இன்ஜி., மாணவர்கள் மூலம் நகரங்களை தகர்க்க அல் - உம்மா சதி

Updated : ஜன 28, 2020 | Added : ஜன 28, 2020 | கருத்துகள் (98)
Advertisement
AlUmmah,terrorist_organisation,engineering_students,அல்உம்மா

இந்த செய்தியை கேட்க

பெங்களூரு: பொறியியல் மாணவர்கள் மூலம், பெங்களூரு உட்பட, தென் மாநிலங்களின் முக்கிய நகரங்களை தகர்க்க, பெங்களூரு சி.சி.பி., போலீஸ் பிடியில் உள்ள அல் - உம்மா பயங்கரவாதி மெகபூப் பாஷா, பயங்கரவாத பயிற்சி அளித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பயங்கரவாத செயல்கள் மூலம், தென் மாநிலங்களை தகர்க்க, அல் - உம்மா பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியதாக, மத்திய உளவுத்துறை எச்சரித்திருந்தது. பெங்களூரில் பதுங்கியிருந்த ஹனிப்கான், இம்ரான்கான், முகமது சையது ஆகிய மூன்று பயங்கரவாதிகளை, சி.சி.பி., போலீசார், மூன்று வாரங்களுக்கு முன் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவல்படி, கர்நாடக மாநிலத்தின், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த, அல் - உம்மா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மெகபூப் பாஷா, அவர் தங்குவதற்கு இடமளித்த மதகுரு சதாகத் உல்லாகான் ஆகிய இருவரும், 11ம் தேதி, கைது செய்யப்பட்டனர்.

இதில், மெகபூப் பாஷாவிடம், பெங்களூரு சி.சி.பி., போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு, சுத்தகுண்டேபாளையாவில் தங்கியிருந்து, சிறுபான்மை பொறியியல் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பயங்கரவாத பயிற்சி அளித்து, பெங்களூரு நகரை தகர்க்க சதி திட்டம் தீட்டியது, விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், தென் மாநிலங்களின் முக்கிய நகரங்களில் தங்கள் பயங்கரவாத அமைப்புகளை விரிவுப்படுத்தி, அங்குள்ள பகுதிகளில் பயங்கரவாத செயல்கள் நடத்த திட்டமிட்டிருந்ததும் அம்பலமாகியுள்ளது.

