அரசியல் செய்தி

தமிழ்நாடு

டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் இனி, சிறு தவறும் நடக்காது

Updated : ஜன 28, 2020 | Added : ஜன 27, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை : ''அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வில்,எதிர்காலத்தில் சிறு தவறும் நடக்காமலிருக்க,அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்,'' என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.சென்னையில், நேற்று அவர் கூறியதாவது: அமைச்சர் கருப்பணன் என்ன பேசினார் என, முழுமையாக தெரியவில்லை. தி.மு.க.,வினர், கவர்னரிடம் புகார் கொடுத்துள்ளனர். கருப்பணன்
 டி.என்.பி.எஸ்.சி,அமைச்சர், ஜெயகுமார்,சி.பி.சி.ஐ.,டி.,விசாரணை

சென்னை : ''அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வில்,எதிர்காலத்தில் சிறு தவறும் நடக்காமலிருக்க,அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்,'' என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.சென்னையில், நேற்று அவர் கூறியதாவது: அமைச்சர் கருப்பணன் என்ன பேசினார் என, முழுமையாக தெரியவில்லை. தி.மு.க.,வினர், கவர்னரிடம் புகார் கொடுத்துள்ளனர். கருப்பணன் பேசியதை பற்றி, அவரிடம் கேட்ட பின், கருத்து தெரிவிக்கிறேன்.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வை, 16 லட்சம் பேர் எழுதுகின்றனர். இது, மிகப்பெரிய பணி. அனைத்து தேர்வுகளும் வெளிப்படையாக நடந்தது. ஒரு மையத்தில் தவறு நடந்ததால், ஒட்டுமொத்தமாக, தேர்வு மீது சந்தேகப்பட கூடாது.

தவறை இரும்பு கரம் கொண்டு அடக்குவது, அரசின் எண்ணம். அதற்காக, சி.பி.சி.ஐ.,டி., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள், அடையாளம் காணப்பட்டு, தண்டிக்கப்படுவது உறுதி. எதிர்காலத்தில், எந்த மையத்திலும், சிறு தவறும் நடக்காமலிருக்க, அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

சசிகலாவும், அவரை சார்ந்தவர்களும் இல்லாமல், ஆட்சியையும், கட்சியையும் நடத்த வேண்டும் என, கட்சி சார்பில் முடிவு எடுக்கப் பட்டுள்ளது. அமைச்சர்கள் கூறுவது, அவரவர் கருத்து.சர்க்காரியா கமிஷன் ஊழல், பூச்சி மருந்து ஊழல், சென்னையில் பாலம் கட்டியதில் ஊழல், '2 ஜி' ஊழல் என, விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர்கள், தி.மு.க.,வினர். எனவே, ஸ்டாலின் முதலில் தன் முதுகில் உள்ள, ஊழல் கரையை திரும்பி பார்க்க வேண்டும். விஞ்ஞான பூர்வ ஊழலை தி.மு.க.வை தவிர, வேறு யாரும் செய்ய முடியாது. உலகத்திலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்டது தி.மு.க., அரசு தான்.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பயிற்சி மையங்கள், புற்றீசல் போல் வளர்ந்து விட்டன. முறைகேட்டில் ஈடுபடும் மையங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு சார்பில் பயிற்சி மையங்கள் துவங்க, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, ஜெயகுமார் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
28-ஜன-202022:06:25 IST Report Abuse
RajanRajan ஏம்பா இன்னும் தவறுகள் அரங்கேற வாய்ப்பு இருக்குதா என்ன. அங்கே தான் கோடிக்கணக்கில் துல்லிய தாக்குதல் நடத்தி துட்டு பிரிச்சு பண்ணக்கும் போட்டாகி விட்டது. இப்போ போயி புதுச்ச நீ வந்து இனி தவறு அரங்கேறாதுன்னு நல்லா ட்ராமா போடுறியா செம்பு.
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
28-ஜன-202018:45:43 IST Report Abuse
karutthu அண்ணா திமுக ஒரு கட்டுப்பாடுள்ள கட்சி .இப்போ அவரவர் இஷ்டத்திற்கு பேசுகிறார்கள் .இதைப்பார்க்கும்பொழுது இன்னும் சசிகலா ஆதரவாளர்கள் ஆ தி மு க வில் ஸ்லீப்பர் செல் இருக்கிறார்களோ என தோன்றுகிறது .
Rate this:
Cancel
vadivel - coimbatore,இந்தியா
28-ஜன-202018:18:53 IST Report Abuse
vadivel இனிமேல் மாட்ட மாட்டோமுன்னு சொல்லுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X