உள்ளடி வேலையில் கில்லாடி... குவாரிகளில் 'கல்லா' கட்டும் லேடி!

Updated : ஜன 28, 2020 | Added : ஜன 28, 2020 | |
Advertisement
'ரிபப்ளிக் டே சண்டேயில் வந்தா, டேக் இட் ஈஸி பாலிஸி' என பாடியவாறே, புத்தகங்களை அடுக்கி கொண்டிருந்தாள் மித்ரா.''என்னடி மித்து? பாட்டெல்லாம் பலமா இருக்கு''கேள்வி கேட்டவாறு, வந்தாள் சித்ரா.''அக்கா... வாட் எ சர்ப்ரைஸ்? என்ன திடீர்ன்னு?''வரவேற்ற மித்ரா, தண்ணீர் கொடுத்தவாறே, ''குடியரசு தினம்,சண்டேயில் வந்திடுச்சா. அதனால, லீவு போச்சுன்னு பாடிட்டி இருந்தேன்,''
 உள்ளடி வேலையில் கில்லாடி... குவாரிகளில் 'கல்லா' கட்டும் லேடி!

'ரிபப்ளிக் டே சண்டேயில் வந்தா, டேக் இட் ஈஸி பாலிஸி' என பாடியவாறே, புத்தகங்களை அடுக்கி கொண்டிருந்தாள் மித்ரா.
''என்னடி மித்து? பாட்டெல்லாம் பலமா இருக்கு''கேள்வி கேட்டவாறு, வந்தாள் சித்ரா.''அக்கா... வாட் எ சர்ப்ரைஸ்? என்ன திடீர்ன்னு?''வரவேற்ற மித்ரா, தண்ணீர் கொடுத்தவாறே, ''குடியரசு தினம்,சண்டேயில் வந்திடுச்சா. அதனால, லீவு போச்சுன்னு பாடிட்டி இருந்தேன்,'' என்றாள்.''அதுக்குத்தான் இன்னைக்கு 'மட்டம்' போட்டுட்டு சரி பண்ணிட்டீயே?''சொன்ன சித்ரா, ''சிக்கன் பிரியாணியா? வாசம் இப்படி மூக்கை துளைக்குது,''''ஆமாங்க்கா... நாங்க என்ன விருந்து கொடுக்கிறோம். அருள்புரம் மீட்டிங்கில், பட்டைய கிளப்பிட்டாங்க, தெரியுமா?''

''ஏதாவது, கட்சி கூட்டம் நடந்துதா?''''இல்லக்கா. இது, புதுசா பதவியேற்ற பஞ்சாயத்து தலைவர், துணை தலைவர்களுக்கு பயிற்சி கொடுத்தாங்க. அதில, சிக்கன் அப்புறம் காளான் பிரியாணி போட்டு அசத்திட்டாங்களாம். தலைவர்களோட வந்த சிலர், சிக்கன் பிரியாணியை பார்சல் பண்ணி எடுத்துட்டும் போய்ட்டாங்களாம்,''''இது எல்லாப்பக்கம் நடக்குறதுதானே.

ஆமா... இப்ப எதுக்கு 'உழவர் உற்பத்தியாளர் குழுவ அவசர அவசரமா ரெடி பண்ணியிருக்காங்க?'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.''அதுங்க்கா... ஒவ்வொரு உழவர் குழுவுக்கும், ஐந்து லட்சம் ரூபா மானியமா வந்திருக்குது. அத வாங்கறதுக்கு திட்டம் போட்டு, அவசர அவசரமா குழு அமைச்சிருக்காங்க. அதனாலதான், சத்தமே இல்லாம, கலெக்டர் ஆபீசுல கண்காட்சி, மீட்டிங் நடத்தி முடிச்சிட்டாங்களாம்,''''சில விவசாயிகள், ஒரு 'குயர்' நோட்ட வாங்கி, கூட்டம் நடந்த மாதிரி தீர்மானம் போட்டு, தேதியே இல்லாம எழுதிட்டு வந்திருந்தாங்க. அதிகாரிகளுக்கு எப்படியோ, 'டார்க்கெட்'டை தாண்டினா போதும்,'' விளக்கினாள் மித்ரா.

''அந்த அதிகாரி 'டார்கெட்' ஓகே., ஆச்சுன்னா... பரவாயில்லைன்னு சொல்றாங்க. ஆனா... இந்த லேடி ஆபீசர், எவ்ளோ கிடைச்சாலும், பத்தலைன்னு சொல்றாங்களாம்,''''அது யாருங்க்கா?'''சொல்றேன்... கொஞ்சம் பொறுமையா இருடி. கல்குவாரிகளை கவனிக்கிற அதிகாரி, ஓனர்களுக்கு வேண்டிய அனுமதிய கொடுத்துட்டு, 'செம கல்லா' கட்டிட்டு இருக்காராம். போன வாரம் கூட, ஊத்துக்குளிக்காரர் ஒருத்தரு, 'ஸ்கூட்டி' வாங்கி கொடுத்திருக்காரு,''''டாலர் சிட்டிக்கு வந்த பின்னாடி, 'காஸ்ட்லி' மொபைல் போன், 'ஸ்கூட்டி'னு, கலக்கிறாங்களாம். லேட்டஸ்ட்டா, பெரிய ஒரு ரூபாயில், பங்களா வாங்க பிளான் போட்டிருக்காங்களாம்,''''அடேங்கப்பா...'' என்ற மித்ராவிடம், '

