நூறு சதவீத மின்மயமாகும் இந்திய ரயில்கள்:பியூஷ் கோயல் நம்பிக்கை

Updated : ஜன 27, 2020 | Added : ஜன 27, 2020 | கருத்துகள் (13)
Advertisement

புதுடில்லி: 2024 ம் ஆண்டில் நாட்டில் உள்ள இந்திய ரயில்கள் அனைத்தும் நுாறு சதவீதம் மின்மயமாக்கப்படும் என மத்திய ரயில்வேதுறை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.






இந்திய-பிரேசில் தொழில்துறை கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: வரும் 2024 ம் ஆண்டில் இந்திய ரயில்கள் முழுவதும் மின்மயமாக்க திட்டமிட்டுள்ளோம். ரயில்வே துறை நுாறு சதவீத மின்சாரத்தில் இயங்கும் என எதிர்பார்க்கிறோம். அவ்வாறு நாங்கள் செய்துவிட்டால் உலகிலேயே முழுவதும் மின்சாரத்தில் இயக்கப்படும் முதல் ரயில்வேதுறையாக இந்திய ரயில்கள் இருக்கும். மேலும் 2030ல் முழு ரயில்வே நெட்வொர்க்கும் பூஜ்ஜிய-உமிழ்வு வலையமைப்பாக மாற்ற திட்டமிட்டுள்ளோம். அது துாய்மையான சக்தியாக இயங்கும் . இவ்வாறு அவர் கூறினார்.




Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
28-ஜன-202013:22:02 IST Report Abuse
 Sri,India அதெல்லாம் சரி தான் சார் ,கழிப்பறையில் தண்ணீர் வருமா ? வராதா?? அடிப்படையான சுகாதாரமில்லாத ரயில்கள் அணைத்து ஊர்களுக்கும் சென்று நோயை பரப்பை விடும் அபாயம் உள்ளது .
Rate this:
Share this comment
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
28-ஜன-202010:55:21 IST Report Abuse
நக்கீரன் வாழ்துக்கள் அமைச்சரே. கூடுதலாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க ஏற்பாடு செய்யுங்கள். வருமானமும் கூடும் பெட்ரோல் மூலம் செலவாகும் அந்நிய செலாவாணியும் மிச்சப்படும்.
Rate this:
Share this comment
Cancel
28-ஜன-202010:50:24 IST Report Abuse
தமிழ் மின்மயமாக்குவது இருக்கட்டும் முதலில் ரயில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துங்கள். பெட்டிகளை சரியாக பராமரியுங்கள். எல்லாவற்றுக்கும்மேலாக வட இந்தியாவில் உள்ள ரயில்களில் பயணம் செய்பவர்கள் அனைவரும் ஓசி யில் பயணம் செய்வதற்கு தென்னிந்தியாவில் உள்ளவர்களிடம் வசூல் செய்வதை நிறுத்துங்கள் பார்க்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X