பொது செய்தி

தமிழ்நாடு

2025ல் மணிக்கு 2.10 கோடி யூனிட் மின் உற்பத்தி: என்.எல்.சி., சேர்மன் தகவல்

Added : ஜன 26, 2020
Advertisement
 2025ல் மணிக்கு 2.10 கோடி யூனிட் மின் உற்பத்தி:  என்.எல்.சி., சேர்மன் தகவல்

நெய்வேலி: வரும் 2025ம் ஆண்டிற்குள் நிறுவனத்தின் மின்உற்பத்தி அளவினை, மணிக்கு 2 கோடியே 10 லட்சத்து 11 ஆயிரம் யூனிட்டாக (21,011 மெகாவாட்) அதிகரிக்க வேண்டும் என்ற இலக்கினை என்.எல்.சி., இந்தியா நிறுவனம் நிர்ணயித்திருப்பதாக, சேர்மன் ராக்கேஷ் குமார் கூறினார்.

நெய்வேலியில் நடந்த குடியரசு தின விழாவிற்கு என்.எல்.சி., மனிதவளத்துறை இயக்குநர் விக்ரமன் தலைமை தாங்கினார். இயக்குநர்கள் நாதள்ள நாக மகேஸ்வரராவ், பிரபாகர் சவுக்கி, ஷாஜி ஜான் முன்னிலை வகித்தனர். என்.எல்.சி.,சேர்மன் ராக்கேஷ் குமார் தேசியக்கொடியேற்றி வைத்து பேசியதாவது:நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரியில் செயல்படும் அனல்மின் நிலையங்களுக்கு மாற்றாக அமைக்கப்பட்டு வரும், சூரியஒளி மற்றும் காற்றாலை மின் நிலையங்களின் உற்பத்தி அளவினை, 2022ம் ஆண்டிற்குள், நாட்டின் மொத்த மின்உற்பத்தி நிறுவு திறனில், 40 சதவிகித அளவிற்கு உயர்த்த வேண்டும் என, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2030ம் ஆண்டிற்குள் 45 சதவீத அளவிற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது.குறிப்பாக, மணிக்கு 17 கோடியே 50 லட்சம் யூனிட் (175 ஜிகாவாட்) புதுப்பிக்கவல்ல ஆற்றலை உற்பத்தி செய்யவேண்டும் என்ற இலக்கினை ஏற்கனவே நிர்ணயித்துள்ளது. இதன்மூலம், அனல்மின் நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் கரியமில வாயு குறைக்கப்படும். பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாத காரணியாக திகழும் பசுமை மின்சக்தியின் உற்பத்தியும் அதிகரிக்கும்.இதன் ஒரு கட்டமாக, வரும் 2025ம் ஆண்டிற்குள் நிறுவனத்தின் மின் உற்பத்தி அளவினை, மணிக்கு 2 கோடியே 10 லட்சத்து 11 ஆயிரம் யூனிட்டாக (21,011 மெகாவாட்) அதிகரிக்க வேண்டும் எனவும், அவற்றில், 4251 மெகாவாட் புதுப்பிக்கவல்ல ஆற்றல்துறை சார்ந்ததாக அமைய வேண்டும் என்ற இலக்கினை என்.எல்.சி., இந்தியா நிறுவனம் ஏற்கனவே நிர்ணயித்துள்ளது.இன்றைய நிலையில், நிறுவனத்தின் புதுப்பிக்கவல்ல ஆற்றல் உற்பத்தி அளவு 1404 மெகா வாட்டாகவும், அனல்மின் உற்பத்தி அளவு 4640 மெகா வாட்டாகவும் அதிகரித்தன் மூலம், மொத்த மின்உற்பத்தியானது 6,044 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது. இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் என்.எல்.சி.,யில் பணிபுரிந்து வரும் மூத்த தொழிலாளி பாப்பம்மாள் மற்றும் அவரது கணவர் குப்புசாமி கவுரவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X