இம்ரான்கான் பயணத்துக்கு உதவிய தொழிலதிபர்கள்

Updated : ஜன 26, 2020 | Added : ஜன 26, 2020 | கருத்துகள் (35)
Advertisement

டாவோஸ்: ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் இரண்டு தொழிலதிபர்கள் உதவியதால் பங்கேற்றதாக நமது அண்டை நாடான பாக்.கின் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.






நமது அண்டை நாடான பாக்.கில் கடும் நிதி நெருக்கடி நிலவுகிறது. அதனால் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.இந்த நிலையில் டாவோசில் நடந்த உலகப் பொருளாதார அமைப்பின் மாநாட்டில் அவர் பங்கேற்றார். அங்கு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:கடந்தாண்டு செப்.ல் அமெரிக்காவில் நடந்த ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்றேன். அப்போது என்னுடைய பயணச் செலவு அதற்கு முன் பாக். பிரதமர்கள் மேற்கொண்டதைவிட மிக மிக குறைவாகும்.

தற்போது இந்தப் பயணத்துக்கான செலவும் இதற்கு முன் செய்யப்பட்டதைவிட 10 மடங்கு குறைவாகும். மேலும் இந்த பயணத்துக்கான செலவை என்னுடைய நண்பர்களான தொழிலதிபர்கள் இக்ரம் செஹல், இம்ரான் சவுத்ரி ஏற்றனர். அவர்கள் செலவை ஏற்காவிட்டால் இந்த மாநாட்டில் பங்கேற்றிருக்க மாட்டேன். அரசுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியிருக்க மாட்டேன்.என்னுடைய அமைச்சர்கள் வெளிநாட்டு பயணம் என்று பேச்சை எடுத்தாலேயே அதனால் நாட்டுக்கு பயன் இருக்கிறதா என்பதை பார்ப்பேன். பெரும்பாலான பயணத்தை ரத்து செய்துள்ளேன்.





வெளிநாடுகளில் வாழும் 90 லட்சம் பாகிஸ்தானியர்கள் நாட்டுக்கு பெரிய அளவில் உதவிட வேண்டும். மொத்தம் 20 கோடி மக்கள் தொகை கொண்ட பாக்.கின் ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 50 சதவீதம் அளவுக்கு வெளிநாட்டு வாழ் பாகிஸ்தானியர்களின் வருவாயாக இருக்கும் என நினைக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
26-ஜன-202015:58:13 IST Report Abuse
Allah Daniel ////நமது அண்டை நாடான பாக்.கில் கடும் நிதி நெருக்கடி நிலவுகிறது./// இரு...என்குருள, ஒரு மாஜி திகார் கைதி இருக்கான், ‘மொட்டை மடியில் காலி பிளவர் தோட்டம் போட்டு, ஸ்பெயினில் 38 டென்னிஸ் தோட்டம் வாங்குவது எப்படி’னு கேட்டு தெரிஞ்சிக்கோ...
Rate this:
Share this comment
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
26-ஜன-202015:55:05 IST Report Abuse
Allah Daniel ///நமது அண்டை நாடான பாக்.கில் கடும் நிதி நெருக்கடி நிலவுகிறது.//// அந்த பழைய ரூபாய் நோட்டு அடிக்கும் மெஷினை, ஒரு தேச த்ரோகிக்கிட இருந்து வாங்கினேயே, அதை எங்கையாவது பழசுக்கு போட்டு வேறு தொழில் ஏதாவது செய்ய வேண்டியதுதானே...
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
26-ஜன-202015:54:58 IST Report Abuse
dandy DAVOS மகாநாட்டில் பங்கு பெற ஒருவர் USD 20,000 - செலுத்த வேண்டும் ..பிரயாணம் ஹோட்டல் எல்லாம் தனி எவர் இந்தோனேசிய ஜனாதிபதியாக வந்தாலும் கூடவே மேடான் நகர் மாரிமுத்து செட்டியார் குடும்ப அங்கத்தினர் ஒருவர் கூட வருவார் ..ஆக இவர்கள் தான் செலவு செய்கின்றார்கள் சுடலை கான் போகவில்லையா ???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X