பொது செய்தி

இந்தியா

மஹா.,வில் 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் சிவ போஜனம் திட்டம்

Updated : ஜன 27, 2020 | Added : ஜன 27, 2020 | கருத்துகள் (12)
Advertisement

மும்பை : மஹாராஷ்டிரா மாநிலத்தில், 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும், 'சிவ போஜனம்' திட்டம், குடியரசு தின விழாவை முன்னிட்டு, நேற்று துவங்கி வைக்கப்பட்டது.






மஹாராஷ்டிரா மாநிலத்தில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, காங்., மற்றும் தேசியவாத காங்., கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.சட்டசபை தேர்தலில், ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் மதிய உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என, சிவசேனா உறுதியளித்தது.அதன்படி, ௭௧வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, மாவட்ட தலைநகரங்களில் பொதுமக்களுக்கு, 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டம், நேற்று துவக்கப்பட்டது.

மும்பையில், மாவட்ட பாதுகாப்பு அமைச்சர் அஸ்லம் ஷேக், 10 ரூபாய்க்கு மதிய உணவு திட்டத்தை துவக்கி வைத்தார். இதேபோல், பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், இந்த உணவகங்களை துவக்கி வைத்தனர்.'சிவ போஜனம்' என அழைக்கப்படும் இந்த மதிய உணவு திட்டத்தில், 10 ரூபாய்க்கு இரண்டு சப்பாத்தி, சாதம், பருப்பு மற்றும் பொரியல் ஆகியவை, பகல், 12:௦௦ முதல், 2:௦௦ மணி வரை வழங்கப்படும்.முதல் கட்டமாக, ஒரு உணவகத்தில், 5௦௦ பேர் வீதம் உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.





ஏழை மக்கள் அதிகம் கூடும், மாவட்ட மருத்துவமனைகள், பேருந்து, ரயில் நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் உணவகங்கள் துவக்கப்பட்டுள்ளன.சிவ போஜனம் திட்டத்திற்கு, நகர் பகுதிகளில் ஒரு மதிய உணவுக்கு, 5௦ ரூபாயும்; புறநகர் பகுதிகளில், 35 ரூபாயும் செலவாகும் என்ற நிலையில், மூன்று மாதங்களுக்கு, 6.4 கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என, கணக்கிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murali - Chennai,இந்தியா
27-ஜன-202020:18:39 IST Report Abuse
murali சிவ போஜனம் இது முஸ்லிம்ஸ்க்கு பிடிக்காதே
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
27-ஜன-202014:01:18 IST Report Abuse
தாண்டவக்கோன் 'சிவ போஜனம்' 👌👌👌👏👏👏😂😂😂
Rate this:
Share this comment
Cancel
27-ஜன-202012:55:10 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் காங்கிரஸிற்கு ஆப்புக்கு மேல் ஆப்பு வைக்கிறார்கள் , இதே ஒரு ஒரு அரசு சிவபோஜனம் என்று பெயர் வைத்திருந்தால் வானத்திற்கும் பூமிக்கும் குதித்திருப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X