'நீட்' தேர்வு கட்டாயமே: சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்!

Updated : ஜன 28, 2020 | Added : ஜன 27, 2020 | கருத்துகள் (37)
Advertisement
நீட் ,தேர்வு ,கட்டாயம், சுப்ரீம்_கோர்ட்,  திட்டவட்டம்,  மனு

புதுடில்லி: 'மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு, 'நீட்' நுழைவுத் தேர்வு கட்டாயமே. இது தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவிலிருந்து பின்வாங்கும் பேச்சே இல்லை' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி, வேலுார் கிறிஸ்துவ மருத்துவக் கல்லுாரி தாக்கல் செய்த மனுவையும், தள்ளுபடி செய்தது. எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு, 'நீட்' எனப்படும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எழுதுவது, நாடு முழுதும் கட்டாயமாக்கப்பட்டுஉள்ளது.
தமிழகத்தில், மூன்று ஆண்டுகளாக நீட் தேர்வு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், நீட் தேர்வை எதிர்த்து, தமிழகத்தின் வேலுாரை சேர்ந்த, சி.எம்.சி., எனப்படும், கிறிஸ்துவ மருத்துவக் கல்லுாரி சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'நாங்கள் நீட் தேர்வை எதிர்க்கவில்லை. அதேநேரத்தில், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு மருத்துவக் கல்லுாரியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலை பின்பற்றி வருகிறோம். 'எனவே, நீட் தேர்விலிருந்து எங்கள் கல்லுாரிக்கு விலக்கு அளிக்க வேண்டும்' என, கூறப்பட்டு இருந்தது.


தெளிவான உத்தரவு



இந்த மனு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதத்துக்குப் பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மருத்துவக் கல்லுாரிகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு எழுதுவது கட்டாயம் என ஏற்கனவே தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. இது தொடர்பாக போதிய விவாதங்கள், ஆய்வு நடத்தியாகி விட்டது. நீட் தேர்வு நடைமுறை, நாடு முழுதும் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், ஒரு தனியார் கல்லுாரிக்கு மட்டும், அதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது.


மாற்ற முடியாது


ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவருக்காக நீதிமன்ற உத்தரவை மாற்றி அமைக்க முடியாது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, மனுவை வாபஸ் பெற மனுதாரர் தரப்புக்கு அனுமதி அளித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்தனர். நீட் தேர்வை எதிர்த்து, தமிழக அரசு சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, நிலுவையில் உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பச்சையப்பன், கோபால் புரம். ஐயையோ ஐயையோ?? மரத்தமிழ் மாணவர்களின் கல்வியிலே நெருப்பை வைத்து ஆரியத்தின் அட்டகாச தீர்ப்பு. எத்தனை எத்தனை கல்வித் தந்தைகள் இந்த மண்ணில் கல்விச் சேவை செய்தனர். அத்தனை பேரையும் ஒரே அடியில் சாய்த்து விட்டனர். இனி எம் தமிழினம் எப்படி படிக்கும் ? என்ன படிக்கும்?. இனி மரத் தமிழர்கள் ஆரிய வந்தேறிகளுக்கு கைகட்டி சேவை செய்ய வேண்டியதுதான்.
Rate this:
Share this comment
Cancel
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
28-ஜன-202017:25:31 IST Report Abuse
பஞ்ச்மணி பாவம் ஏழை மாணவர்கள் அப்படியே படிச்சுட்டு டாக்டர் ஆயி பிற்போக்கான கிராமத்திலே வேல பக்க ரெடி இருக்கானுவோ எனக்கு தெரிஞ்சு டாக்டர் சீட்டுக்கு மினிமம் உத்திரவாதம் 1 சீ அப்டிங்கறானுவோ அம்புட்டு பணம் குடுத்து படிச்சுட்டு மாசம் 40 ஆயிரம் ருவாவுக்கு வேலைபாக்கற டாக்டரை பார்த்திருக்கேன் என்ன செய்ய வைத்தியர் மோகம் நம்பள அப்படி ஆடி படைக்குது
Rate this:
Share this comment
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
28-ஜன-202015:31:19 IST Report Abuse
unmaitamil நல்ல தீர்ப்பு. இனி நீட் தேர்வுக்கு முறைக்கு எதிராக எந்த ஒரு கேசும் நீதிமன்றத்தில் வந்தால், அது நிராகரிக்கப்படும் என தீர்ப்பு கூறி இருந்தால் நாட்டிற்கு நன்மையாக இருந்திருக்கும். நீட் தேர்வு பற்றிய விவாததிற்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். நீட் தேர்வால் பலன் அடைபவர்கள் திறமையுள்ள ஏழை மாணவர்களே. மருத்துவ சீட்டை ஏலம்போட்டு, திறமையில்லாத பணக்கார வீட்டு பிள்ளைகளுக்கு விற்கமுடியாமல் போனது தனியார் மருத்துவ கல்லூரி முதலாளிகளுக்கு நஷ்டமே . சுடலை ஓலமிடுவதும் ஏழைகளுக்காக அல்ல, நஷ்டப்படும் முதலாளிகளுக்காக. தான் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X