புதுடில்லி : சுமார் 13 லட்சம் வீரர்களை கொண்ட இந்திய ராணுவம், ராக்கெட்கள், ஏவுகணைகள், அதிநவீன பீரங்கிகள் என படிப்படியாக ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது.

40 நாட்கள் போர் நடந்தாலும் அதை சமாளிக்கும் அளவிலான ஆயுதங்களை இந்தியா சேமித்து வைத்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. முழு அளவில் 10 நாட்கள் தொடர்ந்து போர் செய்வதற்கு தேவையான அனைத்து வகையான ஆயுதங்களும் இந்தியாவிடம் உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது போர் செய்யும் திட்டம் எதுவும் ராணுவத்திற்கு இல்லை என்றாலும் பாக்., மற்றும் சீனாவை மனதில் வைத்து ஆயுத பலத்தை ராணுவம் அதிகரிக்க துவங்கி உள்ளது. பல சிக்கலான மற்றும் கடுமையான ஆயுத வகைகளில் முன்பெல்லாம் மிகப் பெரிய பற்றாக்குறை இருந்து வந்தது. இந்த குறைபாடுகளை கலைவதற்காக 19 வெளிநாட்டு நிறுவனங்களுடன் ரூ.12,890 கோடி மதிப்பிலான 24 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

தற்போது 10(ஐ) ரக ஆயுத குறைபாடுகளை சரி செய்து, அதிக அளவில் ஆயுதங்களை கையிருப்பு வைத்துள்ள இந்தியா, அடுத்த கட்டமாக 40(ஐ) ரக ஆயுத பலத்தை அதிகரிக்க இலக்க நிர்ணயித்துள்ளது. 2012 ம் ஆண்டு முதலேவிமானப்படை, வீரர்கள், பீரங்கிகள் என அனைத்து வகையிலும் பாதுகாப்பு துறை பலப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிகிறது .