அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூட்டணி வைத்தால் பாஜவை ஏற்பதாக அர்த்தமா: ரஜினி பற்றி தமிழருவிமணியன்

Updated : ஜன 27, 2020 | Added : ஜன 27, 2020 | கருத்துகள் (98)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: பாஜ.,வுடன் ரஜினி கூட்டணி வைப்பதால் மட்டுமே அக்கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறார் என்று அர்த்தமல்ல என காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவி மணியன் பேசியுள்ளார்.

'துக்ளக்' இதழின் 50வது ஆண்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த், ஈ.வெ.ரா., குறித்து பேசியது, தமிழக அரசியலின் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், ரஜினிகாந்துக்கு நெருக்கமானவரும், ஆலோசகர் போல் செயல்பட்டு வருபவருமான, 'தமிழருவி' மணியன் கூறியதாவது:

பா.ஜ.,வுடன் நட்புறவுடன் இருப்பதால், அவர்கள் பக்கம் ரஜினி சாய்ந்துவிட்டார் என்பது போலப் பேசப்படுகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்தபோதே, தி.மு.க., - பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தது. அப்போது தி.மு.க.,வுக்கு பா.ஜ., ஒரு இந்துத்துவக் கட்சியாகத் தெரியவில்லை. இப்போது மட்டும் பா.ஜ.,வுடன் யார் இணைந்தாலும் அவர்களுக்கு இந்துத்துவா சாயத்தை பூசுகிறார்கள்.
ஈ.வெ.ரா.,வுக்கு எதிரானவர் ரஜினி என்பது போல், தமிழக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. அவர் எப்போதும் ஈ.வெ.ரா.,வை பெருமளவு மதிப்பவர். 'நாத்திகர் என்று சொல்லிக் கொள்ளும் பெரிய ஆத்திகர் தான் ஈ.வெ.ரா.,' என, ரஜினிகாந்த் எப்போதும் கூறுவார். இப்படி ஈவெரா பற்றி உயரிய எண்ணங்களைக் கொண்டவர் ரஜினி. அவர் ஒரு சாமானியன். அந்த தொனியிலேயே ஈவெரா பற்றி 'துக்ளக்' விழா மேடையில் பேசியுள்ளார்.
ரஜினி, பாஜ.,வுடன் கூட்டணி அமைத்தால் அதன் கொள்கைகளை ஏற்றுக்கொள்வார் என்று அர்த்தமல்ல. சமூகநலனுக்காகவே அவர் அரசியலுக்கு வருகிறார். எந்தவித ஆதாயத்தின் அடிப்படையிலும் செயல்பட மாட்டார். வருகிற தேர்தல் ரஜினிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் போட்டியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (98)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுடலை காந்த் - gopalgardenpet,இந்தியா
28-ஜன-202014:15:45 IST Report Abuse
சுடலை காந்த் இலவு காத்த கிளி... இலவு காத்த கிளி... ன்னு ஒரு கிளி இருந்துச்சாம்...
Rate this:
Share this comment
Cancel
Padmanaban Jayakrishnan - singapore,சிங்கப்பூர்
28-ஜன-202008:45:34 IST Report Abuse
Padmanaban Jayakrishnan தான் எந்த அளவுக்கு கருத்து சொல்லணும் ? எந்த அளவுக்கு பேசணும் னு தெரியாம பேசிட்டு இருக்காரு மலையில் இருந்து இறங்கி நடுத்தெருவுக்கு வந்த தமிழ் அருவி
Rate this:
Share this comment
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
28-ஜன-202007:54:55 IST Report Abuse
S.Baliah Seer ரஜனி ஆதரவாளர்களில் ஒன்று சினிமா கூட்டம். இரண்டாவது தகிடுத்தத்தான் கூட்டம்.தமிழ்நாட்டு மொத்த ஜனத்தொகையில் இந்த கூட்டம் 2 சதவிகிதம் கூட தேறாது.ஆக இந்த கூட்டம் தமிழ் நாட்டை ஆள நினைப்பது தமிழர்களுக்கு எதிரானது.திருமா ரஜனி கூட்டத்தை தாக்குகிறார் என்ற ஒரே காரணத்துக்காக Dr .கிருஷ்ணசாமி,மருத்துவர் ஐயா ராமதாஸ் போன்றவர்கள் வாயைப் பொத்திக்கொண்டு இருப்பது தமிழகத்தை படுகுழியில் தள்ள நினைப்பவர்களுக்கு பாயாசம் சாப்பிடுவது போல் இருக்கிறது.நீட் தேர்வு எத்தகைய கொடியது என்பது சமீபகாலமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. வடநாட்டவர்களுக்கு படிப்பு முக்கியமில்லை. வியாபாரம் முக்கியம். பணத்தைக் கொடுத்து அவர்கள் எதையும் வாங்குவார்கள்.ஒவ்வொரு மாநிலத்தவரும் தம் பகுதியில் உழைத்துதான் வாழ வேண்டும்.வட மாநிலத்தவர் தென் மாநிலங்களை எப்போதோ குறி வைத்து காயை வேகமாக நகர்த்தி வருகிறார்கள்.ரஜனி போன்றவர்களை தம் கைக்கூலியாக்க அவர்கள் துடிக்கிறார்கள். தமிழ் மக்களுக்காக கேவலம் ஒரு குரல் கூட கொடுக்காத ரஜனி வட மாநில முதலைகளின் துணை கொண்டு தமிழக மக்களை விழுங்க நினைப்பது அவர் தமிழ் மக்களுக்கு செய்யும் பச்சை துரோகம்.அவருக்கு வக்காலத்து வாங்கும் தமிழருவி மணியன் தன் சிந்திக்கும் திறனை முழுவதும் இழந்துவிட்டார் போலும்.
Rate this:
Share this comment
elakkumanan - Naifaru,மாலத்தீவு
28-ஜன-202010:53:17 IST Report Abuse
elakkumanan? நீட் தேர்வு எழுத விலக்கு கேட்கும் ஒரே உயர்ந்த மாநிலம் எதுன்னு தெரியுமா? lமற்ற மாநிலங்களில், ஏழைகளே இல்லையா அன்பரே ? அவ்வளவு அந்த மாநிலங்கள் முன்னேறினால், நாம் ரொம்ப ஏழை மாநிலமா அன்பரே ? அப்போ, அங்கெல்லாம் பணக்காரர்கள் மட்டுமே மருத்துவம் படிக்கிறார்களா அன்பரே? அங்கே ஆள் மாராட்டமெல்லாம் இல்லையே அன்பரே ? போட்டி தேர்வுக்கெல்லாம், தமிழக மாணவர்கள், ஆசிரியர்கள் தகுதியில்லாதவர்களா அன்பரே? அப்போ, ஆசிரியர்களுக்கு சம்பளம் வீண்தானா அன்பரே ?ராமதாஸ், அன்புமணி எல்லாம் படிக்கும்போது ஏழை இல்லையா அன்பரே ? அல்லது, அவர்களது படிப்பு தரமில்லாததா அன்பரே ? பொருளாதார இட ஒதுக்கீடு இதற்கு தீர்வாக ஆகாதா அன்பரே ? அதையும்தான் , நம்ம ஊரில், டீம்க எதிர்க்கிறது .............. உண்மையான, நேர்மையான பதிலை எதிர்பார்க்கிறேன்...............
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
28-ஜன-202010:54:40 IST Report Abuse
Anandanபாலைய்யா சீர், உண்மையை அழகா சொல்லியுள்ளீர்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X