பொது செய்தி

இந்தியா

சிஏஏ இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்

Updated : ஜன 27, 2020 | Added : ஜன 27, 2020 | கருத்துகள் (49)
Share
Advertisement
புதுடில்லி : குடியுரிமை திருத்த சட்டம் என்பது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என ஐரோப்பிய யூனியனில் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் சிஏஏ கொண்டு வரப்பட்டது மற்றும் காஷ்மீரில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது ஆகியவற்றிற்கு எதிராக ஐரோப்பிய யூனியனில் 6 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இதில் மொத்தமுள்ள 751 உறுப்பினர்களில் 600

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : குடியுரிமை திருத்த சட்டம் என்பது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என ஐரோப்பிய யூனியனில் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.latest tamil news


இந்தியாவில் சிஏஏ கொண்டு வரப்பட்டது மற்றும் காஷ்மீரில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது ஆகியவற்றிற்கு எதிராக ஐரோப்பிய யூனியனில் 6 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இதில் மொத்தமுள்ள 751 உறுப்பினர்களில் 600 க்கும் அதிகமான உறுப்பினர்கள் இந்த தீர்மானங்களை ஆதரித்து ஓட்டளித்தன. இவற்றில் பெரும்பாலானவை கிறிஸ்தவ, சோசலிச அமைப்புக்கள் ஆகும். இவைகள் சிஏஏ உலக நாடுகளில் மிகப்பெரிய நெருக்கடி நிலையை உருவாக்கக் கூடியது என விமர்சித்திருந்தன.


latest tamil news


இந்நிலையில் ஐரோப்பிய யூனியனில் நடந்த விவாதத்தின் போது இந்தியா சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், சிஏஏ என்பது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். னவநாயக முறையில் பார்லி.,யின் இரு அவைகளிலும் வெளிப்படையாக விவாதங்கள் நடத்தப்பட்டு, முறையாக நிறைவேற்றப்பட்டு, அமல்படுத்தப்பட்டதாகும். உலகின் எந்த பகுதியிலும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் மற்றும் அதன் உரிமைகள் குறித்து ஐரோப்பிய யூனியன் கேள்வி கேட்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
joseph ponniah - chennai,இந்தியா
27-ஜன-202020:23:22 IST Report Abuse
joseph ponniah The concern for the refuges of Pakistan,Bangladesh,Rogingya by the European Countries is good. European countries should give citizenship to all these refuges and face the consequences . That will be good.Do not advice India.
Rate this:
Cancel
M.SHANMUGA SUNDARAM - TUTICORIN,இந்தியா
27-ஜன-202015:32:05 IST Report Abuse
M.SHANMUGA SUNDARAM அப்படியானால் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருபது பேரை, நம் நாட்டின் சொந்த செலவில் வரவழைத்து ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் இரண்டு நாள் சுற்றுப்பயணம், கலந்துரையாடல் நடத்தியது ஏன். மறுப்பு தெரிவிப்பவர்கள் வெறும் அரசு அதிகாரிகள் தான். நாட்டை ஆள்பவர்கள் இன்னும் கருத்து/ எதிர்ப்பு சொல்லவில்லை.
Rate this:
Cancel
27-ஜன-202015:23:50 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் கிறித்துவ இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு கிறித்துவ நாடுகளில் உள்ள பிரச்சினை , இஸ்லாமிய நாடுகளில் உள்ள எண்ணற்ற பிரச்சினை பற்றி பேசுவதே இல்லை. மற்ற நாடுகளை பயமுறுத்தவே இந்த கூட்டமைப்புகள் உள்ளன. இந்தியா இதற்கெல்லாம் அடிபணியாது. உன்வேலையை பார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X