'முழுசையும் கேளு, பணம் டீலிங்க் விஷயத்தில், வேற யாரையும் நம்பறதில்லையாம். ஆபீசுக்கு வந்ததும், வீட்டுக்கு போயி, கொடுத்திடுங்கனு சொல்லி, 'சிசிடிவி' காட்சிய 'மொபைல்' போனிலேயே பார்த்திட்டு 'வெரிபை' பண்ணிக்கிறாராம்,''சித்ரா கூறி முடித்தாள்.அப்போது, மித்ராவின் மொபைல்போன் ஒலிக்கவே, டிஸ்பிளேயில், 'கவிதா ஆன்ட்டி' என்று வந்தது. ''ஹாய்.. ஆன்ட்டி எப்டி இருக்கீங்க....'' என இரண்டு நிமிடம் பேசி விட்டு அணைத்தாள்.மித்ராவின் அம்மா கொடுத்த டீயை குடித்த சித்ரா, ''கவர்மென்ட் எம்ப்ளாயீஸ் போராட்டத்துக்கு ரெடியாயிட்டாங்களாம், தெரியுமா?''என்றாள்''உண்மைதாங்க்கா, எப்ப பார்த்தாலும், விடுமுறை நாளில் ஆய்வு கூட்டம் நடத்தறதே, மாவட்ட அமைச்சருக்கு வேலையா போச்சுனு புலம்பறாங்க,''''கடந்த வாரம், 11:00 மணிக்கு மீட்டிங்னு சொல்லிட்டு, மத்தியானம், 1:15 மணிக்கு வந்தாராம். டீ கூட குடிக்காம காத்திருந்த அலுவலர்கள் மயக்கம் போடற 'ஸ்டேஜ்'ஜூக்கு போயிட்டாங்க. நாலு மணி நேரம், லேட்டா வந்த அமைச்சர் மட்டும், டி.பி.,க்கு போய், சாப்பிட்டுட்டு, சாவகாசமா மீட்டிங்க்கு வந்திருக்காரு,

''''இதுகூட பரவாயில்லையாம். நகர்ப்புற எலக்ஷனுக்காக, இந்தந்த வேலைகளை செஞ்சாகணும்னு, எம்.எல்.ஏ.,கள் 'கன்டிஷன்' போட்டதும், ஆபீசர்களுக்கு 'பிரஷர்' தலைக்கு ஏறிடுச்சு. இதுக்காகத்தான், 'டிஸ்ட்ரிக்ட்' லெவலில் ஒரு போராட்டம் நடத்த ஏற்பாடு பண்ணிட்டாங்களாம்,''''அப்ப... மாவட்ட நிர்வாகத்துக்கு தலைவலிதான்னு சொல்லு. ஆனா, அதேசமயம் சில ஆபீசர்களின் அலட்சியத்தால, அப்பாவி பெண் ஒருத்தர் பாதிக்கப்பட்டிருக்காரு. இதுக்கு என்ன சொல்லப்போறாங்க?

''''ஏங்க்கா.. யாருங்க, என்னாச்சு?''ஆர்வத்துடன் கேட்டாள் மித்ரா.'பல்லடத்துக்கு பக்கத்தில, பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு, ஒன்றரை லட்சம் ரூபாய், நிவாரணம் வழங்க உத்தரவு வந்தது. கலெக்டர் ஆபீசில், உள்ள சம்பந்தப்பட்ட துறையில் உள்ள அதிகாரி ஒருவரின் அலட்சியத்தால், அந்தப்பணம் குஜராத்தில் உள்ள நபரின் அக்கவுன்ட்டுக்ககு போயிடுச்சாம்,''''அச்சச்சோ... என்னங்க்கா கொடுமையிது''''ஆறு மாசமாகியும், பணத்தை இன்னும் மீட்க முடியலையாம். இப்பதான், போலீசில் புகார் கொடுத்து இருக்காங்க. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆபீசர்கிட்ட யாரும் பேச முடியாதாம்.

