வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழக அரசுக்கு நல்லாட்சி விருது தந்தவர்களை முதலில் அடிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின், சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
சென்னையில் திருமண விழா ஒன்றில் திமுக தலைவர் ஸ்டாலின், கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பார்லி.,யில் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் முதலில் ஆதரவளித்தன. ஆனால் தற்போது அதை எதிர்க்கின்றனர். பாஜ., உடன் கூட்டணியில் இருக்கும் நிதிஷ்குமாரும் எதிர்த்து வருகிறார். தமிழகத்தில் ஆளும் அதிமுக ஆட்சி, கொள்ளையடிக்கும் ஆட்சி; கமிஷன் வாங்கும் ஆட்சி.

தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதாக விருது கொடுத்துள்ளனர் என முதல்வர் பழனிசாமி பேசி வருகிறார். முதலில் தமிழகத்திற்கு விருது கொடுத்தவர்களை அடிக்க வேண்டும். மத்திய அரசுக்கு அடங்கும் தமிழக அரசை போல, மணமக்கள் இருக்க கூடாது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.