காட்டினாங்க எதிர்ப்பு கொடி... நீட்டினாங்க ரூ. பல கோடி!| Dinamalar

காட்டினாங்க எதிர்ப்பு கொடி... நீட்டினாங்க ரூ. பல கோடி!

Updated : ஜன 28, 2020 | Added : ஜன 28, 2020
Share
வராண்டாவில் அமர்ந்து, அன்றைய நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.டீ, பிரட் கொடுத்து கொடுத்து உபசரித்த மித்ரா, ''என்னக்கா, பேப்பர்ல ஏதாச்சும் விசேஷமா செய்தி வந்திருக்கா,'' என, நோண்டினாள்.''குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை பத்தி போட்டிருக்காங்க. நம்மூரு ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு, ஸ்டேட் லெவல்ல முதல் பரிசு கொடுத்திருக்காங்க,''''அப்படியா, வாஸ்து
 காட்டினாங்க எதிர்ப்பு கொடி...   நீட்டினாங்க ரூ. பல கோடி!

வராண்டாவில் அமர்ந்து, அன்றைய நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.டீ, பிரட் கொடுத்து கொடுத்து உபசரித்த மித்ரா, ''என்னக்கா, பேப்பர்ல ஏதாச்சும் விசேஷமா செய்தி வந்திருக்கா,'' என, நோண்டினாள்.''குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை பத்தி போட்டிருக்காங்க. நம்மூரு ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு, ஸ்டேட் லெவல்ல முதல் பரிசு கொடுத்திருக்காங்க,''''அப்படியா, வாஸ்து பார்த்து, புது பில்டிங்கை வடக்கு பார்த்து, மாத்திக்கட்டுனாங்க.
இதுக்கு முன்னாடி, நேஷனல் லெவல் போட்டிக்கு பரிந்துரை செஞ்சாங்க; பரிசு கெடைக்கலை. இப்ப, ஸ்டேட் லெவல்ல கொடுத்து, கவுரவிச்சிருக்காங்க,''''ஆனா, உண்மையை சொல்லணும்னா, ஏகப்பட்ட அத்துமீறல் நடந்திருக்கு. நடைபாதையில நுாறாண்டு பழமை வாய்ந்த மிகப்பெரிய மரம் இருந்துச்சு; நுழைவாயிலுக்கு முன்னாடி இருந்த அந்த மரத்தை, ஆசிட் ஊற்றி, மொட்டையாக்கி, அடியோட அறுத்தெடுத்துட்டாங்க.''கலெக்டரும், போலீஸ் கமிஷனரும் தினமும் இந்த வழியாதான் முகாம் அலுவலகத்துக்கு போயிட்டு வர்றாங்க. மரத்தை வெட்டுனதை கண்டுக்கவே இல்லை; அதான், வருத்தமா இருக்கு,''''அதெல்லாம் இருக்கட்டும், 'மாஜி' எம்.பி.,யை கைது செய்யும் வரை, அந்த விஷயம், சிட்டி போலீசுக்கே தெரியாதாமே,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.''அதுவா, லோக்கல் ஸ்டேஷனுக்கு தெரிஞ்சா, மாஜிக்கு விசுவாசியா இருக்கிற போலீஸ்காரங்க, விஷயத்தை 'லீக்' செஞ்சிடலாம்; ராத்திரியோட ராத்திரியா, 'எஸ்கேப்' ஆகுறதுக்கு வாய்ப்பிருக்குன்னு நெனைச்சு, ரூரல் போலீசுக்கு பொறுப்பை ஒப்படைச்சாங்களாம்...''''அதுமட்டுமல்லாம, இந்த மாஜி மேலே, கோவை சிட்டி க்ரைம் பிராஞ்ச்ல ஏற்கனவே மோசடி வழக்கு நிலுவையில இருக்காம். அந்த வழக்கையும் துாசி தட்டச் சொல்லி மேலிடம் உத்தரவாம்...