இதற்காக, மெகபூப் பாஷா, பெங்களூரு புறநகர் மற்றும் குடகு மாவட்டத்தின் மடிகேரி வனப்பகுதிகளில் பயிற்சி அளித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் பயங்கரவாத பயிற்சி பெற்றவர்களை, சி.சி.பி., போலீசார் தேடி வருகின்றனர். நாளுக்கு நாள் அதிர்ச்சி தகவல் வெளி வந்து கொண்டே இருப்பதால், தேசிய புலனாய்வு படையினர், மெகபூப் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகளை விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (98)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
29-ஜன-202001:31:46 IST Report Abuse
Aarkay மாணவர்களே இந்த தாடி கோஷ்டிகளின் போதை மருந்து, மூளைச்சலவை முயற்சிகளில் சிக்கி உங்கள் வாழ்க்கையையும், குடும்பத்தையும் தொலைத்து விடாதீர்கள்
Rate this:
Share this comment
Cancel
Dr.T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
28-ஜன-202021:55:38 IST Report Abuse
Dr.T.Senthilsigamani இன்ஜி., மாணவர்கள் மூலம் நகரங்களை தகர்க்க அல் - உம்மா சதி.திடுக்கிடும் செய்தி .மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு இந்த இயக்கங்களின் செயல்களை ஒடுக்க வேண்டும்.ஒரு வாதத்திற்கு ,ஒரு உதாரணத்திற்கு ஒரு எடுத்துக்காட்டிற்கு,ஒரு உவமைக்கு ஒரு கற்பனைக்கு ,ஒரு புனைவுக்கு இந்த செய்தி இப்படியாக பிரசுரமானால் இன்ஜி., மாணவர்கள் மூலம் நகரங்களை தகர்க்க ஆர் எஸ் எஸ் சதி.ஆம் - குண்டுகள் வைக்க ஆர் எஸ் எஸ் சதி என பிரசுரமானால் - என்னவாயிருந்திருக்கும் ? நினைத்து கூட பார்க்க முடியவில்லை.தமிழக போலிமதச்சார்பின்மை கட்சி தலைவர்கள் ஸ்டாலின் ,வைகோ ,திருமா ,சீமான் ,மெய்யம் தலைவர் ,கருப்பு தாலிபான் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ,கருப்பு தாலிபான் திக திராவிட கும்பல்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் உடனே பொங்கி எழுந்திருப்பார்கள்.காவி தீவிரவாதம் ஒழிக ஒழிக ,ஹிந்து தீவிரவாதம் ஒழிக ஒழிக,ஆரிய தீவிரவாதம் ஒழிக ஒழிக சங்பரிவார் தீவிரவாதம் ஒழிக ஒழிக மற்றும் ஆர் எஸ் எஸ் தீவிரவாதம் ஒழிக ஒழிக என கோஷங்களை எழுப்பி தமிழக மாநிலம் எங்கும் கண்டன ஊர்வலங்கள் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்களை தொடர்ச்சியாக நடத்தியிருப்பார்கள் .ஹிந்து தீவிரவாதம் பெரியார் என்ற சொரியார் பிறந்த மண்ணில் வேர் விட அனுமதிக்கமுடியாது என்று டிவியில் விவாதங்கள் தூள் பரந்திருக்கும்.மேலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஹிந்து சனா தன தர்மம்/ஹிந்து மனு சாஸ்திரம் தான் இத்தகைய காவி தீவிரவாதத்திற்கு காரணம் என கூறி வழக்கம் போல அயோத்தி ராமர் கொடும்பாவிகளை திகவினர் பெருமளவில் எரித்திருப்பார்கள். ஹிந்து மதத்தை தடை செய்ய சொல்லி கோஷங்கள் எழுப்பியிருப்பார்கள் .மொத்தத்தில் இந்தியாவில் தமிழகம் தான் ஹிந்து தீவிரவாத்திற்கு எதிரான சங்குல மற்றும் துவந்த யுத்த முறைகளில் முன்னின்று செயல்படுவதாக திராவிட பரணிகள் பாடி புளகாங்கிதம் அடைந்திருப்பார்கள் - இந்த ஸ்டாலின் முதலிய போலி மதச்சார்பின்மை தலைவர்கள் .ஆனால் நடந்தது என்ன இன்ஜி., மாணவர்கள் மூலம் நகரங்களை தகர்க்க அல் - உம்மா சதி என்பதனால் முஸ்லீம் தீவிரவாதம் குறித்து பேசவே மாட்டார்கள்.இது தான் கடைந்தெடுக்கப்பட்ட போலிமதச்சார்பின்மை வாதம்.முஸ்லீம் தீவிரவாதிகள் என்பதால் மதம் வேறு /தீவிரவாதம் வேறு என பேசி அரசை தான் குறை கூறுவார்கள் இந்த ஸ்டாலின் முதலிய போலிமதச்சார்பின்மை தலைவர்கள் ஹிந்து விரோத திமுகவை இன்னமும் மக்கள் நம்பும்வரை இத்தகைய கேலிக்கூத்துக்கள் தமிழகத்தில் தொடரத்தான் செய்யும்.இன்று வரை முஸ்லீம் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட கும்பகோணம் ராமலிங்கம் ,கோவை சசிகுமார் ஆகியோர் கொலைகளை கண்டிக்காதவர்கள் தான் இந்த போலி மதச்சார்பின்மை தலைவர்கள் .தமிழகத்தின் சாபக்கேடு இது .ஆம் தமிழகத்தின் சாபக்கேடு இது
Rate this:
Share this comment
Cancel
தமிழ் தென்றல் - சென்னை,இந்தியா
28-ஜன-202021:38:39 IST Report Abuse
தமிழ் தென்றல் சிறுபான்மை இட ஒதுக்கீடுன்னு இவர்களுக்கு இலவசமா அனய்த்தும் கிடாய்ப்பதால் இவர்கள் உழைக்க மறந்து இலவசமா பண சம்பாதிக்க இதுபோன்ற தீவிரவாத செயல்களுக்கு துணைபோகின்றனர். இலவசத்தையும் இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்யவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X