கொரோனா வைரஸ்: தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டதா சீனா?

Updated : ஜன 27, 2020 | Added : ஜன 27, 2020 | கருத்துகள் (43)
Advertisement
coronavirus,biowarfare,china,laboratory,கொரோனா_வைரஸ், சீனா

பீஜிங் : சீனாவில் இதுவரை 80 பேரை பலிவாங்கிய கொரோனா வைரஸ், அந்நாட்டின் உயிர் ஆயுதங்கள்(பயோ- வெப்பன்) தயாரிக்கும் ஆய்வு கூடங்களிலிருந்து உருவாகியிருக்கலாம் என செய்திகள் வெளியாகி உள்ளன.

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் 80 பேர் பலியாகி உள்ளனர்; 2,744 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவி வருகிறது. இந்த வைரஸ் எவ்வாறு பரவியது என பல்வேறு ஊகங்கள் வெளியாகிவரும் நிலையில், பயோ-வெப்பன் ஆய்வு கூடம் மூலமாக பரவியிருக்கும் என இஸ்ரேல் உயிரியல் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.





இதுகுறித்து ஆங்கில நாளிதலான 'தி வாஷிங்டன் டைம்ஸ்'க்கு அவர் அளித்த பேட்டியில், 'சீனாவின் வுஹான் நகரில் தான் முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கு தான், பயோ-ஆயுதங்கள் உருவாக்கும் ஆய்வுக்கூடத்தை, சீனா உருவாக்கி இருந்தது. இங்கு ஆபத்தான கிருமிகள் மட்டுமே ஆய்வு செய்யப்படும். இங்கிருந்து தான் கொரோனா பரவியிருக்கும்' இவ்வாறு அவர் கூறினார். இவரது கூற்றை பயோ-வெப்பன் குறித்து அறிந்த பலரும் ஆமோதித்துள்ளனர்.

ஆனால் இக்குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. 'வுஹான் இறைச்சி சந்தையிலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியிருக்கும்; பயோ- வெப்பன் ஆய்வு கூடங்களிலிருந்து இந்த வைரஸ் உருவானதாக அமெரிக்கா தான் விஷம பிரசாரம் செய்து வருகிறது' என சீனா தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
30-ஜன-202005:44:31 IST Report Abuse
meenakshisundaram 'பிரியாணி' கூட்டத்துக்கு இது ஒரு பலத்த அடி ஆகும். இங்கே கட்சிகள் நடத்தும் விழாக்களில் நூற்றுக்கணக்கில் ஆடுகள் பலி ஆவதை பார்க்கிறோம். சில மாதங்களுக்கு முன்னர் கனிமொழி கூட முன்னூறு ஆட்டு பிரியாணி சமையலை படைத்தது பத்திரிக்கை செயதி.
Rate this:
Share this comment
Cancel
mukundan - chennai,இந்தியா
29-ஜன-202010:34:19 IST Report Abuse
mukundan இது ஆய்வு கூடத்தில் இருந்து பரவி இருக்க வாய்ப்பு அதிகம் என்றே தோண்றுகிறது. பொதுவாக மிருகங்களிடம் இருக்கும் கிருமிகள் மனிதர்களை தாக்குவது இல்லை. அந்த மிருகங்கள் மனிதர்களை கடித்தாலோ அல்லது அந்த மிருகத்தை சரியாக சமைக்காமல் சாப்பிட்டாலோ மனிதனை அந்த கிருமி தொற்றும். ஆனால் இந்த கொரோனா கிருமி காற்றில் கலந்து அதன் மூலம் மற்றவர்களை தாக்குகிறது. எந்த விலங்கில் இருந்தும் இப்படி காற்றின் மூலம் தாக்கும் ஒரு கிருமி இருப்பதாக தெரிய வில்லை. சில நாட்களுக்கு முன் நமது நாட்டில் பரவிய niphah வைரஸ்உம் வவ்வால்கள் சாப்பிட்ட எச்சங்களில் இருந்து தான் பரவியதே தவிர காட்டின் மூலம் இல்லை. அப்படியே தாக்கினாலும் இந்த அளவிற்கு வீரியம் அதிகமாக, அதுவும் தாக்கப்பட்ட 4 நாட்களுக்குள் மனிதர்கள் இறப்பது அரிதிலும் அரிது. இந்த கொரோனா கிருமி விலங்கிலிருந்து வந்து இருக்கலாம் ஆனால் அதன் வீரியத்தை இவர்கள் அதிக படுத்தி அதை ஒரு ஆயுதமாக மாற்றி இருக்க பெரும் வாய்ப்பு உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
29-ஜன-202009:57:34 IST Report Abuse
Bhaskaran நேற்று ஒரு காணொளியில் ஒரு சீனர் எலிக்குஞ்சுகளை உயிருடன் சாஸில் தேய்த்து தின்பதை பார்த்தேன் .இவர்களுக்கு கொரோனாமட்டுமென்ன இன்னும் புது புது வைரசுகளும் வரும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X