தங்களுக்கு தோதான அதிகாரிகள வச்சு, ஆளுங்கட்சி ஆக் ஷனில் இறங்கியிருக்காம்...'' என்ற மித்ரா அடுத்த போலீஸ் மேட்டருக்கு தாவினாள்.''வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்ததா, சூலுார் இன்ஸ்பெக்டர்கிட்ட லோக் ஆயுக்தா விசாரணை செய்றதா செய்தி வந்ததே...'' என்றாள்.''ஆமா மித்து, உண்மைதான். பல்லடத்துல வேலை பார்த்தப்ப, துறை ரீதியா அனுமதி வாங்காம, மனைவி பேருல இடம் வாங்கி, ரூ.4 கோடி மதிப்புக்கு வீடு கட்டியிருக்கிறதா புகார் போயிருக்கு. முதல்கட்ட விசாரணை ஆரம்பமாயிருக்கு. தனது வருமானத்தில் இருந்து சொத்து வாங்கியிருக்கிறதா இன்ஸ்., சொல்லியிருக்காரு. இருந்தாலும், துறை ரீதியா நடவடிக்கை இருக்கும்னு, போலீஸ் வட்டாரத்துல பேசிக்கிறாங்க,''''அதே ஸ்டேஷன் லிமிட்டுல, அரசூர்ல நடந்த கிராம சபையில அமைச்சரை திட்டுனதா சொல்லி, தி.மு.க., நிர்வாகிகளை கைது செஞ்சாங்களாமே...''''அதுவா, குப்பை அள்ளுறது சம்பந்தமா விவாதம் நடந்திருக்கு. அப்ப, தகாத வார்த்தை பேசிட்டதா சொல்லி, பா.ஜ., பிரமுகர் கொடுத்த புகாரை வச்சு, கைது செஞ்சிருக்காங்க,'' என்றபடி, நாளிதழை புரட்டினாள் சித்ரா.அப்போது குறுக்கிட்ட மித்ரா, ''தி.மு.க.,வை சேர்ந்த முக்கிய பிரமுகருக்கு, ஒன்பது கோடி ரூபாய் கைமாறியிருக்காமே,'' என, நோண்டினாள்.''ஆமாப்பா, நம்மூர்ல செயல்படுத்துற முக்கியமான திட்டம் ஒன்றை அடிக்கடி குற்றம் சொல்லிக்கிட்டே இருப்பாரு; பெரிய தொகை கேட்டு, நெருக்கடி கொடுத்திருக்காரு. அதிகாரிகள் மூலமா பேசி, பல கோடி ரூபாய் வாங்கிட்டாராம்,''''இதைக்கேள்விப்பட்டு, வாயடைச்சு போன கட்சிக்காரங்க, கட்சி மேலிடம் கண்டுக்காம இருக்கேன்னு புலம்பிட்டு இருக்காங்க,''''ஆனா, உள்ளாட்சி தேர்தல்ல ஓட்டு குறைஞ்சது சம்பந்தமா விசாரணை செய்றதா கேள்விப்பட்டேனே,'' என, அடுத்த சப்ஜெக்ட்டுக்கு தாவினாள் மித்ரா.''யெஸ் மித்து, நானும் கேள்விப்பட்டேன். மேற்கு மண்டலத்துலதான் தி.மு.க.,வுக்கு ஓட்டு குறைஞ்சிருக்கு. ஒரு பிரிவினர் ஓட்டு, அ.தி.மு.க.,வுக்கு அதிகமா விழுந்திருக்கலாம்னு கணக்கு போட்டு, விசாரணையை துவக்கியிருக்காங்க.''தி.மு.க.,வுல மாநில பொறுப்புல இருக்குற, 'துரை'யானவரு, ரெண்டு நாளைக்கு முன்னாடி, கோவைக்கு வந்திருக்காரு. இங்க இருக்கிற அந்த பிரிவு மக்கள் சார்ந்த அமைப்புகளின் நிர்வாகிகளை, ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துல இருக்குற ஓட்டல்ல சந்திச்சு பேசியிருக்காரு.''தி.மு.