகிறது. எந்தெந்த இடங்களில் வெற்றி வாய்ப்பு என்பதை, அக்கட்சியின் மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள் அலசி ஆராய்ந்து வருகின்றனர். ஊரக உள்ளாட்சி தேர்தலில், கோட்டை விட்டது போல, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அலட்சியமாக இருக்க கூடாது என, தே.மு.தி.க., தலைமை முடிவெடுத்து உள்ளது.

இதற்காக, அ.தி.மு.க., தலைமையிடம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த பேச்சில், தே.மு.தி.க., தரப்பு களமிறங்கிஉள்ளது. இதுதொடர்பாக, அமைச்சர்களை அடிக்கடி சந்தித்து, விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் ரகசிய பேச்சு நடத்தி வருகிறார்.

மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்றும் வகையில், திருப்பூர் அல்லது சென்னையில், அதிக கவுன்சிலர் சீட்களை வழங்கும்படி கேட்கப்பட்டு வருகிறது. இதேபோல, நகராட்சி, பேரூராட்சிகளில், 60க்கும் மேற்பட்ட கவுன்சிலர் சீட் வேண்டும் எனவும், கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க.,வின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா என்பது, தேர்தல் நேரத்தில் தெரிய வரும்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X