எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

Added : ஜன 26, 2020 | கருத்துகள் (1)
Share
 எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய, நகர அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

ஒன்றிய செயலர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ. முருகுமாறன் முன்னிலை வகித்தார். ஒன்றிய சேர்மன் லதா ஜெகஜீவன்ராம் வரவேற்றார். கிழக்கு மாவட்ட செயலர் எம்.எல்.ஏ. பாண்டியன் பேசுகையில், 'அ.தி.மு.க. ஆட்சியில் ஸ்ரீமுஷ்ணம் தனி தாலுகாவாகவும், ஒன்றியமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் பயனடைய ஜெ. முதல்வராக இருந்தபோது கொண்டுவந்த பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தற்போதுள்ள முதல்வர் இ.பி.எஸ் ஆயிரம் ரூபாயாகஉயர்த்தி கொடுத்துள்ளார்.தமிழகத்தில் நடந்த குடிமராமத்து பணிகளால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது. தமிழ்நாட்டில் இனி எந்த நடிகரும் ஆட்சிக்கு வரமுடியாது. நாட்டில் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் எல்லாம் காணாமல் போனது தான் வரலாறு.முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் ஓ.பி.எஸ். இருவரும் ஆல மரம் போல இருந்து கட்சியினரை அரவணைத்து செல்வதால், அ.தி.மு.க., வை யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாது' என்றார்.மாவட்ட கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட விவசாய பிரிவு செயலர் குணசேகரன், எம்.ஆர்.கே. சர்க்கரை ஆலை சேர்மன் பாலசுந்தரம், ஒன்றிய துணை சேர்மன் திருச்செல்வம், தகவல் தொழில் நுட்பபிரிவு செயலர் மணிகண்டன், அவைத்தலைவர் சின்னப்பன், தேத்தாம்பட்டு வெங்கடேசன் பலர் கலந்து கொண்டனர். நகர செயலர் பூமாலை.கேசவன் நன்றி கூறினார்.வேப்பூர் நல்லூர் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.நல்லூர் அ.தி.மு.க., ஒன்றிய செயலர் பச்சமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட மருத்துவரணி பொருளாளர் சம்பத், கூட்டுறவு சங்க தலைவர்கள் கருப்பையா, ஆறுமுகம், டென்சிங், கவுன்சிலர் மனோகரன், ஊராட்சி தலைவர் புஷ்பா குமரேசன் முன்னிலை வகித்தனர். முன்னாள் சேர்மன் தங்கராஜன் வரவேற்றார்.அ.தி.மு.க., அமைப்பு செயலர் முருகுமாறன் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் ராமு, விருத்தாசலம் கலைச்செல்வன் எம்.எல்.ஏ., பேச்சாளர் ஜெயதேவி பங்கேற்றனர். விருத்தாசலம் நகர செயலர் சந்திரகுமார், ஜெ., பேரவை கிளை செயலர் முருகன், மாவட்ட பிரதிநிதி அருள்தாஸ், ஊராட்சி தலைவர்கள் சவுந்தரராஜன், சேகர் பங்கேற்றனர்.பெண்ணாடம் பெண்ணாடம் அடுத்த இறையூரில், நல்லுார் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது. நல்லூர் தெற்கு ஒன்றிய செயலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் அருண்மொழித்தேவன், மாவட்ட பொருளாளர் ராமு, பொதுக்குழு உறுப்பினர் காரைச்செழியன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி சுப்ரமணியன், அரசு வழக்கறிஞர் செந்தில் சரவணன் முன்னிலை வகித்தனர்.இறையூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் ரத்தினசபாபதி வரவேற்றார். ஒன்றிய பொருளாளர் சேகர், ஊராட்சி செயலர்கள் கொசப்பள்ளம் அர்ச்சுனன், கூடலுார் செந்தில்நாதன், தீவளூர் பாலசுப்ரமணியன், மேலவை பிரதிநிதி ரவிக்குமார், கிளை செயலர்கள் சவுந்திரசோழபுரம் செல்வராசு, இறையூர் ராஜேந்தர், ராஜேந்திரன் பங்கேற்றனர்.தலைமை பேச்சாளர் நடராஜன் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட பிரதிநிதி பத்மாவதி நன்றி கூறினார்.புவனகிரிஎம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் புவனகிரி பஸ் நிலையம் அருகில் நடந்தது.ஒன்றிய செயலர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். நகர செயலர் செல்வக்குமார் வரவேற்றார். மாவட்ட ஜெ., பேரவை செயலர் உமாகேஸ்வரன், மாவட்ட சேர்மன் திருமாறன் துவக்கவுரை நிகழ்த்தினர். ஒன்றிய அவை தலைவர் செல்வராசு, மாணவரணி செயலர் பிரித்திவி, எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலர் செழியன், இணை செயலர் சங்கர்,ஜெயராமன் முன்னிலை வகித்தனர். தலைமை பேச்சாளர்கள் தில்லைகோபி, தனசேகரன், பாண்டியன் எம்.எல்.ஏ,. பேசினர்.மாவட்ட இணைசெயலர் செஞ்சிலட்சுமி, கீரை ஒன்றிய செயலர் ஜெயபாலன், சேத்தியாத்தோப்பு கூட்டுறவு ஆலை சங்க துணை தலைவர் விநாயகமூர்த்தி, ஊராட்சி செயலர் ஜெயசீலன், பரங்கிப்பேட்டை சேர்மன் கருணாநிதி, கூட்டுறவு சங்க தலைவர்கள் கருப்பன், சரவணன், துணை சேர்மன்கள் வாசுதேவன்,காஷ்மீர் செல்வி விநாயகம், கவுன்சிலர்கள் மணலுார் லதா ராேஜந்திரன், ராமதாஸ், முன்னாள் கவுன்சிலர் நாகராஜன்,ஜெ.,பேரவை இளவரசன் பங்கேற்றனர்.சேத்தியாத்தோப்பு நகர செயலர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X