அரசியல் செய்தி

தமிழ்நாடு

கணக்கு போட்டு காய் நகர்த்தும் ரஜினி: கடும் கலக்கத்தில் திராவிட கட்சிகள்

Updated : ஜன 26, 2020 | Added : ஜன 25, 2020 | கருத்துகள் (133)
Share
Advertisement
ரஜினி, கணக்கு, திராவிட_கட்சிகள், அதிருப்தி, குஷி, ரசிகர்கள்

அரசியல் கட்சி துவக்குவதற்கு முன்பாக, ஹிந்து மக்களின் ஓட்டுகளை கவர, நடிகர் ரஜினி காய் நகர்த்த துவங்கி இருப்பது, திராவிட கட்சிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.தமிழக திரையுலகில், 'சூப்பர் ஸ்டார்' ஆக வலம் வருபவர், ரஜினி; ரசிகர்கள் ஆதரவு அதிகம் உள்ளவர். இவர், 1996 சட்ட சபை தேர்தலில், ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தார்; தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். அந்த தேர்தலில், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது.அதன்பின், ஒவ்வொரு தேர்தலிலும், அவரை தங்கள் பக்கம் இழுக்க, அரசியல் கட்சிகள் முயற்சித்து வந்தன.எதிர்பார்ப்பு

ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பின், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது எனக் கூறிய ரஜினி, அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்தார். கடந்த, 2018 ஜனவரியில், அவர் ரசிகர்களை சந்தித்த போது, தன் அரசியல், ஆன்மிக அரசியல் என்று தெரிவித்தார். 'ஆன்மிக அரசியல் என்பது, உண்மையான, நேர்மையான, நாணயமான அரசியல்; இது எந்தவிதமான ஜாதி, மத சார்பு இல்லாத அறம் சார்ந்த அரசியல். ஆன்மிக அரசியல் என்பது, ஆத்மாவுடன் தொடர்புடைய ஒன்றாகும்' என்றார்.அதைத் தொடர்ந்து, அவர் எப்போது அரசியல் கட்சியை துவக்குவார் என்ற எதிர்பார்ப்பு, அவரது ரசிகர்களிடம் மட்டுமின்றி, திராவிட கட்சிகளை எதிர்ப்போரிடம் ஏற்பட்டுள்ளது.


வாடிக்கைதமிழகத்தில், தற்போதுள்ள சூழ்நிலையில், தேசிய கட்சிகளுக்கு செல்வாக்கு இல்லை. திராவிட கட்சிகளான, அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும், பலம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன.மதச்சார்பற்ற கட்சி என கூறினாலும், ஹிந்து மத கடவுள்களை விமர்சிப்பது, தி.மு.க.,வின் வாடிக்கையாக உள்ளது. இதன் காரணமாக, தி.மு.க., எதிர்ப்பு மன நிலையில் உள்ள ஹிந்துக்கள், அ.தி.மு.க.,வை ஆதரித்தனர். அ.தி.மு.க., ஆட்சி மீது அதிருப்தி ஏற்படும் போது, வேறு வழியின்றி, தி.மு.க.,வை ஆதரித்தனர்.


ரசிகர்கள், 'குஷி'

இவ்வாறு, இரு கட்சிகளின் வெற்றிக்கு உதவி வரும், ஹிந்து மத உணர்வுள்ளோரின் ஓட்டுகளை கவர, நடிகர் ரஜினி முடிவு செய்துள்ளார். அதை குறி வைத்து, 'ஆன்மிக அரசியல்' என்றார்.அதன் துவக்கமாக, 1971 ல், தி.க., மாநாட்டில், ஹிந்து மத கடவுள்களின் படங்களை, செருப்பால் அடித்த சம்பவம் குறித்து பேசினார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதன் தொடர்ச்சியாக, ஹிந்து மத உணர்வாளர்கள், திராவிட கட்சியினருக்கு மாற்றாக, அவரை பார்க்க துவங்கி உள்ளனர்.

