பட்னவிஸ் ஆட்சியில் என் போன் ஒட்டுக் கேட்கப்பட்டது: சஞ்சய் ராவத்

Updated : ஜன 26, 2020 | Added : ஜன 26, 2020 | கருத்துகள் (7)
Advertisement

மும்பை : ''மஹாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னவிஸ் இருந்த போது, எனது போன் ஒட்டுக் கேட்கப்பட்டதாக, பா.ஜ., தலைவர் ஒருவரே, என்னிடம் தெரிவித்தார்,'' என, சிவசேனா மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் ராவத் கூறினார்.






மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கே, 2014 - 19 வரை, தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்தது. இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் ராவத் கூறியதாவது: மஹாராஷ்டிராவில், கடந்த, அக்டோபரில் நடந்த சட்டசபை தேர்தலுக்குப் பின், ஆட்சி அமைப்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. தேர்தலுக்குப் பின், பா.ஜ.,வுக்கு எதிரான கூட்டணி அமைப்பதில், முக்கிய பங்காற்றினேன். அப்போது, எனது போன் பேச்சுக்கள் ஒட்டு கேட்கப்பட்டன. இதை, பா.ஜ., மூத்த தலைவர் ஒருவரே என்னிடம் தெரிவித்தார்.





என் போன் மட்டுமின்றி, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், சிவசேனா மூத்த தவைர்கள் உட்பட, பலரது போன் பேச்சுக்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. இது பற்றி விசாரிக்க, 'சைபர்' பிரிவு போலீசாருக்கு உத்தர விடப்பட்டுள்ளது. மாநிலத்தில் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைய மூல காரணமாக இருந்தவர் சரத் பவார். அதனால் தான், அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை, மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. இவ்வாறு, சஞ்சய் ராவத் கூறினார்.






விசாரணை நடத்தட்டும்

சிவசேனா எம்.பி.,யின் குற்றச்சாட்டு குறித்து, மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறியதாவது: எனது ஆட்சியில் யாருடைய போனும் ஒட்டு கேட்கப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவர்களின் போன் பேச்சுக்களை ஒட்டுக் கேட்குமாறு, யாருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இது பற்றி, மாநில அரசு, தாராளமாக விசாரணை நடத்தட்டும். எனக்கு எந்த அச்சமும் இல்லை. விசாரணை நடத்தி, மக்கள் முன், அறிக்கை சமர்ப்பிக்கட்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
santhakumari - chennai,இந்தியா
26-ஜன-202021:38:49 IST Report Abuse
santhakumari அதனாலென்ன போன் ஒட்டுக்கேட்டு ஆட்சியமைக்க முடியலையே
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
26-ஜன-202016:24:33 IST Report Abuse
Cheran Perumal பிஜேபி யுடன் சண்டை தீவிரமாக இருந்தபோது கூட இதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே? இதெல்லாம் சும்மா புருடா.
Rate this:
Share this comment
Cancel
mani - thirumayam,இந்தியா
26-ஜன-202016:22:56 IST Report Abuse
 mani இத 5 வருசமா அவங்களோட இருந்தப்ப ஏன் சொல்லலே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X