பொது செய்தி

இந்தியா

ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படும்:அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

Updated : ஜன 27, 2020 | Added : ஜன 27, 2020 | கருத்துகள் (11)
Advertisement
#Andhra assembly# #abolish legislative council# ஆந்திரா, மேல்சபை, கலைப்பு,  தீர்மானம்

அமராவதி :ஆந்திராவில், மூன்று தலைநகரங்கள் மசோதாவை நிறைவேற்ற முடியாததால், செயல்பாட்டில் உள்ள மேல்சபை கலைக்கப்படும் என, அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.


ஒப்புதல்

ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், சட்டசபை மட்டு மின்றி மேல்சபையும் செயல்பாட்டில் உள்ளது. ஆந்திர சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை, மேல்சபையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என, விதிகள் உள்ளன.





ஆந்திர மேல்சபையில், ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சிக்கு ஒன்பது உறுப்பினர்கள் மட்டும் உள்ளனர். எதிர்க்கட்சியான தெலுங்கு தேசத்திற்கு, 28 உறுப்பினர்கள் உள்ளனர். தெலுங்கு தேச உறுப்பினர்களின், ஆறு ஆண்டு பதவிக்காலம், 2021ல் முடிவடையும் நிலையில், ஒய்.எஸ்.ஆர்.காங்., மேல்சபையில் பெரும்பான்மை பலம் பெறும்.இந்நிலையில், ஆந்திர மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள் அமைப்பது உள்ளிட்ட, இரண்டு மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, மேல்சபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன.


யோசிக்க வேண்டும்

மேல்சபையில், ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால், இந்த மசோதாக்களை நிறைவேற்ற முடியவில்லை. தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, மசோதாக்கள், சிறப்பு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.இதைத் தொடர்ந்து, சட்டசபையில் முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி கூறும்போது, ''அரசியல் நோக்கங்களுடன் மட்டுமே செயல்படும் மேல்சபை, நமக்கு தேவையா என, யோசிக்க வேண்டும்,'' என்றார். இதை தொடர்ந்து, மேல்சபையை அகற்றுவது என, ஆந்திர அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish - Bengalooru,இந்தியா
28-ஜன-202014:01:21 IST Report Abuse
Krish நல்ல முடிவு .இதே மாதிரி ராஜ்ய சபாவும் கலைக்கப்பட வேண்டும் , நீக்க படவேண்டும். பாவம் பாபுகாரு என்ன குதி குதித்தார் மோதி அவர்கள் ஜெயிக்கக்கூடாது என்று. இத்தனைக்கும் மோதி பாபு பார்ட்டிக்கி மத்திய மந்திரி பதவி குடுத்து பல சலுகைகளை கொடுத்துள்ளார் .தனி விமானம் [ யார் காசு தெரியவில்லை ] கல்கத்தா மற்றும் பல ஊர்குகளுக்கு பொய் மோதியை எதிர்த்து பிரச்சாரம் , கூட்டு பொரியல் . ஆனால் இப்போது அவர் கதி அதோகதி . தமிழக அரசியல் வாதிகளே ஜாக்கிரதை நீங்கள் எவ்வளவு இந்துக்களுக்கு எதிராக இஸ்லாம் கிருத்துவர்களை ஆதரிக்கறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்துக்கள் வோட்டு மோதிக்கு திரும்பும் .இப்போதே தி க , தீ மு க இந்துக்கள் வோட்டு போய் விடுமோ என்று 'தெனாவெட்டு குறைந்து அடங்கி வாசிக்கிறார்கள் '
Rate this:
Share this comment
Cancel
28-ஜன-202010:44:33 IST Report Abuse
தமிழ் Rpalanivelu bangaluru, சட்ட மேலவையை கலைக்க சொல்ல உனக்கு உரிமை இருக்கு. ஆனா பேரறிஞர் அண்ணாவை சிற்றறிஞர் என சொல்ல உனக்கு உரிமை இல்லை தகுதியும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
28-ஜன-202006:03:27 IST Report Abuse
Indhuindian தனக்கு பிடிக்கலேன்னா மேல் சபையை இஷுது மூடறதுங்கறது ரொம்ப சர்வ சாதாரணம். தண்ட செலவுன்னு இப்பதான் தெரிந்ததா? இதனை வருஷமா செலவே பண்ணலயா? இங்கேயும் ஒருத்தரு அவருக்கு வேண்டியவர்களே மேல் சபைக்கு அனுப்பமுடியாமா சிக்கிக்கிட்டப அதை கலைச்சிட்டாரு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X