க., ஆட்சிக்காலத்துல என்னென்ன வசதி செஞ்சு கொடுத்தோம்னு, அந்த நிர்வாகி அடுக்கியிருக்காரு. அதுக்கு, இங்க இருக்கற லோக்கல் நிர்வாகிங்க எங்களை கண்டுக்கிறதில்லைன்னு, ஒரு பிரிவு அமைப்பின் நிர்வாகிகள் குமுறியிருக்காங்க. இன்னும் கொஞ்ச நாள்ல, தி.மு.க., நிர்வாகிகள் பலரையும் கட்சி பொறுப்புல இருந்து துாக்குறதுக்கு வாய்ப்பிருக்குன்னு பேசிக்கிறாங்க,''''நீங்க சொல்ற மாதிரி, அந்தளவுக்கு நடவடிக்கை போகுமான்னு எனக்கு தெரியலை. ஏன்னா, ரெண்டெழுத்து 'மாஜி'யை கைக்குள்ள வச்சிக்கிட்டுதான், இங்க அரசியல் நடப்பதா ஒரு பேச்சு இருக்கு. மாஜியின் பைனான்ஸ் விஷயங்களையும், இவர் 'டீல்' பண்றாராம். அதனாலதான், மாஜியின் பங்குதாரர் மனைவிக்கு உள்ளாட்சி தேர்தல்ல, 'சீட்' கொடுக்கலாம்னு பரிந்துரை செஞ்சிருக்காராம்,''''ஓ... கட்சியில விஷயம் தெரிஞ்ச யாரும், முக்கியப் பொறுப்புக்கு வரக்கூடாதுன்னு விவரமா, காய் நகர்த்துறாங்கன்னு சொல்லு,'' என்ற சித்ரா, ''கூட்டணியில உரசல் அதிகமாயிடுச்சாமே,'' என, கிளறினாள்.''ஆமாக்கா, சனிக்கிழமை அன்னைக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தலைமையில, நம்மூர்ல 'மீட்டிங்' நடத்தி, காங்கிரஸ் கட்சிக்காரங்க கெத்துக் காட்டுனாங்க. இதுல, தி.மு.க.,வினர் கலந்துக்கலை. இருந்தாலும், நல்ல கூட்டம் இருந்துச்சு. அதேநாள், அதே நேரத்துல, நெருக்கடியான ஒரு சந்துல, எம்.பி., ராசா தலைமையில, தி.மு.க., சார்புல வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்துனாங்க. இனி எப்படி, தேர்தல் நேரத்துல இவுங்க ஒற்றுமையா வேலை பார்ப்பாங்கன்னு தெரியலை,''''அதிருக்கட்டும், செந்தில்குமாருன்னு ஒருத்தரு இருக்காராமே. மதுக்கரை தாலுகா ஆபீசுல இவரை பார்த்தாலே நடுநடுங்குறாங்களாமே...'' என, அடுத்த சப்ஜெக்ட்டுக்கு தாவினாள் மித்ரா.''ஆமாப்பா, மினிஸ்டர் பெயரை சொல்லி, ஆட்டம் ஆடுறாராம். தாலுகா ஆபீசுக்குள்ள இவரு போனா, அரசு அதிகாரிங்க எந்திரிச்சு நின்னு, சல்யூட் அடிக்காத அளவுக்கு மரியாதை கொடுக்குறாங்களாம். இதெல்லாம் மினிஸ்டருக்கு தெரியுமான்னு தெரியலை,'' என்றபடி, ''ஸ்வச் பாரத் ஸகீம்'' சம்பந்தமான நாளிதழில் வந்த செய்தியை படித்தாள் சித்ரா.அதை கவனித்த மித்ரா, ''ஸ்வச் பாரத் ஸ்கீம்ல ரேங்க் வாங்குறதுக்காக கார்ப்பரேஷன்ல ஏகப்பட்ட தில்லாலங்கடி வேலை செய்யறாங்களாமே,'' என, நோண்டினாள்.''ஆமா மித்து, சுகாதாரப்பிரிவு அதிகாரி ஒருத்தரு பேசுன வாய்ஸ் மெசேஜ், வாட்ஸ்ஆப்புல வந்துச்சு. ஸ்வச் சர்வேக்சன் செயலியில் கேக்குற கேள்விகளுக்கு, 10க்கு, 10ன்னு பதில் கொடுக்கணும்னு, உதவி கமிஷனர்களுக்கு, கார்ப்பரேஷன் கமிஷனர் அனுப்புன குறுஞ்செய்தியையும், 'ஸ்கிரீன் ஷாட்' எடுத்து, அனுப்பியிருந்தாங்க.''