பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ்கள் நின்று செல்லும்

Added : ஜன 26, 2020
Share
Advertisement

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில், கலைச்செல்வன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டார்.அரசு வழக்கறிஞர் விஜயகுமார், உதவி தலைமை ஆசிரியர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் செல்வகுமாரி வரவேற்றார். கலைச்செல்வன் எம்.எல்.ஏ., தேசிய கொடியேற்றி வைத்தார்.அப்போது, அரசு பஸ்கள் நின்று செல்வதில்லை; பஸ் பாசில் செல்லும் மாணவிகளை போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தரக்குறைவாக பேசுகின்றனர் என பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.போக்குவரத்துக் கழக மேலாளரை தொடர்பு கொண்ட எம்.எல்.ஏ., அனைத்து பஸ்களும் பெண்கள் பள்ளி வாசலில் நின்று செல்லவும், பஸ் பாஸ் மாணவிகளை அவதுாறாக பேசக் கூடாது எனவும் அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X