பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் பரிசளிப்பு விழா

Added : ஜன 26, 2020
Share
Advertisement

புதுச்சத்திரம்: பெரியப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சாமியார்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இணைந்து பங்கேற்ற, பரிமாற்ற திட்ட நிகழ்ச்சி நடந்தது. பரங்கிப்பேட்டை வட்டார கல்வி அலுவலர் நடராஜன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுலர் மணிவாசகம், ஊராட்சிமன்ற தலைவர் அர்ஜூனன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி வரவேற்றார்.கராத்தே, வினாடி வினா, கட்டுரை, நாளிதழ் வாசித்தல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.மாணவர்கள் விவசாய நிலங்கள், வங்கி உள்ளிட்ட இடங்களுக்கு நேரடியாக களப்பயணம் செய்து, அவற்றின் செயல்பாடுகள், பயன்கள் குறித்து அறிந்துகொண்டனர்.மாணவ, மாணவிகள் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. கனரா வங்கி மேலாளர் (பொறுப்பு) முபாரக், ஆசிரியர் பயிற்றுநர் ஜெயபரணி, ஆசிரியர் சுப்ரமணியம், துணை தலைவர் மணிகண்டன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X