பொது செய்தி

இந்தியா

சுவரேறி குதித்து சிதம்பரத்தை கைது செய்தவருக்கு ஜனாதிபதி விருது

Updated : ஜன 26, 2020 | Added : ஜன 26, 2020 | கருத்துகள் (107)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, வீட்டு சுவர் ஏறி குதித்து கைது செய்த டிஎஸ்பி ராமசாமி பார்த்தசாரதிக்கு சிறப்பாக பணியாற்றியதற்காக ஜனாதிபதி காவலர் விருது வழங்கப்பட்டுள்ளது.





குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான ஜனாதிபதியின் காவலர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த ஆண்டு சிதம்பரம் வீட்டின் 6 அடி உயர சுற்று சுவர் மீது ஏறி உள்ளே குதித்து, அவரை கைது செய்த டிஎஸ்பி ராமசாமி உள்ளிட்ட 28 சிபிஐ அதிகாரிகளுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.




மிக நிதானமான, அதே சமயம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் அதிகாரி என பெயர் பெற்றவர் ராமசாமி. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்தின் மகன் கார்த்தியையும் கைது செய்தது இவர் தான். இந்த குழுவில் இடம்பெற்ற மற்றொரு உயர் அதிகாரி தீரேந்திர சுக்லா. இந்த குழுவிற்கு தலைமையாக இருந்த இவர், யுஏஇ., யில் இருந்து வந்த முதல் இந்திய அதிகாரி ஆவார். இவர் பல சவாலான, சிக்கலான குற்றங்களை திறம்பட கண்டுபிடித்தவர். மற்றொருவரான சிறப்பு குற்றப்பிரிவு எஸ்.பி.,நிர்பய் குமார், லாலு பிரசாத்தின் ரயில்வே ஊழல் வழக்கு விசாரணையில் முக்கிய பங்கு வகித்தவர்.

Advertisement




வாசகர் கருத்து (107)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
27-ஜன-202000:27:40 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam எல்லாமே அரசியல்தான்.
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
26-ஜன-202022:11:15 IST Report Abuse
Rajas பத்ம ஸ்ரீ விருது பெற்ற அட்னான் சமியின் தந்தை பாகிஸ்தானின் விமான படை வீரர். அவருக்கு எப்படி விருது கிடைத்தது. கார்கில் போரில் போரிட்ட நம் படை வீரர் முகமது சனஉலா. ஆனால் அவரின் குடியுரிமை பறிக்கப்பட்டிருக்குதாமே.
Rate this:
Share this comment
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
27-ஜன-202005:58:28 IST Report Abuse
தாண்டவக்கோன் ஏன்னா நீயி போட்டிருக்கிற கான் கிராஸ் கண்ணாடி யோட வேலை அப்டி.. அப்டித்தான் தெரியும்...
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
26-ஜன-202021:36:08 IST Report Abuse
s t rajan ப.சி.... ஒரு சுயமரியாதை யற்ற அரசியல் வ்யாதி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X