வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சி.ஏ.ஏ.,வுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தவும், கடும் எதிர்ப்பை காட்டவும் இஸ்லாமிய பழமைவாதிகள் நடத்தும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ( BFI )என்ற அமைப்பு ரூ. 120 கோடியை செலவழித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றியது. இதற்கு முஸ்லிம் அமைப்புகள், முன்னின்று நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இதில் பல வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. மத்திய அரசு சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது. பல போலீஸ்காரர்கள் காயமுற்றனர்.
சி.ஏ.ஏ.,வால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் தவறான பிரசாரம் செய்து போராட்டத்தை தூண்டி வருகின்றனர் என மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கும் என யாரும் உறுதியாக ஆதாரப்பூர்வமான தகவல் வெளியிடவில்லை.
இந்நிலையில் பிரண்ட் இந்தியா அமைப்பின் பேரில் சி.ஏ.ஏ.,வுக்கு பின்னர் 73 புதிய கணக்குகள் துவங்கப்பட்டன. சி.ஏ.ஏ.,வுக்கு எதிரான போராட்டத்தை தூண்டும் விதமாக தொடர்பில் உள்ள அமைப்புகளுக்கு இந்த வங்கி கணக்கில் இருந்து பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

இதில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் கபில்சிபல், இந்திராசிங், தஷ்யந்த் தேவ், அப்துல் சம்மது, உள்ளிட்டவர்களுக்கும் இந்த பணம் சென்றுள்ளது. ரூ.120 கோடி வரை பணம் பட்டுவாடா நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.