மசூதியில் பெண்களை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு

Updated : ஜன 27, 2020 | Added : ஜன 27, 2020 | கருத்துகள் (33)
Advertisement
மசூதி, பெண்கள், அனுமதி, கோர்ட்டில் மனு

புதுடில்லி: மசூதிகளில் பெண்கள் தொழுகை நடத்த அனுமதிக்கக் கோரி, பத்திரிகையாளர், ஜியா உஸ் சலாம் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு, யாஸ்மீன் சுபேர் அகமது பீர்சாதி என்பவர், 'மசூதியில் பெண்களை அனுமதிக்க வேண்டும்; அனுமதி மறுப்பது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது' என, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவுடன் சேர்த்து விசாரிக்கக் கோரி, ஜியா உஸ் சலாம் நேற்று, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.





அதில் கூறப்பட்டுள்ளதாவது:மெக்கா, மதினாவில், ஆணும், பெண்ணும் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுகிறது. மேற்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள மசூதிகளில், பெண்கள் தொழுகை நடத்துகின்றனர்.ஆனால், இந்தியாவில் பெண்கள் மசூதியில் நுழைய வெளிப்படையான தடை இல்லை என்றபோதிலும், மறைமுகமான தடை உள்ளது.
இதை, மசூதியின் கட்டுமானத்தில் புரிந்து கொள்ளலாம். இங்கு, பெண்களுக்கு என, தனி நுழைவாயில் கிடையாது. தொழுகைக்கு முன், கை, கால் கழுவுவது உள்ளிட்ட வசதிகளும் தனியே இல்லை. பெண்கள், மசூதியில் வெறும் உறுப்பினர்களாக மட்டுமே உள்ளனர்.இது, இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு எதிரானது. 'இந்தியாவில் ஆணும், பெண்ணும் சமமாக நடத்தப்பட வேண்டும்' என, அரசியல் சாசனம் அளித்துள்ள உறுதிமொழியை மீறுவதாகும்.
நபிகள் நாயகம், பெண்கள் மசூதியில் தொழுகை செய்ய அனுமதித்துள்ளார். மசூதியில் பெண்கள் நுழையக் கூடாது என, எந்த இடத்திலும், இஸ்லாமியரின் மறை நுாலான குரான் கூறவில்லை. எனவே, மசூதியில் பெண்களையும் தொழுகை நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவுடன், சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது உட்பட, மதம் சார்ந்த அனைத்து மனுக்களும், உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன். பிப்ரவரி முதல் வாரம், விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chenar - paris,பிரான்ஸ்
28-ஜன-202016:37:51 IST Report Abuse
chenar திரு மாலிக் ராஜா எம்முடைய கருத்துக்களை நீங்கள் படிப்பீர்கள் என்று நம்புகிறேன் இறைவனை வாங்க பெண்களை மசூதியில் அனுமதிப்பதில்லை என்ன தவறு ?சொல்லுங்கள் ஆரோக்கியமாக விவாதிப்போம்
Rate this:
Share this comment
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
28-ஜன-202015:08:34 IST Report Abuse
Vijay D Ratnam பாவம் அடிமைப்பெண்கள்.
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
28-ஜன-202014:05:56 IST Report Abuse
dandy ..துருக்கி ..மாலை தீவுகள் ..பிலிபைன்ஸ் ..C.I .S நாடுகளில் பெண்கள் பள்ளிவாசலுக்கு போய் அவர்களுக்கு ஒதுக்க பட்டுள்ள இடத்தில இருந்து தொழுவது சாதாரணம் மேலும் ..உல்லாச பிரயாணிகள் உள்ளே சென்று பார்க்க முடியும் ...
Rate this:
Share this comment
Aarkay - Pondy,இந்தியா
29-ஜன-202001:10:06 IST Report Abuse
Aarkayஇந்துக்கோவில்களில் பெண்களை தனியே ஒதுக்கி வைப்பதில்லை. இங்கே குடும்பத்துடன் வந்து வழிபடுவார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X