பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு கிராம சபை கூட்டம்

Added : ஜன 26, 2020
Advertisement
 சிறப்பு கிராம சபை கூட்டம்

புவனகிரி: மேல்புவனகிரி ஒன்றியம் கீழமூங்கிலடி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.கவுன்சிலர் ராமதாஸ், துணைத் தலைவர் தீபா காசிமுருகன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் விஜய் ஆனந்த் வரவேற்றார். ஊராட்சி தலைவர் சுடர்விழி அன்பரசன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் நடந்த கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி பகுதியில் உள்ள பழுதடைந்த அரசு சார்ந்த கட்டடங்களை பழுது நீக்கம் செய்தல், வாய்க்கால்கள்,குளங்களை துார்வாரி நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாத்தல், கீழமூங்கிலடி- மண்டபம் இணைப்பு சாலையில் பாசிமுத்தான் ஓடையில் தரைப்பாலம் அமைத்தல், தரமற்ற சாலைகளை சரிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.வார்டு உறுப்பினர்கள் ரஞ்ஜிதா, மதிவாணன்,கென்னடி, மகளிர் சுய உதுவி குழுவினர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X