இது, திராவிட கட்சிகளிடம், கடும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி கட்சி துவங்கினால், அவருடன் கூட்டணி அமைக்க, பா.ஜ., - காங்கிரஸ் உட்பட, பல கட்சிகள் போட்டி போட்டு வருகின்றன. எனவே, ரஜினியின் அரசியல், தங்களின் ஆன்மிக எதிர்ப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுமோ என்ற அச்சத்தில், அவரை அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்துஎதிர்க்கின்றனர்.இந்த எதிர்ப்பே, அவரை அரசியலுக்கு இழுத்து வந்து விடும் என, ரஜினி ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.


துவங்கிடுச்சு ஆன்மிக அரசியல்!

ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கு முதல் வெற்றி என, அவரது ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர்.இது குறித்து, ரஜினி மக்கள் மன்ற வட்டாரத்தில் கூறியதாவது:ஆன்மிக அரசியலை நோக்கியே ரஜனியும், அவரது மக்கள் மன்றமும் பயணிக்கிறது. ரஜினியின் சாதாரண பேச்சுக்கே, இதுவரை ஹிந்து எதிர்ப்பு நாடகமாடி வந்த கட்சிகள் அலறியுள்ளன.கட்சியே துவக்காத, ஒருவரின் பேச்சுக்கு, ஆளும்கட்சி பிரமுகர்களும், எதிர்க்கட்சிகளும், ஏன் இத்தனை முக்கியத்துவம் தர வேண்டும்?
'மற்ற மதங்களை காட்டிலும், ஹிந்து மத கடவுள்களே, பொது வெளியில் அதிகமாக ஏளனம் செய்யப்படுகின்றனர். இது, மறுக்க வேண்டிய விஷயமில்லை; மறக்க வேண்டிய விஷயம்' என, ரஜினி கூறியுள்ளதை, சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஹிந்து மத கடவுள்களை, பொது வெளியில் ஏளனப்படுத்த நினைக்கிறவர்கள், இனிமேல் யோசிப்பர். இது, ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கான, முதல் வெற்றியாக அமையும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (133)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
30-ஜன-202014:05:12 IST Report Abuse
PANDA PANDI ரஜினி PUNCH டயலாக் சொல்லமட்டும் தான் முடியும். PUNCH கொடுத்தல் தியேட்டரில் கைதட்டல் வாங்குவது போல அரசியலிலும் வாங்கி அண்ணாமலை போல 20 நிமிடத்தில் பாஷா ஆகிவிடலாம்னு யாரோ நாக்பூரில் இருந்து ஊதிவிட்டார்களோனு ஒரு டவுட்டு என் மாமாவுக்கு..
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
30-ஜன-202014:00:28 IST Report Abuse
PANDA PANDI ...ஹிந்து மத உணர்வுள்ளோரின் ஓட்டுகளை கவர, நடிகர் ரஜினி முடிவு.. ஹாஹா.. அப்போ ஆப்பு டு பிசேபி. பேஷ் பேஷ் தும்ப நன்னாருக்கு.. திராவிட கட்சிகளுக்கு இல்லை என்பதை உணரவும். ஜால்ரா திராவிட கட்சி இந்த தேர்தலோடு காலி. ரஜினியின் வரவால் அழியப்போவது மம்மி PARTY தான். ரஜினியின் காலத்திற்கு பிறகு ஆட்மீக கட்சியை பிசேபி விலைக்கு வாங்கிவிடும்... அப்புறம் சுடலை party vS சூடாமணி party தான். . வடக்கு Vs தெற்கு. SUUPARuu.. editor வாழ்க வாழ்க.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
29-ஜன-202016:22:52 IST Report Abuse
Endrum Indian அப்போ நம்ம அடுத்த முதன் மந்திரி ஒரு மராத்தியர் என்று உறுதி பட சொல்லலாம் ஸ்ரீலங்கா மலையாளி, தெலுங்கு, கன்னடம் போரடித்து விட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X