'ஹைட்ரோ கார்பன்' திட்டங்களுக்கு தடை கோரி மனு

Updated : ஜன 28, 2020 | Added : ஜன 28, 2020 | கருத்துகள் (5)
Advertisement

புதுடில்லி: காவிரி டெல்டா பகுதியில், 'ஹைட்ரோ கார்பன்' திட்டங்களுக்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதிக்கு தடை விதிக்கக் கோரி, காவிரி விவசாயிகள் சங்கம், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.


காவிரி டெல்டா பகுதியில், 'ஹைட்ரோ கார்பன்' எனப்படும், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி திட்டங்களுக்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து, காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம், ஜன.,16ல், காவிரி டெல்டா பகுதியில், அனைத்து வகை எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்தவகையில், 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 341க்கும் மேற்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கான ஆய்வுக் கிணறுகள் தோண்ட ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

இத்திட்டங்களை துவக்கு முன், பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும்; மாநில அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், இந்த நடைமுறை எதையும் பின்பற்றாமல், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது. இது சட்ட விரோதமானது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரானது.

இது, அப்பகுதியில் வாழும் ஏராளமான விவசாயிகள் மற்றும் இதர பகுதி மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையும், சுதந்திரத்தையும் பாதிக்கும். எனவே, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
28-ஜன-202009:55:52 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா ஆத்துமணல் அள்ள தடை கேட்க வக்கில்லை ஆனா ஹைட்ரோகார்பன் தடை கேட்கும் இவர்கள் விவசாயிகள் அல்லர். விவசாயி போர்வையில் இருக்கும் இவர்கள் ஓசி தண்ணீல ஓசி கரன்ட்ல விவசாயம் பண்ணி சம்பாதிச்சு, வாங்குன கடனை தள்ளுபடி செஞ்சி, எல்லா அக்கிரமம் பண்ணுவாங்க....ஆனா இவனுங்க கார்ல போட்டு வெட்டியா சுத்துற டீசல் மட்டும் எடுக்கக்கூடாதாம். இதை மாட்டு வண்டில போய், காளையை வச்சு ஏர் பூட்டி விவசாயி சொன்ன கேட்கலாம்.
Rate this:
Share this comment
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
28-ஜன-202018:41:14 IST Report Abuse
Palanisamy Tகாவிரி டெல்டா பகுதியில், 'ஹைட்ரோ கார்பன்' திட்டங்களுக்கு மத்திய அரசு அளித்துள்ள அனுமதிக்கு தடை விதிக்கக் கோரி, மனு தாக்கல் செய்துள்ளது. அவர்களின் வாழ்வாதார உரிமை. விவசாயம் குறிப்பாக இந்த காவிரி டெல்டா பகுதியில் விவசாயமென்பது ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்வாதாரம் தமிழகத்தின் உயிர் நாடி மனுவில் மத்திய அரசின் தவரைச் சுட்டிக் காட்டியுள்ளார்கள். நாம் உண்ணும் நெல் உள்பட அனைத்து தானிய காய்கறி உணவு வகைகளையெல்லாம் நீர்ப் பற்றாக குறையோடு சுட்டெரிக்கும் வெயிலில் உழல்ந்து அந்த வறுமையான நிலையிலும் உற்பத்திச் செய்வதும் அவர்கள்தான். அவர்களுக்கு நன்றிக் கடன் போடாவிட்டாலும் ஏற்றுக்கொள்ளலாம். எதையும் நன்குப் சிந்திக்காமல் அரைகுறையாக படித்த நாம் அவர்களை குறைந்த பட்சம் சாடாமலிருப்பது நன்று. இந்த 'ஹைட்ரோ கார்பன்' திட்டத்தின் மூலம் இந்தப் பசுமையான காவிரி டெல்டாப் பகுதி பாலைவனமாக மாறுவதை நீங்கள் ஏற்கின்றீர்களா?...
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
28-ஜன-202007:09:26 IST Report Abuse
mindum vasantham Godavari padukai ,mhanadi padukai pondra idangalilum edukka padukirathu ange nammai kattilum vivasaayi athikam seikindranar,Inge velaikku thaan aal kidaipathillai matrum neyveliyil nilakari eduppathaal ange vivasaayi alinthu vittathaa,innamum ange muntiri thottangal athikam
Rate this:
Share this comment
Cancel
Aaaaa - Bbbbbb,இந்தியா
28-ஜன-202006:54:54 IST Report Abuse
Aaaaa மீதேன் ஹைட்ரோகார்பன் இல்லையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X