பொது செய்தி

இந்தியா

சீனாவில் இந்தியர்களின் நலனை கண்காணிக்கிறோம்: ஜெய்சங்கர்

Updated : ஜன 26, 2020 | Added : ஜன 26, 2020 | கருத்துகள் (12)
Advertisement
Coronavirus, Monitor, Indian, China, ForeignMinister, VirusScare, jaishankar, கொரோனாவைரஸ், கொரோனா, இந்தியர்கள், சீனா, வெளியுறவுஅமைச்சர், ஜெய்சங்கர்,

புதுடில்லி: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் உள்ள இந்தியர்களின் நலன் மற்றும் உடல் ஆரோக்கியத்தை, அங்குள்ள நமது தூதரகம் மூலம் கண்காணித்து வருகிறோம் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரசால் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். சீன அரசின் கணக்குப்படி 1,287 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 237 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த வைரஸ் அதிகம் பாதிப்புள்ள வூஹான் நகரில் 250 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை நாட்டிற்கு அனுப்பி வைக்கும்படி மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், சீனாவில் உள்ள இந்தியர்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை பெய்ஜிங்கில் உள்ள நமது தூதரகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. அங்குள்ள சூழ்நிலை குறித்து மேலும் தெரிந்து கொள்ள இந்திய தூதரகத்தை அணுகும்படி தெரிவித்திருந்தார்.முன்னதாக, சீனாவில் உள்ள இந்திய தூதரகம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு
இந்தியர்களின் பாதுகாப்புக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, சீன அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். நமது இரண்டு ஹாட்லைன்களும் இயங்கி வருகிறது. இந்தியர்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறோம் என தெரிவிக்கப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kamal -  ( Posted via: Dinamalar Android App )
27-ஜன-202005:46:47 IST Report Abuse
kamal Let them die there. Dont bring them to india and dont spread the virus here. They dont need india at any cause thats why these sharks go to oversea studies and earn money there. So LET THEM DIE THERE.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
27-ஜன-202005:07:06 IST Report Abuse
 nicolethomson வ்வுஹான் செல்லுவதற்கு பல நாடுகள் தடைவிதித்து வருகின்றன நமது நாடு ஏன் இன்னமும் தடை விதிக்க வில்லை
Rate this:
Share this comment
Cancel
raman - Madurai,இந்தியா
27-ஜன-202003:07:46 IST Report Abuse
raman சீனா பாதிக்கப்பட்ட யாரையும்,அந்த ஊர்களை விட்டு வெளியே அனுப்பவில்லை. ஒரு மாணவன் தான் .சீன விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பி விடப்பட்டதாக தான் அப்பாவுக்கு செய்தி அனுப்பியுள்ளார். இந்நிலையில் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்க முடியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X