பாக்.,ன் விளம்பர தூதர் பாஜ.,: மம்தா சாடல்

Updated : ஜன 27, 2020 | Added : ஜன 27, 2020 | கருத்துகள் (20)
Advertisement
MamataBanerjee, BJP, Pakistan, BrandAmbassador, Mamata, WestBengal, CM, Resolution, CAA, மம்தா, மம்தாபானர்ஜி, மேற்குவங்கம், முதல்வர், பாஜ, பாஜக, பாகிஸ்தான், விளம்பரதூதர், சிஏஏ, குடியுரிமைசட்டம், தீர்மானம், நிறைவேற்றம்

இந்த செய்தியை கேட்க

கோல்கட்டா: எப்போதும் பாகிஸ்தானை பற்றி மட்டுமே பேசும் பாஜ., பாகிஸ்தானின் விளம்பர தூதராக செயல்பட்டு வருவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு, பார்லி.,யின் இரு அவைகளிலும் பெரும்பான்மை ஆதரவுடன் குடியுரிமை திருத்த சட்டம் இயற்றியது. இதற்கு காங்., உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனாலும், சட்டம் இயற்றியதில் இருந்து பின்வாங்க மாட்டோம் என பாஜ., அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. இதனை கேரளா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மேற்குவங்கம், பஞ்சாப், உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், இதனை தங்கள் மாவட்டத்தில் அமல்படுத்த மாட்டோம் எனவும் தெரிவித்தன.




இதற்கிடையே கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் தங்கள் சட்டசபையில் சிஏஏ.,க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றின. இதில், கேரள அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், சிஏஏ.,க்கு எதிராக மேற்கு வங்கமும் இன்று (ஜன.,27) தீர்மானம் நிறைவேற்றியது. சட்டசபையில் முதல்வர் மம்தா பேசியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சிறுபான்மையினர் மட்டுமல்ல, அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முன்னெடுத்து சென்ற எனது ஹிந்து சகோதரர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேற்குவங்கத்தில், சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி.,யை அனுமதிக்க மாட்டோம்.




எங்களது போராட்டம் அமைதியான முறையில் இருக்கும். இந்த சட்டத்தின்படி வெளிநாட்டவர்கள் இந்திய குடிமக்களாக மாற்றிக்கொள்ளலாம் என்பது மோசமான விளையாட்டு. நம்மை அழிவுக்கு கொண்டு செல்லும் சூழ்ச்சியில் யாரும் சிக்க வேண்டாம். பாகிஸ்தானின் விளம்பரத் தூதராக பாஜ., செயல்பட்டு வருகிறது. எப்போதும் பாக்.,ஐ பற்றி மட்டுமே பேசுகிறார்களே தவிர இந்தியாவை பற்றி அவர்கள் பேசுவதில்லை. இவ்வாறு மம்தா பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
28-ஜன-202010:23:39 IST Report Abuse
R. Vidya Sagar அதற்க்கு ஏகபோக உரிமை கொண்டாடுபவர் ராகுல்.
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
28-ஜன-202009:19:34 IST Report Abuse
mindum vasantham போங்க சிறுபான்மை ,சிறுபான்மை னு சொல்லி பாக்கிஸ்தான் ஊடுருவுவது எல்லாம் ஆதரிக்கிறாய்ங்க
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
28-ஜன-202007:53:40 IST Report Abuse
 N.Purushothaman மம்தாவின் சிறுபான்மையினர் மீதான பாசம் புல்லரிக்குது ....சும்மாவா ...ரெண்டு கோடி பங்களாதேஷ் கள்ள குடியேறிகள் இருக்காங்களே ....அதுல எப்படியும் ஒரு கோடி பேரு ஆயாவோட மாநிலத்தில் தான் டெண்டு போட்டு இருப்பாங்க ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X