கொரோனா வைரஸ் தாக்குதல்: சீனாவில் 80 பேர் பலி

Updated : ஜன 27, 2020 | Added : ஜன 27, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
coronavirus,china,death,கொரோனா_வைரஸ், சீனா, பலி

பீஜிங் : வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் பலி எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 2,744 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற சீன நகரங்களில் மட்டுமின்றி அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது. கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து தான் இந்த வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வுஹான் நகருக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், பஸ், ரயில், விமானம் என அனைத்து போக்குவரத்துக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


latest tamil news



இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2,744 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் வேகமாக பரவி வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-ஜன-202015:32:07 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் என்னென்ன விலங்கை சாப்பிடலாம் என்று நம் முன்னோர்கள் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள் , மேலும் அசைவம் வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை மட்டுமே உண்டார்கள் , மற்ற நாட்களில் சைவம் தான் , வீட்டு விஷேஷங்களிலும் , பண்டிகைகளிலும் சைவம் தான் பிரதானம். ஆகவே தொற்றுநோய்கள் கட்டுக்குள் இருந்தன. தற்போது நகரங்களில் பெரும்பான்மையான உணவு அசைவம் என்று மாறிய பிறகு ஏராளமான வியாதிகள் வருகின்றன உடல் எடை , கொழுப்பு , சக்கரை , ரத்த அழுத்தம் , கேன்சர் போன்றவை. சீனாவில் எல்லா விலங்குகளையும் , புழுபூச்சிகளையும் சாப்பிடுவதால் நோய்கள் மிக அதிகம்.
Rate this:
Share this comment
Cancel
mohan - chennai,இந்தியா
27-ஜன-202010:28:14 IST Report Abuse
mohan இந்தியா பாரம்பரியம், காய்கறி உணவு சாப்பாடு, தினமும், கோவில்களில் கொடுக்கப்டும், மஞ்சள், துளசி, கலந்த தீர்த்தம், ஆகியவை, சின்ரோம், வியாதிகள் வராமல் தடுத்தன... என்றைக்கு நாத்தீக்க வாதிகள், எல்லாம் பொய் என்று ஆரம்பித்தனரோ, அன்றே இந்தியாவையும், வியாதிகள்( சுகர், காமாலை, கான்செர் இன்னும் பல) பீடிக்க ஆரம்பித்து விட்டன...சீன, காய்கறிகளுக்கு மாறினால் இவ்வளவு தீவிரமான வியாதிகள் பரவ வாய்ப்பில்லை....
Rate this:
Share this comment
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
27-ஜன-202009:29:05 IST Report Abuse
Nathan 150,00,00,000 - கோடி பேர்களில் எண்பது ஒரு கவுண்டே இல்லை. இது வரும் , கொஞ்ச நாள் இருக்கும் , போகும். அவ்வளவேதான். அம்மை , காலரா, மலேரியா , பிளேக் போல பெரிய பெரிய ஆட்கொல்லிகளே வந்தது போனது அவ்வளவேதான். இப்போ ஜனத்தொகையை செக் பண்ண யுத்தம் ஒன்றுதான் பாக்கி. மற்ற இயற்கை வழிகளான பஞ்சம், தொற்றுவியாதிகள் தோற்றன .
Rate this:
Share this comment
27-ஜன-202015:27:32 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்உலக மக்கள் தொகை 750 கோடிதான், நீங்கள் எழுதி இருப்பது 150 கோடி கோடி....
Rate this:
Share this comment
Nathan - Hyderabad,இந்தியா
28-ஜன-202015:49:08 IST Report Abuse
Nathanஅது சைனா கணக்கு, கொஞ்சம் ஆதிக்கத்தில். எண்பது கவுண்ட் சைனாவில்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X