பொது செய்தி

இந்தியா

'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல்:விரைவில் இந்திய கடற்படையில் சேர்ப்பு

Added : ஜன 27, 2020 | கருத்துகள் (2)
Advertisement
'ஐ.என்.எஸ்., கவரட்டி' போர்க்கப்பல், இந்திய கடற்படை

கொல்கத்தா : நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பலான, 'ஐ.என்.எஸ்., கவரட்டி'யை, ஜி.ஆர்.எஸ்.இ., நிறுவனம், விரைவில், இந்திய கடற்படையிடம் ஒப்படைக்க உள்ளது.

ஜி.ஆர்.எஸ்.இ., எனப்படும், 'கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் மற்றும் இன்ஜினியர்ஸ்' நிறுவனம், இந்திய கடற்படைக்கு தேவையான கப்பல்களை வடிவமைத்து தருகிறது. சோதனைஇந்நிலையில், நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பலான, ஐ.என்.எஸ்., கவரட்டியையை, ஜி.ஆர்.எஸ்.இ., நிறுவனம் தயாரித்துள்ளது.





இதுகுறித்து, அந்நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ரியர் அட்மிரல், வி.கே.சக்சேனா கூறியதாவது:கடந்த, 2014ம் ஆண்டு, முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க் கப்பலான கமோர்த்தா, ஜி.ஆர்.எஸ்.இ., நிறுவனத்தால், இந்திய கடற்படையிடம்ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, இரண்டாவது போர்க் கப்பலான கட்மட், 2015ம் ஆண்டும், மூன்றாவது போர்க் கப்பலான கில்டான், 2017ம் ஆண்டும், ஒப்படைக்கப்பட்டன.இந்நிலையில், நான்காவது நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க் கப்பலான கவரட்டியை, ஜி.ஆர்.எஸ்.இ., நிறுவனம், தயாரித்துள்ளது.
அந்த கப்பலில், அனைத்து சோதனைகளும் நடத்தி முடிக்கப்பட்டன. இந்த போர்க் கப்பல், இம்மாத இறுதியில், இந்திய கடற்படையிடம், முறைப்படி ஒப்படைக்கப்படும்.


பராமரிப்பு செலவு


ஜி.ஆர்.எஸ்.இ., நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள, 104வது கப்பல், கவரட்டி. 3,300 டன் எடை கொண்ட அந்த கப்பல், நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த கப்பல், 90 சதவீதம், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால், பராமரிப்பு செலவு குறையும். அணு, ரசாயனம் மற்றும் உயிரியல் போரை, இந்த போர்க்கப்பல், எதிர்த்து போரிடும் திறன் கொண்டது.கடந்த, 10 மாதங்களில், இந்திய கடற்படையிடம், ஐந்து போர்க் கப்பல்கள் ஒப்படைக்கப்பட்டன. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endless - Chennai,இந்தியா
28-ஜன-202011:01:04 IST Report Abuse
Endless வாழ்த்துக்கள்…. விரைவில், நமது இந்தியா பெருங்கடல், நம் வசமாகி நமது கட்டுப்பாட்டுக்குள் வரும்… வாழ்க நம் பாரதம்... வளர்க நமது பாரத பாரம்பர்யம்...
Rate this:
Share this comment
Cancel
Prabu.KTK - Coimbatore,இந்தியா
28-ஜன-202010:01:30 IST Report Abuse
Prabu.KTK கண்டதற்கு எல்லாம் கருத்து எழுதும் கருத்து கந்த சாமிகள் இந்த மாதிரி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த செய்திக்கு ஏன் ஒரு கருத்தும் இல்லை. 2014லில் பதவி ஏற்ற பிஜேபி அரசு தொடர்ந்து தேசப் பாதுகாப்பை அதிகரிக்கும் செயல்களில் தீவிரம் காட்டுகின்றது. காங்கிரஸ் ராணுவத்தின் (டிபென்ஸ் போர்சஸ) மேல் உள்ள அவநம்பிக்கையால் ராணுவத்தை பலப் படுத்தாமல் பலவீனமாகவே வைத்து இருந்தது. ஜெய் பாரத், ஜெய் மோடி, ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X