பொது செய்தி

தமிழ்நாடு

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: ஆணையம் இன்று ஆலோசனை

Updated : ஜன 28, 2020 | Added : ஜன 28, 2020
Share
Advertisement
நகர்புறம், உள்ளாட்சி தேர்தல்,ஆணையம் ன்று ஆலோசனை

சென்னை : நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், ஆணைய அதிகாரிகள், இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
தமிழகத்தில் ஊரகம், நகர்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, 27 மாவட்டங்களில் தேர்தல் முடிக்கப்பட்டு, ஊரக உள்ளாட்சி அமைப்புகள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.


latest tamil news


ஆனால், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை. சிறப்பு அதிகாரிகள் தலைமையில், நகர்புற உள்ளாட்சிகளை நிர்வகிக்கும் பணி தொடர்கிறது.இந்நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது. இது, மாநில தேர்தல் ஆணையத்திற்கு, நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகளை அழைத்து, ஆலோசனை நடத்த, ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள, மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில், இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

கூட்டத்தில், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, செயலர் சுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். ஏற்கனவே நடந்து முடிந்த, 27 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், பல்வேறு குளறுபடிகள் நடந்தன. அதுகுறித்தும், இன்றைய கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட உள்ளது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X