பொது செய்தி

தமிழ்நாடு

கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு

Added : ஜன 26, 2020
Advertisement
 கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு

மங்கலம்பேட்டை: விருத்தாசலம் அருகே, ஊராட்சியில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, கிராம சபை கூட்டத்தை மக்கள் புறக்கணித்ததால் பரபரப்பு நிலவியது. குடியரசு தினத்தையொட்டி, விருத்தாசலம் அடுத்த எருமனுார் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் சவுமியா தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் தங்கதுரை கடந்தாண்டு அக்டோடர் 1ம் தேதி முதல், டிசம்பர் 31ம் தேதி வரை, ஊராட்சியில் நடந்த வரவு, செலவு கணக்குகளை, பொதுமக்கள் முன்னிலையில் படித்தார்.அதில், தெருவிளக்கு, குடிநீர் குழாய் பழுதுநீக்கம், கழிவுநீர் வாய்க்கால் துார் வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ரூ.60 லட்சம் செலவினம் ஆனதாக கணக்கு தாக்கல் செய்தார். அதில், கடந்த அக்டோபர் மாதம் மட்டும் தெருவிளக்கு வாங்கியதற்காக ரூ.2.25 லட்சம் செலவாகியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள், எந்த மின் கம்பங்களிலும் தெருவிளக்குகள் எரியாத நிலையில், தெரு விளக்கு வாங்குவதற்கு மட்டும் இவ்வளவு பெரிய தொகை செலவழிக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ரூ.60 லட்சம் செலவாகி உள்ளது என குறிப்பிட்டுள்ள நிலையில், ரூ.60 ஆயிரம் கூட ஊராட்சிக்கு செலவு செய்யவில்லை. எனவே, சிறப்பு கிராமசபை கூட்டத்தை கூட்டி, அதில், அனைத்து துறை அதிகாரிகளும் வந்து விளக்கம் தந்தால்தான் தீர்மானத்தில் கையெழுத்து ேபாடுவோம் என பொதுமக்கள் கூறி, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X