பொது செய்தி

இந்தியா

ஆதரவற்றோர் உடல்களை அடக்கம் செய்வது ஏன்?; பத்மஸ்ரீ விருது பெறும் முகமது ஷெரிப்

Updated : ஜன 26, 2020 | Added : ஜன 26, 2020 | கருத்துகள் (38)
Advertisement
PadmaAwards, MohdSharif, PadmaShri, Cremating_Unclaimed_Bodies, Ayodhya, அயோத்தி, ஆதரவற்றோர், உடல்அடக்கம், இறுதிச்சடங்கு, பத்மவிருதுகள், பத்மஸ்ரீ, முகமதுஷெரிப்

அயோத்தி: பத்மஸ்ரீ விருது பெறும் முகமது ஷெரிப், ஆதரவற்ற பல்லாயிரம் உடல்களை அடக்கம் செய்து வருகிறார். இதற்கு தனது மகன் இறப்பை காரணமாக கூறியுள்ளார்.

கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு இந்தாண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலை, மத்திய அரசு நேற்று (ஜன.,25) அறிவித்தது. இதில், 7 பேருக்கு பத்ம விபூஷண், 16 பேருக்கு பத்ம பூஷண் மற்றும் 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டது. பத்மஸ்ரீ விருது பெறுபவர்களில் ஒருவரான முகமது ஷெரிப் (80), உ.பி.,யில் பல ஆதரவற்ற உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளார். இவரின் சேவையை அறிந்த மாநில அரசு, பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.






யார் இந்த முகமது ஷெரிப்?


உ.பி., மாநிலம் அயோத்தியில் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை வைத்திருந்தார். 27 ஆண்டுகளாக ஆதரவற்று இறப்பவர்களை ஜாதிமத பேதமின்றி தனது சொந்த செலவில் இறுதி சடங்கு செய்து வந்துள்ளார். இதுவரையில் பல்லாயிரம் உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளார். இது குறித்து ஷெரிப் கூறியதாவது: 1993ம் ஆண்டில் சுல்தான்பூரில் வேலைக்கு சென்ற என் மகன் கொலை செய்யப்பட்டான்.




ஆதரவற்றவர் என கருதி போலீசார் அடக்கம் செய்தனர். ஆனால் அதுப்பற்றி எனக்கு ஒரு மாதம் கழித்து தான் தெரியவந்தது. அப்போது தான் ஆதரவற்றவர்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன். இதுவரை 3000 ஹிந்து மற்றும் 2500 முஸ்லிம் ஆதரவற்றவர்களின் இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Thoothukudi,இந்தியா
28-ஜன-202007:12:18 IST Report Abuse
Raja முஸ்லிம்களுக்கு எதிரான கட்சின்னு பாஜகவை குறைசொல்லுபவர்கள் கவனிக்கவும். இவரை பரிந்துரை செய்தது யோகி. விருது வழங்கியது மோடி. தமிழ்நாட்டுல எந்த கட்சியாவது இது பத்தி பேசுவாங்களா? நல்லவர்களை கௌரவிக்க மோடி தயங்குவது இல்லை.
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
27-ஜன-202022:29:01 IST Report Abuse
bal பாவம் மனுஷன்...இவர் மனநிலை புரியுது...நாமும் துணை நிற்போம்.....
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
27-ஜன-202011:32:09 IST Report Abuse
konanki ஆதரவற்றவர்கள், இயற்கை சீற்றங்களினால் உயிரிழப்பு ஏற்படும் போது அவர்களின் இறுதி கடன் செய்பவர் கள் அஸ்வமேத யாகம் செய்யும் மகச்சக்தி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X