மன்னிப்பு கேட்பாரா சந்திரபாபு நாயுடு ?

Updated : ஜன 26, 2020 | Added : ஜன 26, 2020 | கருத்துகள் (29)
Advertisement

புதுடில்லி: கடந்த ஆட்சியில், மத்தியில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம், லோக்சபா தேர்தலுக்கு முன், கூட்டணியிலிருந்து விலகியது. காங்கிரசுடன் கை கோர்த்த அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு,






ஊர் ஊராகச் சென்று, பிரதமர் மோடிக்கு எதிராக பிரசாரம் செய்தார். கடைசியில், லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. ஆந்திராவில், சந்திரபாபு படு தோல்வி அடைந்தார்.இன்னொரு பக்கம், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அதிரடி அரசியலாலும், சந்திரபாபு துவண்டு போயிருக்கிறார். இப்போது அவருடைய மகன், நர லோகேஷும் தீவிர அரசியலுக்கு வந்துவிட்டார். தன் குடும்பம், அரசியலில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால், காங்கிரசுடன் கைகோர்த்தால் வேலைக்கு ஆகாது என்பதை, சந்திரபாபு காலதாமதமாக உணர்ந்துள்ளார். மீண்டும், பா.ஜ.,வுடன் சேர ஆசைப்பட்டு, அதன் முக்கிய தலைவர்களுடன் பேசி வருகிறார்.

ஆனால், அனைவரும், கட்சியின் மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவிடம் பேசுங்கள் என சொல்லிவிட்டனர்.எனவே, அமித் ஷாவை தொடர்பு கொள்ள, சந்திரபாபு பல முறை முயற்சித்துள்ளார். ஆனால் அமித் ஷா, சந்திரபாபுவின் போன் அழைப்புகளை ஏற்க மறுத்துவிட்டார். 'எங்களோடு ஆட்சியில் இருந்த வரை எல்லாவற்றையும் அனுபவித்து, தேர்தல் சமயத்தில் காங்கிரசில் சேர்ந்துவிட்டார். அதோடு தனி விமானம் மூலம், ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று, மோடிக்கு எதிராக பிரசாரம் செய்தார். 'அப்படிப்பட்டவர் மீண்டும், பா.ஜ., பக்கம் வருவதாக இருந்தால், பொது மன்னிப்பு கேட்க வேண்டும்' என்கிறாராம் அமித் ஷா. சந்திரபாபு மன்னிப்பு கேட்பாரா?





இன்னொரு பக்கம், சிவசேனாவும், தெலுங்கு தேசம் போலவே, தங்கள் கூட்டணியில் மீண்டும் சேர விரும்புவதாக, பா.ஜ., தலைவர்கள் தெரிவிக்கின்றனர். காங்., கூட்டணியில், அதிக நாள் நீடிக்க முடியாது என்பதால், பா.ஜ., கூட்டணிக்கு தாவ, சிவசேனா தலைவரும், மஹா., முதல்வருமான உத்தவ் தாக்கரே ஆசைப்படுகிறார் என, பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவராக பதவியேற்றுள்ள, ஜே.பி.நட்டாவிற்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesh G - Hyderabad,இந்தியா
26-ஜன-202020:45:02 IST Report Abuse
Ganesh G அரசன நம்பி புருசன விட்டான். இப்பேn புருசனும் ஏத்துக்கிட்டு மாட்டேங்கறான்
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
26-ஜன-202016:18:19 IST Report Abuse
Indhuindian பொய் நெல்லை குத்தி பொங்க நினைத்தவன் கை நெல்லும் விட்டானாடி
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
26-ஜன-202014:40:21 IST Report Abuse
RajanRajan நாயுடு காரை அப்போ பிரதமரை பதவி நப்பாசை சனி ரூபத்திலே உச்சத்தில் இருந்து ஒரு பிடிபிடிச்சுட்டு. அவரும் சிறகடித்து பறந்தது பார்த்தார் பருப்பு வேவல்லே. அம்போன்னு உள்ளுரிலே குப்புற அடிச்சு உளுந்தூர்ட்டாரு. இப்போ ஒரு மதியாதார் வாசலையும் விடாம கம்பு சுத்தி பார்க்கிறாரு. ஊஹூம் அந்த சுடலை மாதிரி திருப்பதி லட்டு தான் புடிச்சு பார்க்கணும். தேவுடு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X