பொது செய்தி

இந்தியா

மாநிலங்களின் கலாசாரம், பாரம்பரியத்தை வெளிப்படுத்திய குடியரசு தின அணிவகுப்பு

Updated : ஜன 26, 2020 | Added : ஜன 26, 2020 | கருத்துகள் (8)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: குடியரசு தின அணிவகுப்பில் கலாசாரம், பாரம்பரியம் உள்ளிட்டவற்றை கருப்பொருளாக கொண்டு 22 வகையான அலங்கார ஊர்திகள் அணிவகுத்து சென்றன.

டில்லியில் இன்று (ஜன.,26) நடைபெற்ற குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு கலாச்சார மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், அலங்கார ஊர்திகள் வடிவமைப்பு, மையக்கருத்து ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, இந்த ஆண்டு 22 அணிவகுப்பு ஊர்திகளுக்கு பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதில், 6 மத்திய அமைச்சகம் மற்றும் துறைகளின் ஊர்திகளும், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, உள்ளிட்ட 16 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச ஊர்திகளும் இடம்பெற்றுள்ளன.


அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளும் அதின் கருப்பொருளும்:


கைத்தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை சார்பிலான ஊர்தியில் ஸ்டார்ட்அப் இந்தியாவை மையப்படுத்தப்பட்டது.

கப்பல் அமைச்சகம் சார்பில், 150 ஆண்டுகளை நிறைவு செய்த கோல்கட்டா துறைமுக அறக்கட்டளையை குறிக்கும் வகையிலான ஊர்தி வடிவமைக்கப்பட்டிருந்தது. (தற்போது ஜனசங் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பெயராக மாற்றப்பட்டது).

நிதிச் சேவைத் துறையின் ஊர்தியில் நிதி சேர்க்கும் திட்டத்தின் சாதனைகளை எடுத்துக்காட்டியது.

இவைத்தவிர குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் சார்பிலும் ஊர்திகள் அணிவகுத்து சென்றன.

மாநிலங்கள் சார்பில் அணிவகுத்த ஊர்திகள்:


தமிழ்நாடு: தமிழகத்தின் கலாச்சாரத்தை பறைச்சாற்றும் விதமாக அய்யனார் சிலையும், பாரம்பரிய நடனமும் இடம்பெற்றது.

சட்டீஸ்கர்: நகைகள் / ஆபரணங்கள் மற்றும் கலைகளை சித்தரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஊர்தியில் 'கக்ஸார்' நடனமாடி சென்றனர்.
Advertisement


கோவா: கடற்கரை மற்றும் கடலோர மக்களின் பல்லுயிர் மற்றும் வாழ்வாதாரங்களை குறிக்கும் வகையிலான ஊர்தியில் ஷானயா டெசாய் ( 5 வயது), மற்றும் தனிஷ் நாயக் (3 வயது) என இரண்டு இளம் கலைஞர்கள் இடம்பெற்றனர்.
குஜராத்: குஜராத் மாநிலத்தின் கருப்பொருள் 11ம் நூற்றாண்டில் முதலாம் பீம்தேவ் மன்னரின் நினைவாக படானில் ராணி உதயமதி கட்டிய 'ராணி கி வாவ்' மற்றும் பாரம்பரிய படோலா சேலை அணிந்த கிராமிய பெண்ணின் சிலையும் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், அந்த ஊர்தியில் நாட்டுப்புற கலாச்சாரத்தை உணர்த்துவது போன்ற கலைஞர்களின் நடனம் இடம்பெற்றது.

காஷ்மீர்: யூனியன் பிரதேசமாக முதன்முறையாக கலந்துகொண்டது. இந்த ஊர்தியின் முன்னால் ஒரு நெசவாளர், நடுவில் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், பின்னால் டோக்ரா மற்றும் காஷ்மீரி நாட்டுப்புற கலாச்சாரம் ஆகியவற்றை வெளிப்படுத்தியது.

மேகாலயா: மேகாலயாவின் முக்கிய சுற்றுலாத்தளமான டவுள் டக்கர் லிவ்விங் பிரிட்ஜ் வடிவமைக்கப்பட்டது.

ஒடிசா: சிவன், விஷ்ணு இருவரையும் வணங்கும் லிங்கராஜாவின் புகழ்பெற்ற ருகுண ராத் யாத்திரையை சித்தரிக்கப்பட்டிருந்தது.
பஞ்சாப்: குருநானக் தேவ்-ன் 550வது பிறந்தாளை கருப்பொருளாக கொண்ட ஊர்தியில் சீக்கிய குருவின் மனித கொள்கைகளை எடுத்துக்காட்டியது.

ராஜஸ்தான்: 2019ம் ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய குறிச்சொல்லை பெற்ற வால்ட் சிட்டி போல் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த ஊர்தியில் நாட்டுப்புற பாடல்கள் மற்றும் நடனங்கள் மூலம் கட்டடக்கலை, கலாசாரத்தை பிரதிப்பலித்தன.

இவைத்தவிர, அசாம், தெலுங்கானா, உத்தரபிரதேசம், ஆந்திரா, ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநில ஊர்திகளும் பங்கேற்றன.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
26-ஜன-202015:28:06 IST Report Abuse
Allah Daniel ச்சே...நம்ம சுடலை நின்னு, கம்பிரமா கம்பு சுத்தி, கொடியேத்தவேண்டிய எடுத்துல, யாரோ நின்னு ஏத்துறதை பார்த்தா பகுத்தறிவு ‘பம்புசெட்டுங்க’ மனசு எப்படி வலிக்க போகுதோ...
Rate this:
Share this comment
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
26-ஜன-202015:07:24 IST Report Abuse
Allah Daniel நாம எல்லாம் இன்னைக்கு குடியரசு தினம் கொண்டாடும் பொது, சுடலை (மைண்டு வாய்ச்சு) 'என்னடா இது...Jan 15 முடிஞ்ச குடியரசு தினத்தை இன்னைக்கு கொண்டாடிட்டு இருக்கானுங்க'🤣😂🤣
Rate this:
Share this comment
Cancel
jysen - Madurai,இந்தியா
26-ஜன-202015:01:22 IST Report Abuse
jysen I liked the Iyyanar statue forming the whole part of the Tamilnadu au. Anti hindu vocalists like Veeramani, Christian David Vaiko , Stalin( son of Karunanithi) and thiruma might've been offed seeing the Iyyanar statue.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X