1000 படுக்கைகளுடன் ஆஸ்பத்திரி: ஒரே வாரத்தில் கட்டும் சீனா

Updated : ஜன 26, 2020 | Added : ஜன 25, 2020 | கருத்துகள் (38)
Advertisement

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் சீனாவை மிரட்டி வரும் நிலையில், அதற்காக 1000 படுக்கைகளை கொண்ட ஆஸ்பத்திரி ஒன்றை அந்நாடு ஒரே வாரத்தில் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளது.

சீனாவில கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் இது 1300 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 41 பேர் இதில் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்களுக்கு வைரஸ் தாக்கியுள்ளதா என்பதை அறியே ஒரே நேரத்தில் பலர் மருத்துவமனையை நோக்கி படையெடுப்பதால், நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு அவசர தீர்வு காண வூகான் நகரில் ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கூடிய நவீன மருத்துவமனையை நிர்மாணிக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளது. சுமார் 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில்

சீனாவில் கொரோனா வைரஸால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 த்திற்கும் அதிகமாக உள்ளது.

இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சீனாவின் வுகான் நகரில் புதிதாக ஒரு பிரம்மாண்டமான மருத்துவமனையை சீன அரசு கட்ட தயாராகி வருகிறது. இந்த நோய் பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இந்த வைரஸ் நுரையீரலை தாக்கி நிமோனியை காய்ச்சலை ஏற்படுத்தும். இது வேகமாக பரவுவதை தடுக்கும் நோக்கில் பல்வேறு நகரங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.1000 படுக்கை வசதி


சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து இந்த கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. காற்றின் தன்மையாலும் இந்த வைரஸ் 14 நகரங்களில் பாதிப்பை உண்டாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் வுகான் பகுதியில் நோய் பாதிப்பு அதிகம் உள்ளதால் இங்கு புதிய மருத்துவமனையை கட்டும் பணியை சீனா துவங்கியுள்ளது. 1000 படுக்கை வசதிகளை கொண்டதாக உருவாக்கப்படும் இந்த மருத்துவமனை 25000 ச.மீ பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் தயாராகி பணிகள் நடந்து வருகிறது.

மருத்துவமனை கட்டும் பணிகள் நேற்று முதல் துவங்கப்பட்டதாகவும் விரைவில் பணிகள் முடிந்துவிடும் எனவும் பிப்., 3 முதல் மருத்துவமனை செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காக 10 புல்டோசர்கள் மற்றும் 35 குழி தோண்டும் இயந்திரங்கள் என வேலைகள் நடந்துவருகின்றன.

தொடர்ந்து சீனாவின் மருத்துவ வசதிகளின் பற்றாகுறையை போக்கும் நோக்கிலும் இந்த மருத்துவமனை கட்டுப்படுவதாக கூறப்படுகிறது. 2003 ல் பெய்ஜிங்கில் சார்ஸ் வைரஸ் தாக்குதலை தொடர்ந்து புதிய மருத்துவமனை கட்டப்பட்டது. அதனை உதாரணமாக கொண்டு புதிய மருத்துவமனையை 1 வாரத்திற்குள் முடிக்க அரசு திட்டமிட்டதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்காக கட்டப்படும் இந்த மருத்துவமனை சீனாவின் மருத்துவ உலகில் புதிய மைல் கல்லாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரவி - Texas,யூ.எஸ்.ஏ
31-ஜன-202005:31:31 IST Report Abuse
ரவி ஒரு பாழடைஞ்ச கட்டடிடத்தை புதுப்பித்து ஆஸ்பத்திரி கட்டுகிறார்கள். என்னமோ பேஸ்மெண்ட் போட்டு புதுசா கட்டிடம் கட்டுறா மாதிரி
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
30-ஜன-202016:36:57 IST Report Abuse
Endrum Indian 1000 படுக்கை கொண்ட ஆஸ்பத்திரி 10 நாளில்? இதை சிவில் பொறியாளர்களின் அதிசயம் என்பதா? அவசரம் என்பதா? 1000 படுக்கை என்னும் போதிலே 1000x 100 = 1 லட்சம் சதுரஅடி கட்டிடம் மொத்தமாக பார்த்தால் 1.5 லட்சம் சதுர அடி என்று வைத்துக்கொண்டால் 15,000 சதுர அடி ஒரு நாளில் அதாவது இது இது குறைந்தது 20 மாடிக்கட்டிடம். இது உண்மையிலே நடந்தால் அந்த கட்டிடம் வலுவாக இருக்குமா என்று ஒரு பெரிய சந்தேகம் இருக்கின்றது "Curing" - இதற்கு டைம் கொடுக்காதபோது இந்த கட்டிடம் வெகு சீக்கிரத்தில் கீழே விழ வாய்ப்பு உண்டு.
Rate this:
Share this comment
atara - Pune,இந்தியா
02-பிப்-202007:51:13 IST Report Abuse
ataraYou have to understand framed construction with Steel only Structures without Cement usage after the Basement level can be possible....
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
29-ஜன-202010:21:14 IST Report Abuse
Bhaskaran அவர்களால் மட்டுமே முடியும் .நம் நாட்டில் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு என்பது மிக கடினம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X