'பாக்., குடிமகனாக இருந்தவருக்கு பத்மஸ்ரீ விருதா?' காங்., கண்டனம்

Updated : ஜன 27, 2020 | Added : ஜன 27, 2020 | கருத்துகள் (44)
Share
Advertisement

மும்பை : பத்மஸ்ரீ விருதுக்கு, 'பியானோ' வாத்திய கலைஞர் அட்னான் சமி தேர்வு செய்யப்படுவதற்கு, எம்.என்.எஸ்., எனப்படும், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.



latest tamil news



இந்த ஆண்டு, பத்மஸ்ரீ விருதுக்கு, 118 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் அட்னான் சமியும் ஒருவர். இந்நிலையில், ராஜ் தாக்கரேவின், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் திரைப்படப் பிரிவு தலைவர் அமே கோப்கர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ''அட்னான் சமி, பாகிஸ்தான் குடிமகனாக இருந்தவர். கடந்த, 2016ல் தான், அவர், இந்திய குடியுரிமை பெற்றுள்ளார். பாகிஸ்தான் குடிமகனாக இருந்தவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்குவது, அந்த விருதுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அவமானம்.


latest tamil news



மத்திய அரசு இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும்,'' என, அமே கோப்கர் கூறியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் கூறுகையில், ''அட்னான் சமி, சிறந்த இசைக் கலைஞர் என்பதில் சந்தேகமில்லை. எனினும், பாகிஸ்தான் குடிமகனாக இருந்தவருக்கு, பத்மஸ்ரீ விருது வழங்குவதை ஏற்க முடியாது,'' என்றார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-ஜன-202013:53:36 IST Report Abuse
தமிழ்வேல் அவருதான் இந்தியானா ஆயிட்டாரே...
Rate this:
Share this comment
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
27-ஜன-202013:33:08 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை பாரதம் கடந்த 6 வருடங்களாக உலக அரங்கில் தலை குனிவை சந்தித்து கொண்டுதான் இருக்கிறது. அதில் இதுவும் ஒன்று.
Rate this:
Share this comment
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜன-202014:58:13 IST Report Abuse
Yaro Oruvanஆத்தாடி.. வந்துட்டாரு புள்ளி ராசா.. கும்முடிபூண்டில இருக்குற நீர் ஒலக அரங்கை பத்தி பேசும்போது வேற நாட்டுல இருக்குற நான் பேசுறது தப்பில்ல - உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கிறது திரு மோடி அவர்கள் பிரதமர் ஆனா பிறகு.. பேர மாத்துனாலும் குல்லா காட்டி கொடுத்துருதேப்பா.....
Rate this:
Share this comment
Cancel
Anjankumar Raghavan - Chennai,இந்தியா
27-ஜன-202012:12:25 IST Report Abuse
Anjankumar Raghavan நமது சுதந்திரப் போராட்ட வீரர் அப்துல் கஃபார் கான் 1987 இல் ராஜீவ் தலைமையிலான இந்திய அரசு, நாட்டின் மிக உயரிய் விருதான பாரத ரத்னா வழங்கிய போது அப்துல் கஃபார் கான் பாகிஸ்தானியக் குடிமகன் தற்போது அட்னான் சமி இந்தியக் குடிமகன். ஒருகாலத்தில் பாகிஸ்தா குடிமகனாக இருந்ததால் என்ன கெட்டுப் போனது? வரலாறு அறியாத தற்போதைய காங்கிரஸ் தலைவர்களால் நாட்டுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்ந்து அவமானம் ஏற்படுகிறது.
Rate this:
Share this comment
s.rajagopalan - chennai ,இந்தியா
27-ஜன-202013:24:12 IST Report Abuse
s.rajagopalanஇது வேண்டுமென்றே காங்கிரசுக்கு அமித் ஷா வைத்த 'செக்' போல் இருக்கிறது அது சரி ...இது வரை கொடுத்த விருதுகளெல்லாம் தகுதி உள்ளவர்களுக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று அடித்து சொல்ல முடியுமா ??? முரசொலி மாறன் .........?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X