பொது செய்தி

இந்தியா

குடியரசு தின அணிவகுப்பில் இதுவே முதல் முறை

Updated : ஜன 26, 2020 | Added : ஜன 26, 2020 | கருத்துகள் (21)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : இன்று நடைபெற்ற 71 வது குடியரசு தின விழா அணிவகுப்பில் பல்வேறு அம்சங்கள் முதல் முறையாக இடம்பெற்றுள்ளன. விமானப்படையின் ரபேல் போர் விமானம், ராணுவத்தின் பீஷ்மா போர் பீரங்கி உள்ளிட்டவைகள் முதல் முறையாக அணிவகுப்பில் இடம்பெற்றன.மொத்தம் 90 நிமிடங்கள் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் நாட்டின் ராணுவம், பல்வேறு மாநில கலாச்சாரங்கள், சமூக-பொருளாதார திட்டங்களை ஆகியவற்றை குறிக்கும் மாதிரிகள் இடம்பெற்றன. குடியரசு தின அணிவகுப்பு துவங்குவதற்கு முன் முதல் முறையாக தேசிய போர் நினைவிடத்திற்கு சென்று, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். இதுவரை அமர் ஜவான் ஜோதியில் அஞ்சலி செலுத்தப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க, தேசிய கீதத்துடன், மூவர்ணக் கொடியை ஜனாதிபதி ஏற்றினார்.அணிவகுப்பின் 10 சிறப்பம்சங்கள் :1. 16 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், பல்வேறு அமைச்சர்கள், துறைகள் என மொத்தம் 22 மாதிரி வடிவங்கள் அணிவகுப்பில் காட்சிபடுத்தப்பட்டன.மேற்குவங்கம், கேரளா போன்ற மாநிலங்கள் அணிவகுப்பில் இடம்பெறவில்லை.

2. நாட்டின் ஆயுத பலத்தை காட்டும் வகையில் ராணுவத்தின் போர் பீரங்கியான பீஷ்மா, காலாட்படையின் போர் வாகனமான பால்வே இயந்திரத்தின் பிகேட், விமானப்படைக்கு புதிதாக வாங்கப்பட்ட ரபேல் போர் விமானம், சினூக் மற்றும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஆகியன முதல் முறையாக காட்சிபடுத்தப்பட்டது.

3. இந்திய ராணுவத்தின் சார்பில் சீருடை அணிந்த 61 குதிரைப்படை வீரர்களின் கம்பீர அணிவகுப்பு நடைபெற்றது. உலகில் தற்போது இந்தியாவில் மட்டுமே குதிரைப்படை செயல்பாட்டில் உள்ளது. ருத்ரா, துருவ் போன்ற அதிநவீன ஹெலிகாப்டர்களும் இடம்பெற்றன.
4. இது தவிர 144 விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு, தேஜஸ் போர் விமானம், எடை குறைந்த ஹெலிகாப்டர், ஆகாஷ், அஸ்திரா போன்ற ஏவுகணைகளும் இடம்பெற்றன.

5. விமான சாகச பிரிவில் சிக் 29 ரக போர் விமானம், காற்றை துளைத்து அதிவேகமாக செல்லக் கூடிய 5 ஜாக்குவார் போர் விமானங்கள் இடம்பெற உள்ளன.

6. டிஆர்டிஓ சார்பில் செயற்கைகோள்களை தாக்கி அழிக்கக் கூடிய ஷக்தி ஏவுகணையும் அணிவகுப்பில் இடம்பெற்றது. எதிரிகளின் செயற்கோள்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது ஷக்தி.
7. இந்திய கடற்படை - அமைதி, வலிமை மற்றும் வேகம் என்ற தலைப்பில் கடற்படை சார்பில் 144 இளம் மாலுமிகள் அடங்கிய அலங்கார வாகனம் அணிவகுத்து வந்தது.

8. முதல் முறையாக ராணுவத்தில் பெண்களின் ஆற்றல் மற்றும் ஆளுமையை பறைசாற்றும் வகையில் சிஆர்பிஎப் மகளிர் பிரிவினர் பைக் சாகசம் செய்தனர். இந்த படையை வழிநடத்தி இன்ஸ்பெக்டர் சீமா நாக், ஓடும் மோட்டர் சைக்கிளில் நின்றபடி சல்யூட் செய்தார்.

9. முப்படைகளின் கூட்டாக முதல் முறையாக திரிசூல் அதிநவீன போர் ஹெலிகாப்டர்கள் ராணுவ அணிவகுப்பில் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து விக் போர் ஹெலிகாப்டரும் காட்சி படுத்தப்பட்டது.
10. ஸ்டார்ட் அப் இந்தியா, ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களின் திட்டங்களை விளக்கும் வகையிலான ஊர்திகளும் அணிவகுப்பில் இடம்பெற்றன.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya Ram - madurai,இந்தியா
29-ஜன-202010:56:48 IST Report Abuse
Jaya Ram கேரளா , மேற்கு வங்கத்திற்கான ரயில் சேவைகள் ,விமான சேவைகள் உடனடியாக நிறுத்த வேண்டும் ஏனென்றால் குடிஅரசு விழா என்பது காங்கிரஸ் ,பி ஜே பி கட்சிகளின் விழா அல்ல புறக்கணிக்க இது இந்நாட்டின் விழா எனவே இந்த அணிவகுப்பில் கலந்துகொள்ளாதிருப்பது மிகவும் கண்டிக்க தக்கது இதை வார்த்தைகளில் பதிவிட்டால் போதுமானது அல்ல இதுபற்றி அம்மாநிலமக்கள் தெரிந்துகொள்ள இதுவே சிறந்த வழி ஒரு இரண்டு அல்லது மூன்று நாட்கள் மேற்படி சேவைகளை நிறுத்தினால் மக்கள் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும் எனவே முன் அறிவிப்பு செய்தே நிறுத்தலாம் இது என் கருத்து
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
26-ஜன-202019:32:15 IST Report Abuse
Ravichandran துரோகிகள் கலந்து கொள்ளாத சிறந்த அணிவகுப்பு, தேசத்தின் பெருமை அதன் ஒற்றுமை அதன் வீரம் அனைத்தும் காட்டிய ராணுவ வீரர்களுக்கு என் வணக்கத்தை அவர்கள் பாதங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். வாழ்க வாழ்க பாரதம்.
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
26-ஜன-202017:41:30 IST Report Abuse
spr இந்த குடியரசு தினம் காஷ்மீர் விடுதலை தினம். அடுத்ததாக வரும் 2021 குடியரசு தினம் "ஒரே நாடு ஒரே சட்டம்" என்பதாகக் கொண்டாடட்டும் இந்திய இளைஞர்கள் படித்த படிப்பிற்கேற்ற வேலை வாய்ப்புடன், சுயமரியாதையுடன் வருமானம் பெற இந்த அரசு வழி செய்யட்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X