தாடியுடன் ஓமர் அப்துல்லா; மம்தா, யெச்சூரி கவலை

Updated : ஜன 27, 2020 | Added : ஜன 27, 2020 | கருத்துகள் (38)
Advertisement

கோல்கட்டா : வெள்ளை தாடியுடன் உள்ள ஓமர் அப்துல்லாவின் புகைப்படம், சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அதை பார்த்து கவலை தெரிவித்துள்ளார்.







வீட்டுக்காவல்


ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, 370 சட்டப்பிரிவை நீக்கி, மாநிலத்தை, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து, மத்திய பா.ஜ., அரசு, அறிவித்தது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான, பரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.






இரு யூனியன் பிரதேசங்களிலும், பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், பல மாதங்களாக காவலில் உள்ள முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லாவின் சமீபத்திய புகைப்படம், டுவிட்டர் சமூக வலைதளத்தில் பரவியது. பனி பொழிவுக்கு நடுவே, ஓமர் அப்துல்லா, வெள்ளை தாடியுடன் இருக்கும் காட்சி அதில் பதிவானது.






மோசமான போக்கு

அந்த புகைப்படத்தைப் பார்த்து, மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, கவலை தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இந்த புகைப்படத்தில், என்னால், ஓமர் அப்துல்லாவை அடையாளம் காண முடியவில்லை. இது, என்னை வருத்தமடைய செய்துள்ளது. ஜனநாயக நாட்டில் இப்படி நடப்பது துரதிர்ஷ்டவசமானது. இது எப்போது முடியும்? இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.





மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் யெச்சூரி, கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஓமர் அப்துல்லா, எந்த குற்றமும் செய்யாமல், பல மாதங்களாக காவலில் வைக்கப்பட்டுள்ளார். மத்திய பா.ஜ., அரசின் மோசமான போக்கை, இந்த புகைப்படம் காட்டுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
27-ஜன-202020:55:01 IST Report Abuse
Swaminathan Chandramouli இவர் உமர் அப்துல்லா இல்லை வேறு ஒரு மனிதர் , நன்றாக உற்று பாருங்கள்
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
27-ஜன-202019:45:56 IST Report Abuse
oce குடி உரிமை அடையாளமா இந்த தாடி மீசை.
Rate this:
Share this comment
Cancel
27-ஜன-202016:09:42 IST Report Abuse
ravichandran இந்த ஆளுக்கு தாடி வளர்த்தால் மம்தாவுக்கு ஏன் சோகம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X