போனில் கூப்பிட்டாலும், 'நோ ரெஸ்பான்ஸ்'தானாம்,''''இப்படி மக்கள்கிட்ட விலகி இருக்கிற ஆபீசரை, கலெக்டரும் ஏன்னு கேட்கிறதில்லைன்னு, மத்தவங்க 'ஓபனா' பேசுறாங்களாம்,''என்ற சித்ரா, ''மித்து, இந்த சேகர் வந்தாருன்னா, பணம் என்னாச்சுன்னு, அம்மாவை விட்டு மறக்காம கேக்க சொல்லுடி,''''ஓ.கே.,ங்க்கா''என்ற மித்ரா, ''சவுத் ஸ்டேஷனில், எந்த பிரச்னைக்கு போனாலும், 'கவனிச்சா'தான் வேலை பார்க்கிறாங்கன்னு, புகார் மேல புகாராம்,'' என, புகார் வாசித்தாள்.''ஆமா, மித்து. நானும் கேள்விப்பட்டேன். இது என்ன மேட்டர்?''
'' ரெண்டு நாளைக்கு முன்னாடி, நம்ம தெருவுக்கு பக்கத்தில ஒருத்தர் 'சூைஸட்' பண்ணிட்டாரு, போஸ்ட்மார்டம்... மத்த பார்மாலிட்டீஸ்க்கு, 5 ஆயிரம் வாங்கிட்டாங்களாம். ஏற்கனவே, அவர் இறந்த துக்கத்தில இருக்கிற பேமிலிகிட்ட, பணத்தை வாங்கறது கொஞ்சம் ஓவரா இல்லே,''''இதை விட கொடுமை என்னன்னா... துக்கத்தில இருக்கிறவங்கிட்ட, 'சாப்பாடு வாங்கிட்டு... ஏ4 பேப்பர் பண்டல் வாங்கிட்டு வா,'ன்னு ஒரே நச்சு பண்றாங்களாம். கொஞ்சங்கூட மனிதாபிமானம் இல்லாம, இப்படி 'ஆனந்தமா' கை நீட்டி வாங்கறாங்களேன்னு, பொலம்பாத ஆட்களே இல்லை,''''மித்து நீ சொன்னது நுாறு சதவீதம் உண்மை.
நீ சொன்ன உடனே எனக்கு ஒன்னும் ஞாபகம் வருது,'' என்றாள் சித்ரா.''ஏன்தான் இப்படி பண்றாங்களோ? இதே மாதிரி்ங்க்கா, சவுத் ரேஞ்சில், நாலு நாளைக்கு முன்னாடி, நடுராத்திரி, ரோந்து போன போலீஸ் மீது, சரக்கு ஆட்டோ மோதற மாதிரி வந்த விஷயத்தை, சிலர் மூடி மறைச்சிட்டாங்க. அதிலயும், 'நவீன'அதிகாரிக்கு தெரியாம கூட அமுக்கிட்டாங்களாம்,''''ஆமா மித்து, இந்த மாதிரி உள்ளடி வேலைகளில், அவங்க கில்லாடிதாங்க்கா,''என்ற சித்ரா, ''தாராபுரம் கதை தெரியுமா?'' கேள்வி கேட்டாள்.''தெரியாதுங்களே...''''தாராபுரத்தில் 'கரன்ட் பேப்பரை' முறையாக விசாரிக்கிறது கிடையாதாம். 'பசை'யுள்ள பார்ட்டின்னா, அந்த அதிகாரி 'கறந்துட்டு'த்தான் விடுவாராம். சமீபத்தில்கூட, கொடுக்கல் வாங்கல் பிரச்னையில், எப்.ஐ.ஆர்., போட்டிடுவேன்னு மிரட்டியே, 5 லகரத்தை லவட்டிட்டாராம்,''''அந்த அதிகாரிக்கு, பொருள் ஆட்சி செய்யும் ஊர்க்காரரின் பரிபூரண ஆசி இருக்கிறதால, 'எல்லாம் ஜெயமே'ன்னு, சும்மா பூந்து வெளையாடறார். இதுல என்ன 'இன்ட்ரஸ்டிங் மேட்டர்'ன்னா, ரெண்டு பேரோட பேரும் ஒண்ணுதான்,''''அக்கா.... சூப்பரா சொன்னீங்க,'' என்ற மித்ரா,

''குடியரசு தினவிழாவில், ஒரு சிலருக்கு மட்டுமே சர்டிபிகேட் கொடுத்தாங்களாம். இதனால, மத்த ஆபீசரெல்லாம், 'செம அப்செட்'டாம்,''என, அடுத்த விஷயத்தை சொன்னாள்.''இது எந்த ஆபீசில்?''''கார்ப்ரேஷன் ஆபீசில், சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு குடியரசு தினவிழாவில், சர்டிபிகேட் கொடுத்தாங்க. வாங்கி, 28 பேருமே, சுகாதார பிரிவை சேர்ந்தவங்கதான். அப்படின்னா, மற்ற துறையில் ஒருத்தர்கூட இல்லையான்னு புகைச்சல் ஆரம்பிச்சிருச்சாம்,''''இனி, இதில என்ன உள்குத்து இருக்குதுன்னு தெரியலே. பார்க்கலாம்,'' என்ற சித்ரா, ''ஓ.கே.,ம்மா, நான் கெளம்பறேன், இப்பவே குளிருது,'' என்றவாறு, வண்டியை நோக்கி போனாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X