நாடு முழுக்க சென்ட்ரல் கவர்மென்ட் ஆய்வு செஞ்சிட்டு இருக்கு. ஸ்வச் சர்வேக்சன் செயலியில் பொதுமக்கள் கருத்து சொல்லணும். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த சர்வேல, பொதுமக்கள் கருத்து மோசமா இருந்ததுனால, எதிர்பார்த்த ரேங்க் கெடைக்கலை.''இந்த தடவை, அரசியல்வாதிகளை விட, மோசமா களமிறங்கி, காலேஜ் காலேஜா அதிகாரிங்க போயி, கல்லுாரி மாணவ - மாணவியரை, ஸ்மார்ட் போன் மூலமா ஓட்டுப்போடச் சொல்லி, 'டார்ச்சர்' செய்றாங்க. ஜி.சி.டி., கல்லுாரியில ஒரே நாள்ல, 1,417 பேரு ஓட்டு பதிவு செஞ்சிருக்காங்க. வனக்கல்லுாரியில, 177 பேரு, ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்துல நடந்த விழாவுல, 312 பேரு ஓட்டுப்போட்டிருக்காங்க,''''பணம் வாங்கிட்டு ஓட்டு போடாதீங்கன்னு விழிப்புணர்வு ஏற்படுத்துற அதிகாரிங்களே, இப்படி குறுக்கு வழியை கையாள்றாங்கன்னா, இவுங்க தலைமையில, உள்ளாட்சி தேர்தல் நடத்துனா, நேர்மையா நடக்கும்னு நம்பிக்கை இல்லையே,''''என்ன பண்றதுக்கா, ஒவ்வொரு அதிகாரியும் ஏதாவது ஒரு விஷயத்துல அடிமையாகிடுறாங்களே,'' என்ற மித்ரா, ''ஒவ்வொரு தள்ளுவண்டிக்காரங்களும், நானுாறு ரூபாய் கப்பம் கட்டணுமாமே,'' என, வம்புக்கு இழுத்தாள்.''ஆமாப்பா, சிட்ராவுல இருந்து காளப்பட்டி போற ரூட்டுல ஏகப்பட்ட தள்ளுவண்டி கடை இருக்கு. நைட் ரவுண்ட்ஸ் வர்ற போலீஸ் ஜீப், ரோட்டோரத்துல நிக்கும்; சீருடையில் ரெண்டு பேரு இருப்பாங்க; ஒவ்வொரு கடைக்காரங்களும், தெனமும், ரூபா கொடுக்கணும். இல்லேன்னா, கடை நடத்த விட மாட்டாங்களாம்,''''வயித்து பொழைப்புக்காக கடை நடத்துறவங்கள்ட்ட, வழிப்பறி செய்ற மாதிரி, இப்படி பணம் பறிக்கலாமா,'' என, நொந்து கொண்டாள் மித்ரா.''என்ன மித்து, இதுக்கே இப்படி அலுத்துக்கிறியே. நம்மூர் ரயில்வே ஸ்டேஷன்ல சுத்திக்கிட்டு இருந்த பிச்சைக்காரிகிட்ட, வட மாநிலத்தை சேர்ந்த ஆர்.பி.எப்., இன்ஸ்பெக்டரு, ரூ.10 ஆயிரத்தை சுருட்டிட்டாரு. அந்த பிச்சைக்காரி, ஸ்டேஷனுக்கு முன்னாடி நின்னு, திட்டித்தீர்த்து சாபம் விட்டுட்டுப் போச்சு. இந்த விஷயம் தலைமையகத்துக்கு போயிருக்கு; சேலம் கோட்டத்துல இருந்து வந்த அதிகாரிங்க, இன்ஸ்.,கிட்ட விசாரிச்சிட்டு போயிருக்காங்களாம்,''''இதெல்லாம் ஒரு பொழப்பா. ஆமா, கோவை ரூரல்ல ரெண்டு போலீஸ் இன்ஸ்., தனியார் அபார்ட்மென்ட்ல தங்குற கதை தெரியுமா... அடுத்தவாரம் விசாரிச்சு சொல்லு...'' என்றபடி, சமையலறைக்குள் நுழைந்தாள் மித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X