பொது செய்தி

தமிழ்நாடு

ஏலச்செடிகள் வாடாமல் தடுக்க நடவடிக்கை

Added : ஜன 26, 2020
Share
Advertisement

கம்பம், : ஏலத்தோட்ட கிணறுகளில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி செடிகள் வாடாமல் இருக்க விவசாயிகள் பணி செய்கின்றனர். ஆனால் மழையின்றி அவற்றிலும் தண்ணீர் குறையத் துவங்கியுள்ளது.

கேரளா, இடுக்கி மாவட்டத்தில் வண்டன்மேடு, புளியன்மலை, சாஸ்தாநடை, மாலி, சங்குண்டான், மாதவன்கானல், மேப்பாறை, வெங்கலப்பாறை, புத்தடி, நெடுங்கண்டம், சுல்தானியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏலக்காய் சாகுபடி நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் மேற்கொள்ளப்படும் இதில் பெரும்பாலும் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தாண்டு வரலாறு காணாத விலை உயர்வு உள்ளது. சராசரி விலை கிலோவிற்கு ரூ. 4 ஆயிரம் வரை கிடைத்து வருகிறது. ஆனால் விளைச்சல் மிகவும் குறைவாகும்.

இந்த சீசனுக்கான காய் எடுப்பு நிறைவுபெறும் நிலைக்கு வந்துள்ளது.தற்போது மழைபெய்து ஒரு மாதத்திற்கும் மேலாகி விட்டது. வெயில் மற்றும் பனி கடுமையாக உள்ளது. இதனால் செடிகள் பல இடங்களில் காய்ந்து கீழ் விழும் நிலைக்கு வந்துள்ளன. எனவே விவசவாயிகள் தோட்ட கிணறுகளில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி, செடிகளுக்கு தெளித்துவருகின்றனர். ஆனால் கிணறுகளிலும் நீர்மட்டம் குறையத் துவங்கியுள்ளது. இதே நிலை நீடித்தால் செடிகளை காப்பாற்றுவது கடினம் என்கின்றனர்.

முன்னோடி விவசாயி புதுப்பட்டி அருண் கூறுகையில், கடுமையான பனி மற்றும் வெயில் உள்ளது. செடிகளை காப்பாற்ற, தண்ணீர் அடித்து வருகிறோம். கிணறுகளிலும் தண்ணீர் குறைந்து வருகிறது. எனவே மழை பெய்தால் தான் தப்பிக்கமுடியும்,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X