டில்லியில் கட்டட விபத்து ; 5பேர் பலி 13 பேர் காயம்

Updated : ஜன 26, 2020 | Added : ஜன 26, 2020 | கருத்துகள் (1)
Advertisement

புதுடில்லி : டில்லியில் பயிற்சி வகுப்பு நடத்தும் மையம் அமைந்துள்ள கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி 4 மாணவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். இதுவரை 13 பேர் காயமடைந்துள்ளனர்.






டில்லியின் பஜன்புரா பகுதியில் உள்ள ஒரு நான்கு மாடிக் கட்டிடத்தில் குழந்தைகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தும் மையம் ஒன்று செயல்பட்டு வந்தது. நேற்று இந்த பயிற்சி வகுப்பில் 30 க்கும் அதிகமான மாணவர்கள் வகுப்பில் பங்கேற்றனர்.





அப்போது புதிதாக கட்டப்பட்ட கட்டுமானத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தினால் மாணவர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். பின் தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் 7 தீயணைப்பு வாகனங்கள் மூலம் மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் கட்டடம் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். இதில் 4 பேர் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan AE - Navi Mumbai,இந்தியா
26-ஜன-202017:18:49 IST Report Abuse
Saravanan AE Sad, ஆத்மா சாந்தியடையட்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X